வைகோவின் ஒற்றை வரி பதில்கள்! இமயம்’ தொலைக்காட்சியின் ‘சரித்திர நாயகன் வைகோ’ என்ற நிகழ்ச்சியில் வைகோவிடம் கேட்கப்பட்ட சுவையான கேள்விகளும், அதற்கு வைகோ கூறிய ஒற்றைவரி பதில்களும்...

செய்தித்துறை: தொகுப்புகள், என்றும் இனியவை

மாவட்டம்: தமிழ்நாடு

Date: 
Sat, 07/11/2009

உங்கள் பாதையில் அரசியல் என்பது?
முட்களும் பூக்களும் நிறைந்த பாதை.

அரசியலுக்கு வரக் காரணம்?
மனதைக் கவர்ந்த இலட்சியக்களுக்காகப் பாடுபட.

உங்கள் மனைவியிடம் உங்களுக்கு பிடித்த விசயம்?
ஒரு இல்லத்தரசியிடம் இருக்க வேண்டிய அத்தனை இலக்கணங்களும் நிறைந்து இருப்பது.

உங்களுக்கு பிடித்த உணவு?
என் தாயார் சமைக்கும் உணவு.

உங்களுக்கு பிடித்த நிறம்?
இளஞ்சிவப்பு (பிங்க்)

உங்களுக்குப் பிடித்த ஊர்?
கலிங்கப்பட்டி

சந்திக்க நினைக்கும் நபர்?
நெல்சன் மண்டேலா

உங்களிடம் உங்களுக்கு பிடித்த / பிடிக்காத விசயம்?
துன்பம் வரும்போது துணிந்து எதிர்கொள்வது பிடிக்கும்.சிறிய பிரச்சினைகளைக் கூட மனதில் போட்டு வருத்திக் கொள்வது பிடிக்காது.

சந்தோஷமாக இருந்த சம்பவங்கள்?
அறிஞர்களும், மேதைகளும் பாராட்டிய நேரங்கள்.

மறக்க முடியாத சம்பவங்கள்?
நெஞ்சிருக்கும்வரை நீங்காத ஈழப் பயணம் போன்ற பல நிகழ்வுகள்.

ரோல் மாடல்?
எனக்கு யாரும் ரோல் மாடல் அல்ல.

நீங்கள் மறக்க நினைப்பது?
நான் நேசித்தவர்கள் என்மீது கற்கள் வீசியதை.

உங்கள் தொண்டர்களை பற்றி?
என்னை இயக்கும் மூலபலம்

தேர்தல் வாக்குறுதி பற்றிய உங்கள் கருத்து?
ஏமாற்றாதே - ஏமாறாதே

அரசியலில் சாதித்தது?
சுழல்களிலும் நீந்துகிறேன்.

அரசியலில் சாதிக்க நினைப்பது?
“இலட்சியத்துக்காகக் கடைசிவரை போராடினேன் என்ற மதீப்பீட்டைப் பெற வேண்டும்.

நீங்கள் பார்த்த முதல் திரைப்படம்?
ஜகதலப்பிரதாபன்

பிடித்த நடிகர்?
சிவாஜிகணேசன்

பிடித்த நடிகை?
சாவித்திரி

சினிமாவில் ஆர்வம்?
நல்ல திரைப்படங்களில் முழுமையாக லயிப்பேன்.

பார்த்த கடைசி திரைப்படம்?
பொக்கிஷம்

வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?
இல்லை.

பிடித்த விளையாட்டு?
( வாலிபால் , பாஸ்கட் பாலைத்தவிர) கால்பந்து

உங்களுடைய நெருங்கிய நண்பர்கள்? அவர்களைப் பற்றி?
நான் தேடி பெற்றதே நட்புச் செல்வம்தான். பட்டியல் மிக நீண்டது.

தனித்தமிழ் ஈழம் அமையுமா? அமையாதா?
அமைந்தே தீரும்.

பிடித்த நூல்?
திருக்குறள்

பிடித்த எழுத்தாளர்?
‘கல்கி’

பிடித்த பொன்மொழி?
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

பிடித்த ஆசிரியர்?
பள்ளியில் கவிஞர் சட்டமுத்தன், மாணிக்கவாசகம், கல்லூரியில் பேராசிரியர் பொன்னரசு.

உங்களின் அரசியல் வாரிசு?
வாரிசு குறிப்பிட நான் மன்னன் அல்ல.

தூக்கம் என்பது?
உறங்குவது போலும் சாக்காடு.

பணம் என்பது?
மயிர் ஊடாடா நட்பிலும் பொருள் ஊடாடக் கெடும்.

ஆசை என்பது?
வரம்புக்குட்படாதது

வெற்றி என்பது?
ஊக்கம் தருவது.

பதவி என்பது?
ஊழியம் செய்யப் பயன்படும் இக்கருவி தவறு இழைக்கவும் போதையை ஊட்டும்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)