இலங்கையைப் புறக்கணிப்பீர் - தமிழகப் பேராசிரியர்களுக்கு வைகோ வேண்டுகோள்!
விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், இலக்கியம், தேசிய, இலங்கைத் தமிழர்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
இலங்கையைப் புறக்கணிப்பீர்
தமிழகப் பேராசிரியர்களுக்கு வைகோ வேண்டுகோள்!
டிசம்பர் 14, 15 தேதிகளில், இலங்கைத் தலைநகர் கொழும்புவில், Institute of Human Development and Training Sri Lanka என்ற நிறுவனத்தின் சார்பில், மனிதவளக் கருத்தரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல, கொழும்பு பல்கலைக்கழகம் டிசம்பர் 19, 20, 21 தேதிகளில் கொழும்பில் ஒரு கருத்தரங்கத்தை நடத்துகின்றது.
இதில் பங்கேற்க, இலட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்து எவ்விதக் கவலையும் கொள்ளாத, இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள் செல்கிறார்கள். அதேபோல, தமிழ்நாடடின் சில பல்கலைக்கழகங்களில் இருந்தும் விரிவுரையாளர்கள் கலந்துகொள்ள ஆயத்தமாகி வருகின்றார்கள். கருத்தரங்கம் நடத்தும் அமைப்பினர் அவர்கள் பெயர்களை வெளியிட்டு இருக்கின்றார்கள்.
இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ள நிலையில், தமிழகப் பல்கலைக் கழகங்களில் இருந்தும், அரசுக் கல்லூரிகளில் இருந்தும் விரிவுரையாளர்கள் இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது, கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொலைகார இலங்கை அரசுக்கு ஆதரவு தெரிவித்தது போலவும் ஆகின்றது.
எனவே, தமிழகத்துப் பேராசிரியர்கள் இலங்கை செல்வதைத் தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்கின்றேன். தமிழக அரசும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்தும், அரசு நிறுவனங்களில் இருந்தும் யாரையும் இலங்கை செல்ல அனுமதி அளிக்கக்கூடாது என்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை - 8
30.11.2011

