ஈழத்தமிழரை அழித்த இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்த்த கருணாநிதி! “இன்றைக்கு நமக்குத் தேவை, பாவேந்தரின் பாடல்கள்.... அவைதான், தமிழரின் தேசிய கீதம்!” பாவேந்தர் விழாவில் வைகோ

விவகாரங்கள்: மனித உரிமை, இலங்கைத் தமிழர்

மாவட்டம்: சென்னை - வடக்கு, தமிழ்நாடு

செய்தித்துறை: சொற்பொழிவுகள்

Date: 
Sun, 23/05/2010

ஈழத்தமிழரை அழித்த இந்திய அரசுக்குக்
கங்காணி வேலை பார்த்த கருணாநிதி!

“இன்றைக்கு நமக்குத் தேவை,
பாவேந்தரின் பாடல்கள்....
அவைதான், தமிழரின் தேசிய கீதம்!”

பாவேந்தர் விழாவில் வைகோ

 

அலைமா கடல் நிலம் வானில் உன்
அணி மாளிகை ரதமே
அவை ஏறிடும் விதமே
உனது அதிகாரம் நிறுவுவாய்
கொலை வாளினை எடடா
மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் புலியே மிகு
குணமேவிய தமிழா!


என்ற புரட்சி கீதத்தை இசைத்து, மான உணர்ச்சியைத் தமிழர்களின் இதயத்தில் விதைத்த, அழியாப்புகழ் படைத்த புரட்சிக்கவிஞன் பாவேந்தருக்கு, ஏற்றமிகு விழாவை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கிய அணியின் சார்பில் நடத்திக் கொண்டு இருக்கின்ற, இலக்கிய அணியின் செயலாளர், ஆருயிர்ச் சகோதரர் கவிஞர் கோமகன் அவர்களுக்கும், அவருக்குத் துணையாக நின்று விழா சிறப்பாக நடைபெற்றிட ஒத்துழைப்பு நல்கிய இலக்கிய அணியின் நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மாலை 3.30 மணிக்கெல்லாம் கருத்தரங்கத்தைத் தொடங்கி, தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெற்று, இப்போது வாழ்த்து அரங்கத்தில் உங்களிடையே பேசுகின்ற வாய்ப்பைப் பெற்று இருக்கிறேன். தன்னலம் துளியும் கருதாது, இயக்கத்துக்காகத் தங்களை அர்ப்பணித்துப் பாடுபடுகின்ற தோழர்கள் இங்கே திரண்டு இருக்கிறார்கள்.


எரிமலையாக வெடித்த அறிவாசானா? குளிர் பூம்புனலாகத் தமிழருக்கு வாய்த்த பேரறிஞர் அண்ணாவா? உலகத்தைத் திடுக்கிட வைத்த தம்பி பிரபாகரனா? என்ற விவாத மேடையை, தமிழகப் பொதுவாழ்வுக் களத்தில் புரட்சி மணம் பரப்புகின்ற மன்றமாக இந்தப் பட்டி மன்றமாக அமைத்து, அனைவரும் ஏற்கத்தக்க நல்லதோர் தீர்ப்பையும் உணர்ச்சி பொங்க வழங்கி இருக்கின்றார், நமது கொள்கை விளக்க அணிச் செயலாளர், மறுமலர்ச்சி ஏவுகணை எனது ஆருயிர் இளவல் நாஞ்சில் சம்பத்.


பாங்குடன் நடந்த பட்டிமன்றத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற நந்தவனத்தில் பூக்கின்ற மலர்களைப் போல, வேறு எந்தத் தோட்ட த்திலும் இல்லை; இந்தப் பாசறையில் உள்ள கூர்மையான ஆயுதங்களைப் போல வேறு எந்த இயக்கத்திலும் இல்லை; எங்கள் சொற்பொழிவாளர் களுக்கு ஈடு சொல்லக்கூடிய சொற்பொழி வாளர்கள் வேறு எங்கும் இல்லை என்று, நானும், கழகத்தின் கண்மணிகளும் பெருமிதம் கொள்ளத்தக்க வகையிலே மேடைகளில் முழங்கி வருகின்ற முன்னணிச் சொற்பொழிவாளர்கள் எல்லாம் கருத்து மழை பொழிந்தார்கள். சிறந்த சிந்தனையாளர்களை இந்த இயக்கத்திலே நாம் பெற்று இருக்கிறோம்.


