தமிழருவி மணியன் அவர்களின் இராமாயண ரகசியம்! நூல் வெளியீட்டு விழாவில் வைகோ

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், புகைப்படங்கள்

Date: 
Sat, 28/10/2017

 

 

 

 

தமிழருவி மணியன் அவர்களின்  இராமாயண ரகசியம்!

நூல் வெளியீட்டு விழாவில் வைகோ

 

ராமாயண ரகசியம்! 01.09.2017 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழருவிமணியன் நூல் வெளியீட்டு விழாவில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ உரை ஆற்றினார். அவரது உரை வருமாறு:

 

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,

நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா

அலகுஇலா விளையாட்டு உடையார் - அவர்

தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

என்று தொடங்கி, எண்ணற்ற பாடல் களுடன்  இராமாயணம் என்ற காவியத்தைப் படைத்து,

 

தமிழ்க் கவிதைக்கோர் கம்பன்; ‘யாம் அறிந்த புலவரிலே கம்பனைப் போல்என்று எட்டயபுரத்துக் கவிச்சிகரம் வர்ணித்த கம்ப இராமாயணம்தமிழ் நிலத்துப் பண்பாட்டுக் காவியம் என்பதை அறுதியிட்டு உறுதி செய்து ஆய்வுநூலாக இராமாயண ரகசியம்என்ற தலைப்பில் தந்து இருக்கின்ற ஈடு இணையற்ற படைப்பாளி, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர்,

 

அறம் சார்ந்த வாழ்வை மேற்கொண்டு, தன் நெஞ்சில் பட்ட நியாயத்தை, எதற்கும் எவருக்கும் அஞ்சாமல் துணிந்து சொல்லு கின்ற அறம் பாடும் ஆற்றலாளர்; தென்றல் தவழும் குற்றால மலையில் தேனருவி கொட்டும் செண்பக நதி அருவி கொட்டும், அப்படி அருவிகள் கொட்டுவதைப் போல இந்த இளைஞனின் நாவில் தமிழ் அருவி கொட்டுகின்றது என்று தியாகச் சுடர் காமராசர் அவர்களால் பாராட்டப்பட்டு,

 

வெட்டுப் பாறைகளில் உருண்டு ஓடுகின்ற வெங்கல மணியைப் போன்ற ஓசை நயத் துடன் உரையாற்ற வல்லவரும், தலை சிறந்த எழுத்தாளரும, விமர்சகரும் இந்த எளியவன் மீது எல்லையற்ற பாசத்தைப் பொழிகின்றவருமான, என்னுடைய ஆருயிர்ச் சகோதரர் தமிழருவி மணியன் அவர்களே,

 

ரௌத்திரம்வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியில் துவக்க உரை நிகழ்த்திய ரௌத்திரம் பொறுப்பு ஆசிரியர் மதிப்பிற்குரிய குமரையா அவர்களே,

 

சில நிமிடங்களே என்றாலும் சிந்திக்கவும், மகிழ்ச்சியில் திளைக்கவும் வைத்த திரை உலகக் கலைஞர் சகோதரர் மயில்சாமி அவர்களே,

 

திரை உலகத்தின் தவப்புதல்வன்என்ற தலைப்பில் ரௌத்திரம் இதழில் தொடர் கட்டுரைகளாகத் தமிழருவி மணியன் அவர்கள் எழுதி வந்தவற்றை நூலாகத் தொகுத்து,

 

அந்த நூலுக்கு ஆய்வுரை நிகழ்த்த வல்லார் கலை உலகில் எவர்? என்று சிந்தித்து, உயர்ந்த மனிதன் என்கின்ற அந்த அற்புதமான திரைக்காவியத்தில், பெற்றெடுத்த தந்தை என்று தெரியாமல் துடிக்கின்ற அந்த இளம்பிள்ளையை, சவுக்கால் அடித்து உதைத்துத் துன்புறுத்து கின்ற வேளையில் உணர்ச்சிக் கொப்புளமாக நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுத்து நடித்த நடிகர்,

 

