ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குக! சுதந்திர தமிழ் ஈழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துக!! வைகோ கோரிக்கை மனு

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு, அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Tue, 03/10/2017

 

 

 

 

ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குக!

சுதந்திர தமிழ் ஈழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்துக!!

வைகோ கோரிக்கை மனு

 

னித உரிமைகள் கவுன்சில் தலைவர், துணைத்தலைவர்கள், மனித உரிமைகள் ஆணையர் ஆகியோரிடம் வைகோ கோரிக்கை.

ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்டு விளக்கமான கோரிக்கை மனுவைத் தயாரித்த வைகோ அவர்கள், மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் ஜோக்கின் அலெக்சாண்டர் மசா மார்டெல்லி, துணைத்தலைவர்களான மொயட் சேலா, அமீர் ரமதான், சால்வா திரிஸ்கரசிவ்லி, வாலண்டின் ஜெல்வெகர் ஆகிய நான்கு பேர்களிடமும்,கோரிக்கை மனுக்களைத் தந்தார்.

மனித உரிமைகள் ஆணையர் அல் ராட் ஹூசேன், நியூ யார்க்கில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டம் நடைபெறுவதால், அங்கு பங்கேற்று வருவதால், ஜெனீவாவில் இல்லை. எனவே, 29.9.2017 அன்று, மனிதஉரிமைகள் ஆணையத்திற்கு வைகோ அவர்கள் சென்று, ஆணையரிடம் செயலாளரிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.

கோரிக்கை மனுவின் சாராம்சம்:

இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ம.தி.மு.. எனும் அரசியல் கட்சியின் பொதுச்செயலாளரான நான், இந்திய நாடாளுமன்றத்தில் 24 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவன். உங்களுடைய மதிப்புமிக்க பொன்னான நேரத்தின் சில நிமிடங்களை இந்தக் கோரிக்கை மனுவினை வாசிக்க சில நிமிடங்களைச் செலவிட வேண்டுகிறேன்.

இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள் கொடி உறவு கொண்ட ஏழரைக்கோடித் தமிழர்கள் வாழ்கின்ற தமிழ்நாடு எனும் இந்தியாவின் தெற்கு மாநிலத்தில் இருந்து வருகிறேன்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் அம்மண்ணின் பூர்வீகக் குடிமக்கள் ஆவர் என்று தொடங்கும் இந்தக் கோரிக்கை மனுவில், தமிழர்கள் வாழ்ந்த மொத்த நிலப்பரப்பு, ஐரோப்பிய வருகைக்கு முன்னர் எவ்வளவு இருந்தது, 26,550 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு அவர்களுக்கு இருந்தது என்பதையும், பின்னர் இதுவரை 15000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைச் சிங்களர்களிடம் இழக்க நேரிட்டதையும்,பிரித்தானியர் வெளியேறிய பின், சிங்களவர்கள் ஈழத்தமிழரை நாலாந்தரக் குடிமக்களாக நடத்தியதையும், சிங்கள மொழியை மட்டும் ஆட்சி மொழியாக்கி, புத்த மதத்தை அரசு மதமாக்கி, ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து, தந்தை செல்வா அவர்கள், அறவழியில் போராடியபோது, காவல்துறையையும், இராணுவத்தையும் கொண்டு கொடூரமான அடக்குமுறை ஏவப்பட்டதையும், கல்வியும், வேலை வாய்ப்புகளும் முழுமையாக மறுக்கப்பட்டதையும், தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டதையும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அநீதி தொடர்ந்ததையும், 1957-65 களில் தமிழர் தலைவர் தந்தை செல்வா அவர்களுடன் சிங்கள அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அந்த அரசுகளே கிழித்துக் குப்பையில் வீசியதையும், இவற்றின் மொத்த விளைவாக, வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ஆம் நாள் அன்று, அனைத்துத் தமிழ் அமைப்புகளையும், அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து நடைபெற்ற மாநாட்டில், சிங்களவர்களுடன் இனி சேர்ந்து வாழ இயலாது என்பதால், இறையாண்மை உள்ள சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை அமைப்பதுதான் இனி தமிழ் மக்களின் குறிக்கோளும், கடமையும் ஆகும் என்று, தந்தை செல்வா பிரகடனம் செய்ததோடு, இனி இளைய தலைமுறையினர் இந்தக் குறிக்கோளை அடைய போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்ததையும் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மிக அற்புதமாகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஆங்கில வடிவம் முழுமையாக இக்கோரிக்கை மனுவில் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழர்களின் சகாப்த நாயகனான பிரபாகரன் அவர்கள் அமைத்த தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம், உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத உன்னதமான தியாகத்தையும், மகத்தான வீரத்தையும் சாதித்து, ஆண் புலிகள், பெண் புலிகள் ஆகிய புலிப்படையினர் பல போர்க்களங்களில் சிங்களர்களைத் தோற்கடித்ததும், மிகக்குறிப்பாக 2001 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில், யானை இறவு போர்க்களத்தில், தங்களை விடப் பன்மடங்கு எண்ணிக்கை பலமும், ஆயுத பலமும் கொண்ட சிங்கள இராணுவத்தைத் தோற்கடித்தது, உலகத்தையே பிரமிக்கச் செய்தது.