நம்முடைய அரசியல் ஆய்வு மையச் செயலாளர் செந்திலதிபன், இளைஞர் அணிச் செயலாளர் அழகுசுந்தரம், புதிதாக அரங்கேற்றம் செய்து வருகின்ற கவிஞர் தமிழ்வென்றி (எ) இராசா முகமது, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து, பகுத்தறிவுக் கருத்துகளைப் பாணங்களாகத் தொடுக்கின்ற மது மயிலாடுதுறை அழகிரி, ஆவடியில் தயாராகின்ற டேங்குகள் பழுது பட்டாலும், நம்முடைய அந்தரிதா
ஸ் தொடுக்கின்ற ஆயுதங்கள் பழுதுபடுவது இல்லை என்று நான் பெருமைப் படத்தக்க வகையில் கருத்துகளை எடுத்து வைக்கின்ற ஆவடி அந்தரிதாஸ் , இனிய தமிழும், ஏற்றமிகு சிந்தனையும் கலந்து நிரவித் தந்த மணவை தமிழ் மாணிக்கம் எல்லோருமே அற்புதமாக வாதங்களை எடுத்து வைத்தார்கள்.


‘ஏ தாழ்ந்த தமிழ்நாடே’ என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா முழங்கினார். ‘புரட்சிக் கவிகளைப் போற்று, உயிர்க் கவிகளைப் போற்று’ என்று அறைகூவல் விடுத்தார்.


40 களிலே அவர் ஆற்றிய உரைகள், வெள்ளை அரசாங்கம் நடைபெற்ற காலத்திலேயே சனாதனிகளுக்குப் பெரும் அச்சத்தைத் தந்து கொண்டு இரு ந்த காலகட்டத்தில், எந்தப் பல்கலைக் கழகத்துக்கு அவரை அழைத்து உரை ஆற்றுகின்ற வாய்ப்பைத் தந்தார்களோ, எந்தப் பல்கலைக்கழகத்தில் 45 இல் கே.ஏ.மதியழகன் தலைமையில், ‘நிலை யும் நினைப்பும்’ என்ற தலைப்பில் உரை ஆற்றினாரோ, எந்தப் பல்கலைக் கழகத்தில் ஆற்றோரங்களில் மலர்ந்த நாகரிகங்களை விவரித்தாரோ, அந்தப் பல்கலைக்கழகத்தைத் தந்த அண்ணா மலை அரசர், தமிழ் இசைக்குப் புகழ் மகுடம் சூட்டிய அந்தப் பெருமகனாரின் பெயரால் அமைந்த மன்றத்தில் பேசுகிறேன்.


இங்கே ஒருமுறை பேசியதற்காகவே ராஜத்துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, வழக்கு மன்றத்திலே நிறுத்தப்பட்ட இவனுக்கு மீண்டும் எப்படி இந்த மன்றத்தில் பேச அனுமதி கொடுக்கப்பட்டது என்று காவல்துறையின் உளவுப் பிரிவினர் தொல்லைகள் கொடுத்தும் கூட, மீண்டும் இந்த மன்றத்தை எங்கள் அமைப்பின் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி தந்த, தாளாத் தமிழ் உணர்ச்சி கொண்ட, இந்த அண்ணாமலை மன்றத்தின் நிர்வாகிகளுக்கு, என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்).


1938 ஆம் ஆண்டு, புரட்சிக்கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பை, குத்துhசி குருசாமி அவர்களின் துணைவியார், அம்மையார் குஞ்சிதம் குருசாமி அவர் கள் முயற்சி எடுத்து வெளியிட்டார்களே, அந்த விழாவில், பேரறிஞர் அண்ணா பேசினார். ‘முகில் கிழித்து வெளி வரு கின்ற முழுமதியைப் போல, புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகள், தமிழருக்குக் கிடைத்து இருக்கிறது. இது நமக்குக் காலப் பெட்டகம், வரலாற்றுக் கருவூலம். தமிழர்களின் எழுச்சிக்குத் தேவையான சிந்தனை ஊற்று’ என்று குறிப்பிட்டார்.


அதே அண்ணா அவர்கள், இதே சென்னை மாநகரில், சைனா பஜார் என்று அழைக்கப்பட்ட பகுதியில், பச்சையப்பன் அரங்கத்தில், 1946 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 28 ஆம் நாள், பொற்கிழி வழங்கு கின்ற குழுவுக்குப் பொருளாளராக இருந்து நிகழ்ச்சியிலே கலந்து கொண்டார். அந்தக் குழுவின் தலைவர், கிருஷ்ணராஜ். செயலாளர், டி.என். இராமன். அந்த விழாவில் அக்கிர ஹாரத்து அதிசய மனிதர் என்று போற்றப் பட்ட வ.ரா., தலைசிறந்த சிந்தனையாளர் எழுத்தாளர் டாக்டர் மு.வ., முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பொது உடைமைப் புரட்சிப் பூபாளமாக, தமிழ் உணர்வோடு வெடித்துக் கொண்டு இருந்த தோழர் ஜீவா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல பெருமக்கள் கலந்து கொண்டார்கள்.