கலை உலகில் ஒழுக்க சீலர்களின் எண்ணிக்கை குறைவு என்ற விமர்சனம் எழுகின்ற காலத்தில், ஆண்டுதோறும் ஐயப்பனை வழிபடச் சென்றது மட்டும் அல்ல ஒழுக்க நெறியில் வாழ்ந்தவர் வில்லன் நடிகர் நம்பியார் என்றால், அவரைப் போலக் கலை உலக வாழ்வில் கறைபடாத வாழ்வை மேற்கொண்டு இருக்கின்ற ஒழுக்க சீலராகவே வாழ்ந்து கொண்டு இருக்கின்ற, கலை உலகில் சாதனைகளைப் படைத்துவிட்டு ஓய்வு எடுக்கச் செல்லாமல், முண்டாசுக் கவிஞனின் பாடல்களை மேடை களில் கர்ஜிக்கவும், கம்பனின் காவியத்தில் தேர் உருண்டு ஓடுவது போன்ற ஓசையும் அந்தப் பாடலில் இருக்கும்; அனுமன் விருட்சங்களின் கிளைகளை ஒடித்து நொறுக்குகின்றபோது அசோகவனத்தில் மரங்கள் சடசடவென முறிகின்ற சத்தம் கேட்கும்; அத்தயை ஓசை நயம் கொண்ட கம்ப இராமாயணப் பாடல்களுள் 100 பாடல் களை அட்சரம் பிசகாமல் உச்சரித்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இரண்டரை மணி நேரம் அரிய உரைகளை நிகழ்த்தியவர்;

 

இந்தத் துணைக்கண்டத்து இரண்டு இதிகாசங்களுள் மற்றொன்று மகாபாரதம்; அதை நான் பெரிய எழுத்துகளில் ஐந்தாம் வகுப்பில் படித்தவன்; ராஜாஜி அவர்கள் எழுதிய வியாசர் விருந்தை 8 ஆம் வகுப்பில் படித்தவன்; ‘மகாபாரதம் பேசுகிறதுஎன்று சோ இராமசாமி அவர்கள் ஆய்வு செய்து எழுதிய தொடரையும் படித்தவன்; அந்த மகாபாரதத்தையும் இரண்டரை மணி நேர உரையாக ஆக்கித்தந்து, சக்கரவர்த்தித் திருமகனையும், வியாசர் விருந்தையும் படைத்த இராஜாஜி இலக்கியத்தில் வாழ் கின்றார்; அவற்றை எல்லாம் உரைக் காணொளிகளாக ஆக்கி, அருந்தமிழுக்குத் தொண்டு செய்கின்ற ஆருயிர்ச் சகோதரர் எனதருமைச் சிவகுமார் அவர்களே,

 

ஆயிரம் பணிகள் இருக்கும்; அடுத்து உயர் நீதிமன்றத்தில் வாதாட வேண்டிய வழக்குகள் நூற்றுக்கணக்கில் இருக்கும்; இத்தகைய நிகழ்ச்சிகளில் தவறாமல் முன் வரிசையில் வந்து அமர்கின்ற என்னுடைய மரியாதைக்குரிய மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் உள்ளிட்ட அன்புச் சகோதரர்களே, இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அவர்களே, இனிய சகோதரர்களே, தமிழ் அன்பர்களே, செய்தியாளர்களே, தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவாளர்களே சிரம் தாழ்ந்த வணக்கம்.

 