இப்போரின் வெற்றிக்குப் பின்னர், விடுதலைப்புலிகள்தான் 2001 டிசம்பர் 24 ஆம் நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 30 நாள்களுக்குப் போர் நிறுத்தத்தை அறிவித்து, பின்னர் மேலும் 30 நாள்களுக்கு நீட்டித்தனர். நோர்வே உள்ளிட்ட சில நாடுகளின் வற்புறுத்தலால், வேறு வழி இன்றி சிங்கள அரசும் போர் நிறுத்தம் அறிவித்தது. இதன்பின்னர், சிங்கள அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே தாய்லாந்திலும் நோர்வேயிலும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை முறித்ததோடு, அன்றைய அதிபரான சந்திரிகா குமாரதுங்கே உலக நாடுகளிடம் ஆயுதங்களை வாங்கிக் குவித்தார். தமிழர் பகுதிகள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் சிங்கள இராணுவம் தாக்குதலை மேற்கொண்டது. போர் மூண்டது.

2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அரசு சிங்கள அரசுக்கு முப்படைத் தளவாடங்களை வழங்கியதோடு, பெருமளவு நிதியைத் தந்து, சீனா, பாகிஸ்தான், ஸ்ரேல், ஈரான், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத உதவியையும், சிங்கள அரசு பெற இந்திய அரசு உதவியது. 2005 இல் அதிபரான மகிந்த ராஜபக்சே, மிகக் கோரமான ஈழத்தமிழ் இனப்படுகொலையை நடத்தினார்.

.நா.வின் ஜெனீவா ஒப்பந்தம் தடை செய்த குண்டுகளை சிங்கள இராணுவம் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள் மட்டும் அல்லாது, ஆயுதம் ஏந்தாத ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்தது. மிகக் கொடூரமாக நடைபெற்ற சம்பவம் யாதெனில், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ஆதரவு அற்ற அநாதைகளான பெண் குழந்தைகள் காப்பகமான செஞ்சோலை மீது, சிங்கள விமானம் குண்டு வீசியதில், 61 பெண் குழந்தைகள் குரூரமாகக் கொல்லப்பட்டனர். 170 சிறுமிகள் படுகாயம் அடைந்தனர். அதே ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று, ஆழிப்பேரலை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் செய்த பிரெஞ்சு நாட்டுத் தொண்டு அமைப்பில் சேவை செய்த 17 தமிழ் இளைஞர்களை, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது. இந்த அநீதியான படுகொலையை, ஸ்திரேலிய அரசு உலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தது.

சர்வதேச பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், தமிழர் பகுதிகளில் அனுமதிக்கப்படவே இல்லை. தமிழ் எழுத்தாளர் தராக்கி சிவராம், சிங்களப் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கே உள்ளிட்ட பலர் இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2009 ஜனவரியில் இருந்து, சிங்கள இராணுவத்தின் முப்படைகளும் இந்திய இராணுவத்தின் உதவிகளோடு ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது. பட்டினியால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மடிந்தனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட மருத்துவமனைகள் மீது சிங்கள இராணுவம் குண்டு வீசியும், பீரங்கி ஷெல் அடித்தும் காயப்பட்டவர்களைக் கொன்று குவித்தது. இந்த உண்மைகள் எல்லாம் ஆதாரங்களோடு ஐ.நா.வின் அன்றைய பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு தனது விரிவான அறிக்கையில் படங்களுடன் வெளியிட்டு இருக்கின்றது.

