உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக! மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணிப் பொதுச் செயலாளர் திருப்பூர் சு. துரைசாமி அறிக்கை

விவகாரங்கள்: மனித உரிமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Fri, 20/10/2017

 

 

 

 

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக!

மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணிப் பொதுச் செயலாளர் திருப்பூர் சு. துரைசாமி அறிக்கை

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டம், பொறையார் பணிமனையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் தங்கி ஓய்வெடுப்பதற்கhக அமைக்கப்பட்டிருந்த ஓய்வு விடுதிக் கட்டடம் பழுதாகி இடிந்து விழுந்த கhரணத்தினால் அங்கு தங்கியிருந்த எட்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.
 

தமிழ்நாடு அரசாங்கமும், போக்குவரத்துக் கழகமும் இறந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் ரூ. 10 இலட்சம் நஷ்ட ஈடாக வழங்கக் கோரியும், இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்குப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை கொடுக்க வேண்டும் என்றும் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 

‘தாயகம்’ திருப்பூர் சு. துரைசாமி

சென்னை - 8 பொதுச் செயலாளர்,

20.10.2017                                     மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)