என் நெஞ்சை நிரந்தரமாக அள்ளிக் கொண்டவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அவருக்கு நிகரான ஒரு நடிகன் உலகில் இதுவரை பிறந்தது இல்லை; இனி பிறக்கப் போவதற்கு உத்தரவாதமும் இல்லை.  இமய மலையின் எந்தப் பகுதி சிறப்பானது என்று கூற முடியுமா? கடல் பரப்பில் அழகான இடம் எது? என்று சுட்டிக் காட்ட முடியுமா? நடிகர் திலகம் சிவாஜி உயர்ந்த இமய மலை; பரந்து விரிந்த ஆழ்கடல். அவரது கண்களில் வசீகரக் கூர்மையைச் சொல்லுவேனா? கம்பீரத் தோற்றத்தைச் சொல்லுவேனா? 9 பாவனைகளை 90 வகையாக நடித்துக் காட்டுகின்ற ஆற்றலைக் கூறுவேனா? இப்படி ஒரு நடிகன் உலகில் இதுவரை பிறந்தது இல்லை; இனி பிறக்கப் போவதற்கு உறுதியும் இல்லைஎன்று கவியரசர் கண்ணதாசன் கூறினாரே, அந்த நடிகர் திலகத்தைப் பற்றிய நூலையும் இங்கே வெளியிட்டார்கள்.

 

இன்றைய நிகழ்வில் எனக்குக் கம்ப இராமாயணத்தைத் தலைப்பாகக் கொடுத்து இருப்பதால், அதற்குள் செல்லுகின்றேன்.

 

சக்கரவர்த்தித் திருமகன் தீட்டிய இராஜாஜி, மறைந்து இருந்து அம்பு எய்தி வாலியைக் கொன்றது அறம் அற்ற செயல் என்று பதிவு செய்த இராஜாஜி, திரைப்படங்களைப் பார்க்காத இராஜாஜி, ஓரிரு படங்களை மட்டுமே பார்த்தார். எம்.ஏ. வேணு பிக்சர்ஸ் தயாரித்த, ஏ.பி.நாகராசன் வசனம் எழுதிய, இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் அதிகமான பாடல்களைப் பாடிய, என்.டி. இராமாராவ் இராமனாகவும், நாட்டியப் பேரொளி பத்மினி சீதையாகவும், இலங்கை வேந்தன் இராவணனாக டி.கே. பகவதியும் நடித்த சம்பூர்ண இராமாயணம் திரைப்படத்தில், அன்றைக்குத் தனிக் கதாநாயகனாகப் புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்த நடிகர் திலகம், சில நிமிடங்களே வந்து போகின்ற ஒரு துணைப் பாத்திரமாக பரதன் பாத்திரத்தில் வருகின்றார்.

 

பரதன் தந்த திருப்புமுனை

 

இராமாயணம் நாடகத்தைப் பார்க்கின்றார் இராஜாஜி. நான் சிவாஜிகணேசனைப் பார்க்கவில்லை; பரதனை மட்டுமே பார்த்தேன்என்று பாராட்டினார்.

 

கேகய நாட்டில் இருந்து வருகின்றான் பரதன். பாட்டன் அரண்மனையில் இருந்து சத்ருக்கனோடு வருகின்றான். சூரிய குலத்தின் கொடி தாழ்ந்து கிடக்கின்றது. வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. கண்ணில்பட்ட சிலரின் கண்களில் துயரம்; பரதனைப் பார்த்ததும் தலை கவிழ்ந்து போகின்றார்கள்.

 

நெஞ்சம் அஞ்சியவனாக அரண்மனைக்குள் நுழைகிறான் பரதன்.

 

தந்தை எங்கே? அண்ணன் இராமன் எங்கே? சக்கரவர்த்தியாக முடிசூட வேண்டிய இராமன் எங்கே என்று விழிகள் தேடுகின்றன.

 

ஒன்றும் புரியவில்லை. என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. அங்கம் பதற தாய் கைகேயி இருக்கின்ற அரங்கத்திற்குள் நுழைகிறான். நடந்ததை அறிகிறான்.

 

கொலைகாரி, கொற்றவனின் உயிருக்கு உலை வைத்த கொடுமைக்காரி; அன்னை கைகேயி என்று அழைத்த அண்ணன் இராமனை, அரண்யத்திற்கு அனுப்பி வைத்த அக்கிரமக்காரி; கணவனைக் கொன்ற காதகி, ஒரு பாவமும் அறியாத பரதனைப் பழிக்கு ஆளாக்கிய பழிகாரி; சூரிய குலத்தின் கொடுமையைக் குலைத்த கொடுமைக்காரிஎன்று கொதிக்கிறான்.