உலகத்தின் மனசாட்சியை நடுங்க வைத்த இரண்டு சம்பவங்களை, லண்டன் சேனல் தொலைக்காட்சி வீடியோ காணொளியாக வெளியிட்டது. விடுதலைப்புலிகள் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா என்ற இளம்பெண்ணை, சிங்கள இராணுவத்தின் பதினைந்து பேர் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வகையில் கற்பழித்துப் பின்னர் கொலை செய்து, ஆடைகள் அற்ற உடலைச் சேற்றில் வீசி எறிந்தனர்.

மற்றொன்று, ஈழத்தமிழ் இளைஞர்கள் எட்டுப்பேரை கைகளைப் பின்புறமாகக் கட்டி, கண்களைக் கட்டி, அம்மணமாக இழுத்து வந்து, நிலத்தில் மண்டியிட வைத்து உச்சந்தலையில் மிக அருகில் இருந்து சுட்டதில் தலை சிதறி இறந்தனர். ஏராளமான தமிழ்ப்பெண்கள் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். குழந்தைகள் கொல்லப்பட்டனர். அதற்கு உதாரணம்தான், தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவனான பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஆகும்.

நடைபெற்றவை போர்க்குற்றங்கள் அல்ல. 2009 ஆம் ஆண்டில் மட்டும், ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதும், ஐம்பதுகளில் இருந்து தொடர்ந்த படுகொலைகளும், சிங்கள அரசு செய்தது இனப்படுகொலை என்று நிரூபணம் ஆகியது. இந்த இனப்படுகொலை செய்த சிங்கள அதிபர் மகிந்த இராஜபக்சே, அன்றைய இராணுவ அமைச்சர் மைத்ரிபால சிறிசேனா உள்ளிட்ட அனைவரும், அனைத்துலகக் குற்ற இயல் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.

ஈழத்தமிழர் இனப்படுகொலையை மனித உரிமைகள் கவுன்சில், .நா. பொதுச்சபை மற்றும் பாதுகாப்பு சபையின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

.நா. பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் அவர்கள், போரில் நாசமாக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று, நடந்த படுகொலைகளை விசாரித்து அறிந்து, இன்றைக்கும் தமிழ் ஈழம் நாஜிகளின் வதை முகாம் போல ஆக்கப்பட்டு, சிங்கள இராணுவம் அங்கே நிலைகொண்டு இருப்பதையும், சிங்களக் குடியேற்றங்கள் பலவந்தமாக அமைக்கப்பட்டுள்ளதையும், போரில் காணாமல் போனவர்களின் கதி என்ன ஆயிற்று என்பது இன்றுவரை கண்டு அறிய முடியாத அவலம் நேர்ந்துள்ளதையும் அறிய வேண்டும்.

இனி சிங்களவர்களோடு ஈழத்தமிழர்களுக்கு சக வாழ்வு சாத்தியம் இல்லை என்பதால், ஜெனீவா ஒப்பந்தத்தின்படி, தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஐ.நா. பொதுச்செயலாளர் அறிவிப்பதோடு, சிங்கள இராணுவத்தையும், குடியேற்றங்களையும் வெளியேற்றி விட்டு, .நா. வின் மேற்பார்வையில் ஈழத்தமிழர் தாயகத்திலும், உலகெங்கிலும் வாழும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடமும், பொது வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இது மட்டும்தான் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி அமைக்கும்.

இந்த வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில், 1905 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை எந்தெந்த தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டி, .நா. சபையால் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சுதந்திர நாடுகள் ஆயின என்ற பட்டியலும் தரப்பட்டு உள்ளது.

இந்தக் கோரிக்கை மனுவுடன், .நா. மனித உரிமைகள் கவுன்சிலில் வைகோ 11 முறை ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் கவுன்சிலை விட்டு 29 ஆம் தேதி மாலையில் வைகோ வெளியே வரும்போது, அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய மனித உரிமைகள் கவுன்சிலின் பாதுகாவலர்களுக்கு வைகோ நன்றி தெரிவித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இன்று (30.9.2017) காலையில், .நா. மன்றத்திற்கு முன்பு உள்ள முருகதாசன் திடலில் அமைக்கப்பட்டு இருந்த ஈழத்தமிழர் இனப்படுகொலை புகைப்படக் கண்காட்சியை நிறைவு செய்து வைத்தார்.

 

தாயகம்                                                           தலைமைக் கழகம்
சென்னை - 8                                                      மறுமலர்ச்சி தி.மு..,
30.09.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)