பேருந்துக் கட்டணம், பால் விலை உயர்வு! ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 28 - திங்கள் - மாவட்டத் தலைநகரங்களில்; 29 செவ்வாய் காலை -சென்னையில்!
விவகாரங்கள்: பொருளாதாரம், சுற்றுச்சூழல், மனித உரிமை, தொழிலாளர், சட்ட ஒழுங்கு, வறுமை
மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, கோயம்புத்தூர் - மாநகர், கோயம்புத்தூர் - புறநகர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை - மாநகர், மதுரை - புறநகர், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி - மாநகர், திருநெல்வேலி - புறநகர், திருப்பூர், திருச்சி - மாநகர், திருச்சி - புறநகர், தூத்துக்குடி, வேலூர் - கிழக்கு, வேலூர் - மேற்கு, விழுப்புரம், விருதுநகர், தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
பேருந்துக் கட்டணம், பால் விலை உயர்வு!
ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
நவம்பர் 28 - திங்கள் - மாவட்டத் தலைநகரங்களில்;
29 செவ்வாய் காலை -சென்னையில்!
தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்குப் பேருந்துக் கட்டணம், பால் விலையைத் தமிழக அரசு உயர்த்தி உள்ளது. எவ்வித முன் அறிவிப்பும் இன்றி நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள இந்தக் கட்டண உயர்வால், நடுத்தர, அடித்தட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அவர்களுடைய மாத வருவாயில் பெரும்பகுதியைப் பறித்துக் கொள்கின்ற வகையில் இந்த விலை உயர்வு அமைந்து இருக்கின்றது. இந்த நிலையில், மின் கட்டணத்தையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப் போவதாக அரசு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றது.
கையில் இருபது ரூபாயுடன் காலையில் பேருந்து நிலையத்துக்கு வந்தவர்கள், பேருந்தில் ஏறி அமர்ந்தால், 35 ரூபாய் கட்டணம் என்றபோது, பேருந்தை விட்டுக் கீழே இறங்கிப் பரிதவிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகினர். ஏழைகளின் முதுகு எலும்பை முறித்து, அவர்களை முடக்கிப் போடுகின்ற அளவுக்கு, இந்த விலை உயர்வு அமைந்து உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும் என்ற நிலையில், லிட்டருக்கு 6 ரூபாய் விலை உயர்வை அரசு அறிவித்து உள்ளது.
தமிழக அரசு உடனடியாக, இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், வருகின்ற நவம்பர் 28 ஆம் நாள் திங்கள் கிழமை அன்று, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தலைநகர் சென்னையில், நவம்பர் 29 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
24.11.2011 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