 

பரதா, என்ன சொல்லுகிறாய்?’ என்று பதறு கிறாள் கைகேயி.

 

அடி காதகி, உன்னை அணுஅணுவாகச் சிதைத்து அங்கங்களைத் துண்டுகள் ஆக்கி, விலங்குகளுக்கு இரையாகப் போட்டாலும் என் ஆத்திரம் தீராது; ஆனால், பெற்ற தாயைக் கொன்ற அக்கிரமக்காரனே, என் முகத்தில் விழிக்காதே என்று என் அண்ணன் கூறி விடுவானே என்பதால் உன்னை உயிரோடு விடுகிறேன். அவன் முகத்தில் விழிக்க முடியாமல் போய்விடுமே என்பதால், உன் முகத்தைச் சிதைக்காமல் விடுகிறேன். எவ்வளவு பெரிய பழிக்கு என்னை ஆளாக்கி விட்டாய்? ஓவியனின் எழுத்துக்கும், கவிஞனின் கற்பனைக்கும் எட்டாத கொடூரமான காதகி நீ; உன்னைப் பார்ப்பதும் உன்  முகத்தில் விழிப்பதும் உன் பக்கத்தில் இருப்பதும் பரதனுக்குப் பழியைத் தேடித்தரும். இனி, நீ எனக்குத் தாயும் இல்லை; நான் உனக்கு மகனும் இல்லை

 

இதுதான் சிவாஜி. (கைதட்டல்).

 

இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டுத்தான் இராஜாஜி அப்படிக் கூறினார்.

 

ஆக, எடுத்த எடுப்பிலேயே இராமாயணத் தின் ஒரு திருப்புமுனைக் காட்சிக்குள் பரதன் கொண்டு வந்து நிறுத்தி விட்டான்.

 

கம்ப இராமாயணம் என்பது தமிழ்ப் பண்பாட்டின் அடித்தளத்தில் நிலைத்து, தமிழ்க் குலத்திற்காகப் படைக்கப்பட்டது என்பதனை, மிக நுட்பமாக, தெள்ளத் தெளிவாக இந்த நூலில் தந்துவிட்டார் தமிழருவி மணியன்.

 

வால்மீகியில் இருந்து பல இடங்களில் முற்றிலும் மாறுபடுகின்றார் கம்பன். மூல நூல் வால்மீகிதான். ஆனால், அவர் கங்கைக் கரையில் கண்ட பண்பாட்டுக்கும், காவிரிக் கரையில் கம்பன் கண்ட பண்பாட்டுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கம்பனின் காவியம் நிலைநாட்டுகின்றது.

 

புலன் அடக்கம்.. அதுதான் இராமாயண இரகசியம் என்ற இந்த நூலின் மையக்கரு. ஒழுக்கம், அதுவே இந்த நூலின் உட்கரு. அந்த ஒழுக்கம் சிதைந்து வருகின்ற தமிழ் நாட்டில், பண்பாடு நாசமாகி வருகின்ற தமிழ்நாட்டில், எதிர்காலம் நரகக்குழிக்குள் கொண்டு போய்ச் சேர்த்துவிடுமோ? ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்த அறவாழ்வு, தூக்கி நிறுத்திய அறம், மொழி, அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப் போய்விடுமோ என்ற கவலை நம்முடைய இதயத்தைத் துளைத்துக் கொண்டு இருக்கின்ற நேரத்தில் இந்த நூலைத் தந்து இருக்கின்றார் தமிழருவி மணியன். அவருக்குத் தமிழ்க்குலம் நன்றிக்கடன் பட்டு இருக்கின்றது. (கைதட்டல்).

 

இனி நாம் கோசல நாட்டுக்குச் செல்வோம். அங்கே வால்மீகி வருணிப்பதற்கு சரயு நதியைத் தவிர வேறு எதுவும் இல்லை. அங்கே அலைகடல் கிடையாது. எனவே, ஆற்றுப் படலத்தை ஒரே பாடலில் முடித்து விட்டான் வால்மீகி.