25,000 ரூபாய் பண முடிப்பு வழங்கப்பட்டது பாவேந்தருக்கு. அது அந்தக் காலகட்டத்தில் பெருந் தொகை.


அந்த விழாவில் பேசுகிறபோது, அண்ணா அவர்கள் சொன்னார்கள்: நமக்கு ஒரு வால்டேர் கிடைத்து விட்டார். நமக்கு ஒரு கவிஞர் கிடைத்து விட்டார். நமக்காகச் சிந்திக்கிறார், நமக்காக வாழ்கிறார், நமக்காக உழைக் கிறார். நாம் வாழ வழி அமைக்கிறார். அவர் வாழ்க, அவரது திறமை ஓங்குக, அவர் வெல்க. அவரது வெற்றியினால், நாம் வெற்றி பெறுக. இதோ, இந்தத் தமிழகமே அவருக்குப் பாராட்டுத் தெரிவித்து மகிழ்கிறது என்பதற்கு அடையாளம் தான், இந்தப் பொற்குவை வழங்குகின்ற நிகழ்ச்சி. இதில் இருக்கின்ற பொற்காசுகள் ஒவ்வொன்றும், பாரதி தாசனைப் பற்றி மணிக்கணக்கிலே பேசும். அப்படிப் பேசினால், அந்தச் சத்தம், பாவேந்தரின் செவியிலே புகாது.


ஏனெனில், ஆலையின் சங்கொலி; சுன்னம் இடிக்கின்ற சுந்தரியின் ஏக்கப் பெருமூச்சு; பாட்டாளியின் குமுறல்; பணம் எனும் கொடி கட்டிய படகு என் வீட்டு வாசலுக்கு வருமா? என்னைக் கரை சேர்க்குமா? என்று ஏங்குகின்ற ஏழையின் ஏக்க மொழி, அழகும், இளமையும் பொங்கித் ததும்புகின்ற

இளமங்கை; குறட்டை விட்டுத் தூங்கு கின்ற கிழ மணாளனைக் கண்டு கதறு கின்ற துன்ப ஒலி, இவைதான், பாரதிதாச னின் செவிகளிலே புகும்.

அதன் விளை வாக, அவரது கண்களில் இருந்து அன லும், புனலும் எழும். இந்தக் கொடுமை களை ஒழித்துக் கட்டுவோம் என முழங்கு வார். அந்த முழக்கமே தமிழர்களின் சொத்து, அவர் வாழ்க! என்று பேசினார்.


அதற்கு அடுத்து வருகின்ற ஆகஸ்
ட் மாத ‘திராவிட நாடு’ இதழில், பொருளாளர் என்ற முறையில், அந்த விழாவுக்காக வரவு-செலவு விவரங்கள் அனைத் தையும் போட்டு, என்.வி. நடராசன் மூலம் என்ன செலவு ஆயிற்று, மேடைச் செலவு, போஸ்டர், ஸ்டாம்ப், போக்கு வரத்து வழிச் செலவு, ஓவியர்களுக்குக் கொடுத்த தொகை, போர்டு வரைந்த கூலி, என்று ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்குக் காட்டி இருந்தார்.


புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை அண்ணா போற்றினார். அந்தச் செய்தியை, இந்த விழாவிலே பதிய வைக்க வேண்டும் என்பதற்காக, உங்களிடம் சொல்லு கிறேன். தமிழகத்தில் தமிழ் உணர்ச்சி எழுவதற்கும், தழைத்து ஓங்குவதற்கும் அடிப்படையாக இருந்தது, பாவேந்தரின் பாடல்கள். எந்த மேடையிலும், அவரது பாடல்கள் ஒலித்தன. அந்தக் காலகட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேடைகளில் பேசுகின்ற பேச்சாளர்கள், ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் இயக்கம் தொடங்கியதைச் சொல்லி, திராவிட இயக்கத்துக்காக இரத்தம் சிந்திய தியாகிகளின் பெயர்களைப் பட்டியல் இட்டுத்தான் அடுத்த கட்டப் பேச்சுக்கு வருவார்கள். இயக்கத்தின் இலட்சி யங்களை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக,


குறிக்கும் உன் இளைஞர்
கூட்டம் எங்கே?
மரிக்கொணாக் கடல் போல்
மாப்பகை மேல் விடு.
என, புரட்சிக்கவிஞரின் பாடல் வரிக ளைத்தான் மக்களிடம் சொல்லுவார்கள். நாவலர் நெடுஞ்செழியன் எந்த மேடையில் பேசினாலும், தமது பேச்சின் முடிவில்,
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும்,
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு;
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்கு உள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே
சிங்களஞ் சேர் தீராதி தீரர்
என்று....சங்கே முழங்கு’


என்று சொல்லி முடிப்பார்.


