திரு. வைகோ அவர்களின் உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பெருமகிழ்வு கொள்பவன் நான்.

செய்தித்துறை: அபிப்ராயம்

மாவட்டம்: தமிழ்நாடு

Date: 
Sat, 07/11/2009

யாத்ரிகன்
yatrigan@gmail.com

வணக்கம்.

மதிமுக கணிணிப் பக்கத்தை இன்று தான் பார்த்தேன்.

எனது வலைப்பதிப்பான http://www.yatrigan.wordpress.com -
ல் - திரு வைகோ அவர்களைப்பற்றி
ஆகஸ்ட் 1ஆம் தேதியிட்ட நான் வெளியிட்ட ஒரு பதிவின்
நகலை கீழே வடித்துள்ளேன்.

திரு. வைகோ அவர்களின் உரையைக் கேட்கும் வாய்ப்பு
கிடைக்கும்போதெல்லாம் பெருமகிழ்வு கொள்பவன் நான்.

தயவு செய்து என் வலைப்பதிவையும் அதன் மூலம் திரு வைகோ
அவர்களிடம் நான் விடுத்துள்ள வேண்டுகோளையும்
திரு. வைகோ அவர்களின் பார்வைக்குக் கொண்டு
செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

http://www.yatrigan.wordpress.com - article dated 1st august 2009

வைகோ !!!

வைகோ தமிழ் நாட்டின் தனி அடையாளம் !
அரசியல்வாதிகளில் வித்தியாசமானவர்.

அந்தக்கால M.A.,B.L.
40 வருடங்களாக அரசியலில் இருந்தாலும் இதுவரை அரசாங்க பதவி
எதையும் வகிக்காதவர். இரண்டு முறை மத்திய அமைச்சராகும் வாய்ப்பு
கிடைத்தபோதும் அவற்றை தன் கட்சி உடன்பிறப்புக்களுக்கு பெற்றுக்கொடுத்தவர்.
ஊழல் குற்றச்சாட்டு எதற்கும் உள்ளாகாதவர்.
எல்லாருடனும் அருமையாக பழகும் பண்பு கொண்டவர்.
அணுகுவதற்கும், பழகுவதற்கும் எளிமையானவர் - இனிமையானவர் .
மதிமுக கட்சியின் நிறுவனர் - தலைவர்.

- இந்த விவரங்கள் அநேகமாக அரசியல் தெர்ந்த அனைவரும் அறிந்தவை.

கட்சி அரசியலை தவிர்த்து விட்டு பார்த்தோமானால் -

அற்புதமான - கம்பீரமான குரல் வளம்.
ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்த சிறந்த சொல்வளம் -
எடுத்துக்கொண்ட தலைப்பை விட்டு வெளியே செல்லாமல், எதுகை மோனைக்காக
அநாவசிய வார்த்தை ஜாலங்களில் ஈடுபடாமல், ஆற்றும் கருத்தாழம் மிக்க உரை -

இவை அனைத்தையும் தாண்டி - அவருள் ஒரு மிகச்சிறந்த இலக்கியவாதி
இருக்கிறார் என்பதையும் இலக்கியத்திலும் தமிழ் மொழியிலும் அவருக்கு
உள்ள ஆழ்ந்த ஈடுபாடு குறித்தும் - ( அவரது அரசியல் தவிர்த்த ) இலக்கிய
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் மட்டுமே அறியப்பெற்றிருப்பார்கள் !!

வைகோவின் இந்தப்பக்கத்தையும் தமிழ் மக்கள் பரவலாக அறிய வேண்டும் -
அதன் பயனையும் பெற வேண்டும் !

இலக்கிய ரசனை கொண்டவர்களுக்கு வைகோவின் இலக்கிய உரைகள் பெரும்
விருந்தாக இருக்கும். சில முறைகள் இத்தகைய பேச்சுக்களை கேட்கும்
வாய்ப்புகளை பெற்றவன் என்கிற முறையில் -
இத்தகைய அனுபவங்கள் இலக்கிய ரசனை உடைய மற்றவர்களுக்கும்
கிடைக்க வேண்டும் என்கிற விருப்பத்தில் வைகோ அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் !
மாதத்தில் இரண்டு நாட்களாவது (அரசியல் தவிர்த்த ) இலக்கிய கூட்டங்களில்
கலந்து கொள்ளுங்களேன் !!

இன்றைய தினத்தில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களை வரிசைப்படுத்தினால்
அதில் முதலிடம் பெறுபவர் வைகோவாகவே இருப்பார். திராவிட இயக்கம் பல
சிறந்த பேச்சாளர்களை உருவாக்கி இருந்தாலும் பலரை காலம் பறித்துச்சென்று விட்டது -
சிலரை அவர்கள் வகிக்கும் பதவி நீர்த்துப்போகச்செய்து விட்டது !

வைகோவின் ஆற்றல் அரசியலோடு நின்றால் அது மக்களுக்கு இழப்பே.
அறிஞர் அண்ணா அவர்கள் வாழ்ந்த காலத்தில் - அறுபதுகளில் - திராவிட இயக்கம்
பரபரப்பாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், அண்ணா அவர்கள்
கட்சி வளர்ச்சி நிதிக்காக
பல கூட்டங்களை ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில்
திரை அரங்குகளில் நிகழ்த்துவார்.
நுழைவுக்கட்டணம் செலுத்தி பெருமளவில் இளைஞர்கள்
அவர் பேச்சைக்கேட்பதற்காகவே வருவார்கள்.

அது போல், வைகோவின் இலக்கிய முகத்தை அறிந்த பல தமிழர்கள் இன்றும்
அத்தகைய கூட்டங்களுக்காக காத்திருக்கிறார்கள். இலக்கிய அமைப்புக்கள்
இத்தகைய கூட்டங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் பலவேறு ஊர்களில் நடத்தலாம்.
வைகோவின் இலக்கிய நயத்தையும், சொல் வளத்தையும் - அரசியலைக் கடந்தும்
பலர் அனுபவிக்க இயலும்.

மதிப்பீடு:
உபயோகத்தன்மை: நன்கு
தோற்றம்: நன்கு

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)