 

இங்கே, ஆற்றுபடலத்திற்கு மட்டுமே 14 பாடல்களைக் கம்பன் எழுதுகிறான்.

 

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்

காசு அலம்பு முலையவர் கண் எனும்

பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்

கோசலம் புனைஆற்று அணி கூறுவாம்

இதுதான் கம்பனின் பாடல். ஆசலம்புரி ஐம்பொறி வாய் என்பது ஐம்பொறிகள். காசு அலம்பு முலையவர் கண் எனும் பூசல் அம்பும், இந்தக் கண் ஒரு பூசல் அம்பு. தமிழருவி கூறுகின்றார்.

 

சிவஞானபோதத்திற்கு மாபெரும் உரை வகுத்த மாதவச் சிவஞான சுவாமிகள் நான்கு பொறிகளையும் நின்று பற்றும் பொறிகள்என்றும்;

 

கண்ணை மட்டும் சென்று பற்றும் பொறிஎன்றும் கூறினார்.

 

அதனால்தான், கவிஞர்பிரான் கண்ணை மட்டும் தனியே எடுத்து வித்து கண் எனும் பூசல் அம்பும்என்று கூறுகிறான் என்பார் பேரறிஞர் அ.ச.ஞானசம்பந்தன்.

 

கடற்கரையில் வாழ்க்கை. ஆனால், அங்கே கடல் இல்லை. இங்கே காவிரிக்கரை வாழ்க்கை. குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தலாக இருந்து, இனி பாலை வனமாகத் திரிந்து போய்விடுமோ என்று நாம் அஞ்சிக்கொண்டு இருக்கின்ற தமிழ் நாட்டில்மருதத் திணையைப் பற்றிக் கூறுகின்றார்.

 

மருதத் திணையில்  பரத்தையரைப் பற்றிய செய்தியே அதிகமாகப் பேசப்படுவதை சங்க இலக்கியங்களில் நம்மால் பார்க்க முடி கின்றது. இழிந்த ஒழுக்கமாய்ப் பரத்தையர் உறவு பழிக்கப்படவில்லை.

 

தொல்காப்பியத்தில்,

 

பாணன் கூத்தன் விறலி பரத்தை யாணம் சான்ற அறிவர் கண்டோர்

 

என்றே சொற்றொடரில் கூறுகின்றார்.

 

வாழ்வில் மண்டிக் கிடந்த மாசை அகற்ற விரும்பிய வள்ளுவர், அறத்துப்பாலில் இல்லறவியலில் பிறனில் விழை யாமையை ஆடவர்க்கு வற்புறுத்தியதுடன் நில்லாமல்,

 

பொருட்பாலில் நட்பியலில் வரைவில் மகளிரைப் பற்றிப் பேசுகிறார்.

 

பரத்தையர் என்று வள்ளுவர் விலை மகளிரைப் பழிக்க விரும்பாமல், மணம் செய்து கொள்ளாதவர் என்பதை உணர்த்த, ‘வரைவு இல் மகளிர்என்கிறார்

 

(வரைவு -மணம்) வள்ளுவருக்கு முன்னும் பின்னும் யாரும் பயன்படுத்தாத சொல் வரைவில் மகளிர்’.


 

ஒருதலைக் காதல் என்னும் கைக்கிளைக்கும் இடம் இல்லை. ஒத்த அன்புடைய காதலர் வாழ்க்கையாம் அன்பின் ஐந்திணையே வள்ளுவரால் போற்றப்படுகின்றது.


 

முன்னோர் வகுத்த மருதத்திணை இலக்கணத்தை முற்றாகப் புறக்கணித்த வள்ளுவரின் காமத்துப் பாலில், காதல் தலைவன் பரத்தையரை நாடிச் செல்வது இல்லை.


 

வள்ளுவர் வகுத்து அளித்த அறவாழ்வைத் தன்னுடைய காப்பியத்தின் வழி தமிழரிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதையே கொள்கையாகக் கொண்ட கம்பன், ஏறக்குறைய 700 குறட்பாக்களைத் தன் காவியத்தில் கையாண்டு இருக்கின்றான்.