கிறித்தவர்களுக்குப் பைபிள் வரிகள் போல, தொழுகைக்குச் செல்லும் இ
ஸ்லா மியர்களுக்கு, திருக் குர் ஆன் வரிகள் போல, சைவ சமயத்தாருக்கு தேவாரப் பதிகங் கள் போல, திருவாசகத்தைப் போல, திராவிட இயக்கத்தாருக்குப் பாவேந் தரின் பாடல்கள் திகழ்கின்றன. ஒரு நம்பிக்கையை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக, அதைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அந்த நம்பிக்கைக்கு அழுத்தத்தைத் தருகிறது. அதை, கூறியது கூறல் என்று சொல்ல முடியாது. நாவலர் அப்படித்தான் பாவேந் தரின் பாடல் வரிகளை முன்னிறுத் தினார். பாவேந்தரின் பாடல்கள்தாம், தமிழருக்குத் தேசிய கீதம். அதுவும் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவைப்படுகிறது.


கடந்த ஆண்டு, இதே மே 11 ஆம் நாள், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவுக் கூட்டத்தில், சிவகாசியில் நான் பேசினேன். அன்றைக்கு நான், ஓட்டுக் கேட்டு அதிக நேரம் பேசவில்லை. எல்லோரும் வருத்தப்பட்டார்கள். நான் சொன்னேன்: அடுத்த நான்கு நாள்களுக் குள், ஒரு பேரழிவு ஈழத்துத் தமிழ் மக்களை வளைக்கப் போகிறது. இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட இருக்கிறார்கள். சின்னஞ்சிறு பிஞ்சுகள் உள்பட, நம் தமிழ் இனமே சாகடிக்கப்பட இருக்கிறது. 16 ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே, முற்றிலு மாகத் தமிழர்களை அழித்துவிடத் திட்டம் போட்டு விட்டான் சிங்களவன். ராஜபக்சேவுக்கு, முழு ஆதரவையும், பலத்தையும் தந்து இருப்பது இந்திய அரசு. மனம் வேதனையால் துடிக்கிறது. சற்று நேரத்துக்கு முன்னர்தான், கடல் புலிகளின் தலைவர், சாத்துhரைக் கடந்து வருகிறபோது என்னிடத்திலே பேசினார்.


படுகாயப்பட்டுக் கிடக்கின்ற தமிழர்களின் உடல்களில் புழுக்கள் நெளிவதை இங்கே வந்து பார்க்கச் சொல்லுங்கள். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து பார்க்கட்டும். இந்திய அரசின் பிரதி நிதிகளை வந்து பார்க்கச் சொல்லுங்கள். அரசாங்க மருத்துவமனைக்கு வந்து பார்க்கச் சொல்லுங்கள்’ என்று என்னிடம் கூறினார். அதற்கு இரண்டு நாள்கள் கழித்து, 13 ஆம் தேதி இரவு பத்து மணிக்கு, நடேசன் என்னிடம் பேசினார்.

அப்போது நான் சிவகாசியில் எனது அலுவலகத்தில் இருந்தேன். அந்த நாள்களை நினைத்துப் பார்க்கிறேன். ஈழத்துத் தமிழர்களைக் கொன்று குவித் ததற்குக் காரணம் இந்திய அரசு. நாராய ணன்களும், சிவசங்கர மேனன்களும் எங்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்று, கொத்தபய ராஜபக்சேயும், அவனுக்கு உடன் இருந்தவர்களும், இன்றைக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.


இந்திய அரசுதான் காரணம் என்றால், அதற்குப் பக்கபலமாக, உற்ற துணை யாக, உடந்தையாக இருந்து, கங்காணி வேலை பார்த்தவர்தான் கலைஞர் கருணாநிதி. தான் செய்த துரோகத்தை மூடி மறைப்பதற்கு, எத்தனையோ வழிகளில் முயற்சிகளை மேற் கொள்கிறார். போரில் ஈழத்தமிழர்கள் அழிக்கப்பட்டு விட்டார்கள், புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்ற இறுமாப்பில், மாவீரர் திலகம் பிரபாகரனைக் குற்றம் சாட்டி எழுதத் தொடங்கினார், முரசொலியிலே. ‘சகோதரர் களைக் கொன்றார் என்று குற்றம் சாட்டினார். உலகமே ஈழத்தமிழர் களுக்காகக் கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டு இருந்தபோது, கோடானு கோடித் தமிழர்கள், பிரபாகரனை நெஞ்சில் வைத்துப் போற்றிக் கொண்டு இருந்தபோது, அவருக்கு நிகரான ஒருவர் இந்த உலகில் பிறக்கவில்லை என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டு இருக்கின்றபோது, அவரைக் குற்றம் சாட்டி எழுதிய ஒரேயொரு நபர், கலைஞர் கருணாநிதி.


மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்தார் என்று எழுதினார். கருணாவின் படைகளும், பிரபாகரனின் படைகளும் ஒன்றுக்கொன்று சந்தித்தன’ என்று, துரோகிப்பயல் கருணாவின் படைகளைப் பற்றி எழுதினார். விவேகம் இல்லை இவர்களிடம், அதனால் தோற்றார்கள் என்று எழுதினார். சகோதரச் சண்டையால் இவர்கள் சாய்ந்தார்கள் என்றார். நல்ல சுமூகமான தீர்வை, இராஜபக்சே ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்’ என்றார்.


இதையே தொடருவார் என்று கருதித்தான், நான் கடுமையாகக் குற்றம் சாட்டி, இந்த இனத்துக்கு இப்படி ஒரு துரோகத்தை எவரும் செய்தது இல்லை என்று நான் ஆதாரங்களோடு பதில் சொன்னேன், சங்கொலியில் எழுதினேன். ஆனந்த விகடனில் பேட்டி கொடுத்தேன். அதைக் கண்டித்து அவர் முரசொலியில் எழுதினார். ஆனந்த விகடனுக்கும் பதில் சொன்னார். நான் மீண்டும் எழுதினேன். அவர் பெரிய பொறுப்பில் இருக்கிறார். ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, அதை நிலைநாட்டுவதற்குக் கடுமையாக முயற்சிப்பார். அது அவரது வழக்கம். நடக்காததை, நடந்ததாகச் சொல்லுவார். பிறகு, அதையே திரும்பத் திரும்பச் சொல்லுவார். வரலாற்றில் பதிய வைத்துக் கொண்டே வருவார். இது அவரது வாடிக்கை. அதனால்தான், பிரபாகரனைப் பற்றி எவரும் குறை சொல்லாத காலத்தில், அவரைக் குற்றம் சாட்டி எழுதினார் கருணாநிதி. நம்முடைய சவுக்கடிகள் விழுந்த பிறகு, கொஞ்சம் பம்மிக் கொண்டார். பலமான அடி விழுந்தால், பயில்வான் கொஞ்சம் விலகிக் கொள்வார்.


இப்பொழுதும், உலகம் முழுவதும் அவரைப் பழித்துக் கொண்டு இருக்கிறது. அதற்காக, எத்தனையோ மோசடி நாடகங்களை நடத்துவதற்கு அவர் முயற்சித்துக் கொண்டு இருக்கிறார். நான் சென்னையில் நடைபெற்ற உண்ணாநிலை அறப்போர் மேடையிலேயே, சில கேள்விகளை எழுப்பி இருக்கிறேன். என்னையும், அண்ணன் நெடுமாறன் அவர்களையும், சென்னை விமான நிலையத்துக்கு உள்ளே நுழைய விடாமல், போலீசை ஏவி விட்டுத் தடுத்தவர், கலைஞர் கருணாநிதி. நம், அன்னை பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்புவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தவர், கலைஞர் கருணாநிதி. இப்போது, உலகமே கொந்தளிக்கிறது என்றதற்குப் பிறகு, இப்போது, எதையெல்லாமோ பேசிக்கொண்டு இருக்கிறார்.


சென்னை விமான நிலையத்தில் பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியது, விடிந்த பிறகுதான் தெரியும் என்று முதலில் சொன்ன கருணாநிதி உண்மையானவரா? அல்லது இரவு 12 மணிக்குத்தான் தெரியும் என்று சொன்னது வேறு கருணாநிதியா? ஒன்பது மணிக்கு, ஜாங்கிட்டையும், போலீசையும் உங்களுக்கே தெரியாமல் அனுப்பி விட்டாரா மதுரைக்காரர்? போலீ
ஸ்  இலாகாவை உங்களிடம் இருந்து அவர் பிடுங்கிக் கொண்டாரா?

வாசலில் கூட, ரோட்டிலேயே எங்களை மறித்தார்களே? மூன்று நாள்கள் கழித்து முரசொலியில், குத்தீட்டி என்ற பெயரில், பழ. நெடுமாறனும், வைகோவும், ஆர்ப்பாட்டம் செய்ததால்தான், அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டார் என்று எழுதினார். அப்படியானால், சட்டமன்றத்தில் சொன்னது உண்மையா? முரசொலியில் எழுதியது உண்மையா?


உலகம் போற்றும் மாவீரனைப் பெற்ற அந்தத் தாய், உங்களிடம் மடிப்பிச்சை ஏந்த வேண்டுமா? மன்றாட வேண்டுமா? அவரைத் துன்பப்படுத்தித் திருப்பி அனுப்பியதற்கு இந்திய அரசு மன்னிப்புக்
கேட்க வேண்டும், தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும். வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவரைத் திரும்பவும் இங்கே அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும என்று சொன்னோம்.