 

வள்ளுவர் வழியில் மருதநில வாழ்க்கையை 14 பாடல்களில் வருணிக்கும் கம்பநாடன், மருதத் திணைக்குரிய பரத்தையர் பற்றி ஒரு சொல்கூடச் சொல்லவில்லை.

ஆண்வர்க்கம் பிறன்மனையின் மீதும் நேசம் வைத்தது.

 

ஆணின் கற்பு அவசியம் என்று சிந்தித்த வள்ளுவர் பிறனில் விழையாமைஅதிகாரத்தைப் படைத்தார்.

 

பிறன்மனை நோக்காத பேராண்மை     சான்றோர்க்கு

அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு’ -        (குறள் 148).

 

அதேபோலத்தான், காமத்துப்பாலில், ஒரு இடத்தில் கூட பரத்தையைப் பற்றிய செய்தி கிடையாது. அறத்துப்பால், பொருட் பால், இன்பத்துப்பால். அந்த இன்பத்துப் பாலில், பரத்தையைப் பிரிதல், வரைவின் மகளிர் குறித்து எந்தச் செய்தியும் கிடை யாது. ஒரு பாடலில் கூட.

 

பொது மகளிர் என்று அழைக்காமல், விலை மகளிர் என்று அழைக்காமல், அவர்களை வரைவின் மகளிர்என்றுதான் வள்ளுவர் குறிப்பிடுகின்றார். அதற்குத் தமிழருவி விளக்கம் கூறுகிறார். வரைவுஎன்பது திருமணம். திருமணம் செய்து கொள்ளாத பெண்டிர்தான் வரைவின் மகளிர்.

 

இது எங்கே? பொருட்பாலில், நட்பு இயலில் கூறுகின்றார். யார் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதை வரையறுத்துக் கூறுகின்றபொழுது, ‘வரைவின் மகளிர் நட்பு கூடாதுஎன்கிறார் வள்ளுவர்.

 

மருதத் திணையில் பரத்தை இல் பிரிதல் என்கின்ற வகையில் சங்க இலக்கியத்தில் நிரம்பச் செய்திகள் இருக்கின்றன. அது தவறு அல்ல. அதைப்பற்றி எண்ணற்ற பாடல்கள் இருக்கின்றன. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. மனதை மயக்கு கின்ற பாடல்கள் அதில் ஏராளம் உண்டு. அப்படிப் பிரிந்து சென்ற கணவனிடம் மனைவி பொய்க்கோபம் கொள்வதும், ஊடல் கொள்வதும் எல்லாம் இலக்கிய ரசனைக்கு உரிய காட்சிகள். இவை எதுவுமே கிடையாது திருக்குறளில்.

 

கள் உண்ணாமை

 

கள் உண்டு மயங்கிக் கிடந்தார்கள்என்ற வரிகள் சங்கப் பாடல்களில் நிரம்ப உள்ளன. எனவே, கள் உண்ணாமை பற்றிக் கூறுகின்றார் திருவள்ளுவர். அவரது காலத்திற்கு முன்பு நிலவிய பண்பாடு கள் உண்பது. வள்ளுவர் வலியுறுத்திய பண்பாடு, ‘கள் உண்ணாமை.


 

இராமாயணம் ஓர் இலக்கியம்


 

நான் இதிகாசத்தை இதிகாசமாகப் பார்க்கின் றேன்; இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கின்றேன். அப்படி இராம காதையை நான் இலக்கியமாகப் பார்க்கின்றேன். அதில், மருதத் திணையைப் பற்றி 14 பாடல்கள் வருகின்றன. ஆனால், இதற்கு முன்பு என்ன கருத்து சொல்லப்பட்டதோ, அந்தப் பரத்தை இல் பிரிதல் கிடையாது. அதனால்தான், இராமன் ஒரு இடத்தில் சொல்லுகின்றான்.


 

இந்த இப்பிறவியில் இரு மாதரைச் சிந்தை யாலும் தொடேன்என்கிறான்.