ஆனால், அதற்கு அவர் என்ன சொன்னார்? இவரிடம் விண்ணப்பிக்க வேண்டுமாம். ஏன் தெரியுமா? உலகம் போற்றும் மாவீரனின் தாய், தன்னைக் காப்பாற்றுங்கள் என்று இவரிடம் மடிப்பிச்சை ஏந்தியதாக இவருடைய வரலாற்றிலே எழுதத் துடிக்கிறார். இரத்தம் கொதித்தது எனக்கு. அவருடைய விண்ணப்பம் வந்ததற்குப் பிறகு, சில நிபந்தனைகளோடு அவரை அனுமதிக்கச் சொல்லி, மத்திய அரசுக்கு நாங்கள் எழுதி அனுப்புவோம்’ என்று சொன்னார். அப்படியானால், நிபந்தனை களைப் போட்டது மத்திய அரசு அல்ல. இவர்தான், முதலிலேயே சட்டமன்றத் திலேயே சொல்லி விட்டாரே?

சில நிபந்தனைகளோடு அனுமதிக்கச் சொல்லி நாங்கள் வேண்டுகோள் விடுப்போம் என்று சொல்லி விட்டாரே? அப்படியானால், அந்த நிபந்தனைகளை விதித்தவரே, கலைஞர் கருணாநிதிதான்.


அந்த அம்மையாருக்கு 81 வயது. நினைவு வந்தும், வராமலும் இருக்கிறார். பக்கவாதத்தில் ஒரு பகுதி உடல் செயல் இழந்து விட்டது. அவர் இந்திய அரசாங் கத்தையே கவிழ்க்கப் போகிறாரா? அவருக்கு எதற்கு நிபந்தனை? அவரை வைத்து நாங்கள் அரசியல் பண்ணப் போகிறோமா? அரசியல் கட்சிக்காரர் களே சந்திக்கக் கூடாது. தடை செய்யப் பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தோடு தொடர்பு உள்ளவர்களோடு, எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என்ற நிபந்தனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்று இவர் நிபந்தனை விதிக்கிறார். நேற்றைக்கு இது வெளி வந்து, உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்கள் காறித் துப்பிக் கொண்டு இருக்கிறார்கள். எனவே, இப்போது, பிளேட்டை மாற்றுகிறார்.


வேண்டுகோள்தான் விட்டோம். அறிவுரை கூட அல்ல, அவர்களுடைய பாதுகாப்புக்காகத்தான். கலைஞரே, ஒரு முறை பேசிய வார்த்தைகளைத் திரும்ப எடுக்க முடியாது. நீங்கள் ஏற்கனவே சொன்னதைத் திரும்பப் பெற முடியாது. உறவினர்களாக இருந்தாலும், முன்கூட்டி அனுமதி பெற்றுத்தான் பார்க்க வேண் டும். அப்படியானால், இங்கே கொண்டு வந்து வீட்டுச் சிறையில் வைக்கிறீர்களா? சிறைவாசமா? என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்த உடனே, சட்ட சபையில் ஒருவரை விட்டு, இவரே கேள்வி கேட்கச் சொல்லுகிறார்.


‘இது ஒன்றும் சிறைவாசம் அல்ல. அவர்களுடைய பாதுகாப்புக்காகத்தான்’ என்கிறார். இதற்கு மேல் நான் ஒன்றும் பேச விரும்பவில்லை. நாங்கள் அந்தத் தாயை, எங்கள் நெஞ்சில் வைத்து வணங்குகிறோம். அவர் பெற்ற பிள்ளையை உயிராகப் போற்றுகிறோம்.