 

சிந்தையாலும் தொடேன்.ஆம்; இந்த எண்ணம் இருக்கின்றதே இது மிகவும் ஆபத்தானது. நம் சிந்தை இருக்கின்றதே, அது அபாயமானது. இன்றைய அறிவியல் உலகத்தில் கண் மூடிக் கண் திறப்பதற்குள் கண்டம் விட்டுக் கண்டம் பாய்கின்ற ஏவுகணைகள் இருக்கலாம். ஆனால், வள்ளுவன் வகுத்த அந்தத் திருக்குறளில் அண்ட சராசரங்களைக் கடந்து நம் எண்ணங்கள் பாயும் என்று திருவள்ளுவ மாலையில் பாடல் இருக்கின்றது.

மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாணடியால்

ஞால முழுதும் நயந்தளந்தான்

வள்ளுவர் தம் குறட்பாவால்

உலகத்தார் உள்ளத்தை எல்லாம் அளந்தார் ஓர்ந்து

 

இந்த உலகத்தை அளந்தான்; விண்ணை அளந்தான், மண்ணை அளந்தான், கடைசி யாக மாபலியின் தலையில் கால் வைத்தான் திருமால். வள்ளுவர்தம் குறள் வெண்பா அடியில் உலகத்தார் உள்ளத்தை எல்லாம் அளந்தார் ஓர்ந்து.

 

எனவே, ஒரு உள்ளத்தின் எண்ணங்கள் நொடிப்பொழுதில் அண்ட சராசரங்களைக் கடந்து பாயக் கூடியது. அந்த நிலையில், என் சிந்தையாலும் இரு மாதரைத் தொடேன் என்று இராமன் சொல்லுவது ஆழமான கருத்து.  சிந்தையாலும் கூடப் பிற மாதரை எண்ணக்கூடாது என்கின்ற தமிழன், பெண்ணின் கற்புக்கு என்ன இலக்கணம் வைத்து இருக்கின்றான் தெரியுமா?

 

எந்த ஆடவரின் மனதிலும் தவறான எண்ணத்தை ஏற்படுத்தாத ஒழுக்கத்தைக் கொண்டவள். இதுவும் தமிழ் இலக்கியத்தில் தான் இருக்கின்றது. இந்தக் காப்பியத்தில் புலன் அடக்கத்தை மையமாக வைத்து இந்த நூலைத் தமிழருவி மணியன் எழுதி இருக்கின்றார்.

 

இப்போது நாம் தொடங்கிய இடத்திற்கு வருவோம். இராம காதையின் தொடக்கத் திற்கு வருவோம்.

 

கைகேயி அழைக்கின்றாள் இராமனை. எதற்கு என்று தெரியவில்லை. முடி சூட வேண்டிய நாள் அது. அன்னையாக அவன் போற்றிய கைகேயி அழைக்கின்றாள்.

 

ஆழிசூழ் உலகம் எல்லாம்

பரதனே ஆள, நீ போய்த்

தாழ் இருஞ் சடைகள் தாங்கி,

தாங்க அருந் தவம் மேற்கொண்டு

பூமி வெங் கானம் நண்ணி,

புண்ணியத் துறைகள் ஆடி,

ஏழ்-இரண்டு ஆண்டின் வா என்று

இயம்பினான் அரசன் என்றாள்

நீ பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்து விட்டு வாஎன்று உன் தந்தை தசரசன் சொன்னார் என்கிறாள்.

 

அப்போது இராமன் சொல்லுகிறான், கம்பன் வருணிக்கின்றான். அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்த முகம்என்கிறான். அன்றைக்குத்தான் பூத்த தாமரை மலர் போல மலர்ந்து இராமன் முகம்என்கிறான்.

மன்னவன் பணி அன்றாகின்,

நும் பணி மறப்பெனோ? என்

பின்னவன் பெற்ற செல்வம்

அடியனேன் பெற்றது அன்றோ?

என் இனி உறுதி அப்பால்?

இப் பணி தலைமேல் கொண்டேன்;

மின் ஒளிர் கானம் இன்றே

போகின்றேன்; விடையும் கொண்டேன்.