அந்த மாவீரனின் தாய், உங்களுக்கு நன்றி உள்ள உடன்பிறப்பா? அவர் என்ன தி.மு.க.வின் வட்டச் செயலாளரா? உலகத்தை முட்டாளாக்கப் பார்க்கிறீர் களா? இங்கிருந்துதான் எழுதி அனுப்பி இருக்கிறார்கள் என்பது இந்த ஒரு வார்த்தையில் தெரிந்து விட்டதே? ஈழத்துத் தமிழர்கள் எப்படி எழுதுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ‘என்றென்றும் நன்றியோடு இருப்பேன் என்று அவர் சொன்னதாக, வரலாற்றில் பதிய வைக்கத் துடிக்கிறீர்களா? ஈழத் தமிழர்களுக்கு நீங்கள் செய்த துரோக த்தை மூடி மறைக்க முடியாது. முத்துக் குமார் தீக்குளித்துச் செத்துக் கிடந்த போது, முட்டி மோதி எல்லோரும் அழுது புலம்பிக் கொண்டு இருந்தபோது, நீங்கள் பட்டு வேட்டியும், பட்டுச் சட்டையும் அணிந்து கொண்டு, உங்கள் பிள்ளையின் வாயிலே கேக்கைத் திணித்து போÞ கொடுத்துக் கொண்டு இருந்தீர்கள். உங்கள் பிள்ளை, மதுரையில் தெருத்தெருவாகக் கிடா வெட்டி, பிரியாணி விருந்து போட்டு, பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டு இருந்தான். 17 பேர் தீக்குளித்துச் செத்தார்களே, ஒரு வார்த்தை இரங்கல் சொன்னீர்களா? ஈழத்துத் தமிழர்களுக் காகப் போராடுகிறார்கள் என்பதற்காக, வழக்கறிஞர்களின் கை கால்களை முறிப்பதற்குக் காவல்துறையை ஏவி விட்டவர்தானே நீங்கள்?


தீக்குளித்தவர்களைக் கொச்சைப் படுத்தி, போலீசை விட்டு அறிக்கை விடச் செய்தவர்தானே நீங்கள்? இராஜபக்சே இந்த இனத்துக்குச் செய்த கொடுமையை விட அதிகம் செய்தவர் நீங்கள்தான். இவ்வளவு தமிழர்கள் செத்ததற்கே, கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்ததுதான் காரணம்.


தம்பி முத்துக்குமார், நமது கூட்டங்களுக் கெல்லாம் வருவார், எத்தனையோ முறை எனக்குக் காபி,டீ வாங்கிக் கொடுத்தவர் என்று கவிஞர் கோமகன் என்னிடம் சொன்னார். அவன் என்ன அழகாகச் சொல்லிவிட்டான், அவனது மரண வாக்குமூலத்தில். எதற்காக நீங்கள் மருத்துவமனையில் போய்ப் படுத்துக் கொண்டீர்கள் என்று. 45 நாள்கள் மருத்துவமனையில் படுத்துக் கொண்டது எதற்காக? எல்லா வற்றையும் மறைப்ப தற்காக. வழக்கறிஞர் களைத் தாக்கிய தற்காக, அவர்கள் கருப்புக் கொடி காட்டுகிறார்கள். அது அவர்களது ஜன நாயக உரிமை. அதற்கும் கூட நீங்கள் வழக்குப்போடலாம்.

அதை விட்டு விட்டு, குண்டர்களையும், ரெளடி களையும் முன்னேற்பாடாக அங்கே கொண்டு வந்து, வழக்கறிஞர் களைத் தாக்கினீர்களே? அந்தக் காட்சியைப் படம் பிடிக்க முயன்ற வீடியோ கேமராக் களை உடைத்து நொறுக்கி, அந்தச் செய்தியாளர்களையும் அடித்து உதைத்து இருக்கிறீர்களே?
அடி வாங்கியவர்கள், மருத்துவமனையில் கிடக்கிறார்கள். அவர்கள் மீதே வழக்குப் போட்டு, அவர்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றினீர்களே? இவ்வள வும் செய்துவிட்டு, இன்றைக்குப் பசப்பு கிறார். இவரது ஆட்சியைப் போன்ற பாசிச ஆட்சி உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லை. இன்றைக்குச் சட்டசபையில் சொல்லுகிறார். பத்திரிகைச் செய்தியை வைத்து, பீட்டர் அல்போன்
ஸ்  பேசுகிறாரோ? முன்பெல்லாம் பத்திரிகையில் வந்து விட்டதா? என்பார்கள். இப்போது, பத்திரி கையில்தானே வந்து இருக்கிறது? அதில் எந்த உண்மையும் இருக்காது’ என்று இப்படிப் பேசி, சட்டமன்றத்தில் பதிவு செய்து இருக்கிறார். மிரட்டல், உருட்டல், அச்சுறுத்தல், ஆசை வார்த்தை காட்டுதல், விளம்பரத்துக் காகக் கோடிகளைக் கொட்டுதல் என்று முடிந்த வழிகளில் எல்லாம் பத்திரிகை களின் குரல் வளையை நெறித்துக் கொண்டு இருக்கிறார் கலைஞர் கருணாநிதி.


ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலில் சம்பந்தப்பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஒரு பெண்ணோடு அவர் நடத்திய உரையாடல்கள் எல்லாம் ஹெட்லைன்
ஸ்  டுடேயில் வெளிவந்து, இந்தியா முழுவதும் பரபரப்பாகிறபோது, சென்னை விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் கேட்கப் போனார்கள். அவர்களையெல்லாம் உதைத்தார்கள். ஒரு பெண் நிருபர் தாக்கப்பட்டார். எந்தப் பத்திரிகையிலும் இந்தச் செய்தி இல்லை. ஒரு பேருந்து டிக்கட் பரிசோதகர், தலைமைச் செயல கத்தில் தாக்கப்பட்டு இருக்கிறார். தாக்கியவர், தலைமைச் செயலாளரின் உதவியாளரின் மகன். கொந்தளித்து எழுந்து விட்டார்களே நமது தொழிலாளத் தோழர்கள். அதுதானே சரி? எங்கள் சகோதரனை எப்படி நீ தொடலாம்? என்று கிளம்பி விட்டார்கள்.

தலைமைச் செயலகத்தை முற்றுகை போட்டு விட்டார்கள்.


அதுபோல, ஜனநாயகத்தின் ஐந்தாவது துhண் என்று பத்திரிகைகளைச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். அது ஒரு புனிதமான தொழில். அப்படிப்பட்ட செய்தியாளர்களை அடித்ததையே சொல்ல முடியாத அளவுக்கு, ஒரு மிரட்டல் இருக்கிறது என்று சொன்னால், இப்படி ஒரு பாசிச வெறி பிடித்த கருணாநிதியின் அரசு, தமிழகத்துக்கு பெருங்கேடாக அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. இதில் இருந்து தமிழகம் மீட்கப்பட வேண்டும்.
பாவேந்தர் பாரதிதாசன் அன்றைக்கே சொன்னார். இன்றைக்கு அவர் உயிரோடு இருந்திருந்தால், நம் நெஞ்சிலே நெருப்பை வைக்கின்ற கவிதைகளை தந்து இருப்பார். 1958 ஆம் ஆண்டு, ஆக
ஸ்ட் 19 ஆம் நாள், அப்போது கிழமை இதழாக வெளிவந்து கொண்டு இருந்த ‘குயில்’ ஏட்டில், இலங்கைத் தமிழர் களைப் பற்றி நான்கே வரிகளில் அவர் சொன்னதை, இந்தப் பேச்சின் நிறைவாக வைக்க விரும்புகிறேன். அதில் சொல்லுகிறார்:


உறவு கொள் இலங்கையில்
ஆயிரம் தமிழரை உயிர்க்கொலை செய்தாரை
ஆதரித்தே வரும் நெறி அற்ற
டெல்லியின் நீட்டாண்மைக்கு
அஞ்சிடோம் அஞ்சிடோம்


1958 இல் எழுதி இருக்கிறார். அப்போது, இந்திய அரசு ரேடார் கொடுக்கவில்லை, ஆயிரம் கோடி பணம் கொடுக்கவில்லை. ஆயினும், பாரதிதாசன் டெல்லியை எச்சரித்து இருக்கிறார். அதைவிட ஆயிரம் மடங்கு, இன்றைக்கு இந்திய அரசு தமிழருக்குக் கேடு இழைத்து விட்டதே? ஆயுதங்களை அள்ளி வழங்கியது, தமிழர்களைக் கொன்று குவித்தது.


ஆனால், தமிழ் ஈழப் போர் முடிந்து விடவில்லை. உலகெங்கும் உள்ள மான மறவர்களாம் தமிழர்களின் குருதியில் மின்சாரத்தைப் பாய்ச்சுகின்ற ஒரு பெயர்தான் பிரபாகரன். அவரது பெயரை உச்சரிக்கக் கூடாது, அவர் படத்தைப் போடக்கூடாது, அவரைப் பற்றிப் பேசினால் ராஜத்துரோக வழக்கு, கருணாநிதி ஆட்சியில். ஈழத்தமிழருக்கு அவர் இழைத்த துரோகத்தை மூடி மறைக்க முடியாது.


மறுமலர்ச்சி தி.மு.கழகத்தைப் பொறுத்த மட்டில், செந்தமிழ் நாட்டின் உரிமை காக்கவும், கழனி வாழ் உழவர்களின் கவலையைத் தீர்க்கவும், மீண்டும் எழுகின்ற ஈழப்போருக்கு ஆதரவு அளித்திட மக்களை ஆயத்தப்படுத்தவும், பாவேந்தர் விழாவில் உறுதி எடுத்துக் கொள்வோம். தமிழகத்தைக் காக்கவும், ஈழத்தமிழரைப் பாதுகாக்கவும், வீர சபதம் பூணுவோம்!


பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.


 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

நிகழ்ச்சிகள் நாள்குறிப்பு

S M T W T F S
 
 
 
1
 
2
 
3
 
4
 
5
 
6
 
7
 
8
 
9
 
10
 
11
 
12
 
13
 
14
 
15
 
16
 
17
 
18
 
19
 
20
 
21
 
22
 
23
 
24
 
25
 
26
 
27
 
28
 
29
 
30
 
 
 
 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)