இப்பொழுதே புறப்படுகின்றேன் காட்டுக்குஎன்கிறான் இராமன்.

 

கம்பன் சொல்லுகிறான்: தாயென நினைப் பான் முன்னே, தமியள் கூற்று என வந்தாள்.

 

அவளைத் தாய் என நினைக்கின்றான் இராமன்; ஆனால், எமன் போல வந்து நிற்கிறாள் கைகேயி. செய்தியைக் கேள்விப் பட்டு எரிமலையாக வருகிறான் இலக்குவன். அவனது கோபத்தைத் தணிக்க எண்ணிய இராமன்,

 

நதியின் பிழை அன்று

நறும் புனல் இன்மை; அன்றே

பதியின் பிழை அன்று;

பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழை அன்று;

மகன் பிழை அன்று; மைந்த!

விதியின் பிழை; நீ இதற்கு

என்னை வெகுண்டது? என்றான்.

 

நதியில் தண்ணீர் இல்லாதது நதியின் குற்றம் அல்லவே? நம் தந்தையின் பிழையும் அல்ல; நம்மைக் கானகம் ஏகச் சொன்ன தாய் கைகேயி பிழையும் அல்ல; இது விதியின் பிழை அப்பா.

 

அதற்கு இலக்குவன் சொல்லுகிறான்: விதிக்கும் விதியாகும் என் வில்தொழில் காண்பாய்என்கிறான்.

 

அவனை அமைதிப்படுத்திப் போகிறான் இராமன். பிரிவினும் சுடுமோ பெருங்காடு?’ என்று உடன் செல்லுகிறாள் சனகனின் மகள். மிதிலையின் அரண்மனையில் வளர்ந்தவள் சீதை. கங்கைக் கரையில்  படகில் அக்கரைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறான் குகன். நால்வர் ஐவர் ஆகின்றார்கள்.

 

இந்த இடத்தில்தான் வால்மீகிக்கும் கம்பனுக்கும் உள்ள வேறுபாடு. இராமனும் சீதையும் பாறாங்கற்கள் மீது புற்களைப் பரப்பிப் படுத்து இருக்கின்றார்கள். இலக்குவன் வேறு பக்கத்தில் இருக் கின்றான். இதைப் பரதனிடம் குகன் விவரிக் கின்றபொழுது, அவர்கள் படுத்து உறங்கிய இடத்தில் அங்கே இருந்தான் என்று சொல்லுகிறான். ஆனால் கம்பன், குகன் சீதையைப் பார்க்கவே இல்லை என்கிறான்.

 

சங்க இலக்கியத்தில் இப்படி ஒரு காட்சி இருக்கின்றது.

 

தலைவன் மீது காதல் கொண்ட தலைவி, தாய்க்குத் தெரியாமல் வீட்டை விட்டுப் போய்விட்டாள். செவிலித்தாய் மூலம் செய்தி அறிந்த தாய், மகள் தன் காதலனோடு போய்விட்டாளே என்று கவலையோடு தேடி வருகிறாள். எதிரே ஒரு இளைஞனும், இள நங்கையும் வருகின்றார்கள். அவளிடம் இந்தத் தாய் கேட்கின்றாள்.

 

என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும் போவதைக் கண்டீரோ?’

 

அதற்கு அந்த இளைஞன் சொல்லுகிறான்: நான் ஒரு இளைஞனைப் பார்த்தேன். வேறு எதுவும் பார்க்கவில்லை.

 

அந்தப் பெண் சொல்லுகிறாள்: நான் ஒரு இளநங்கையைப் பார்த்தேன். வேறு எதையும் பார்க்கவில்லை. (பலத்த கைதட்டல்). இது சங்க இலக்கியத்தில் இருக்கின்றது.

 

இந்தப் பண்பாடு உலகத்தில் வேறு எந்த இனத்தில் உண்டு? எந்த நாகரிகத்தில் இருக்கின்றது? எந்தக் குலத்தில் உண்டு?

 

அதைப்போல, இங்கே கம்பன் வருணிக் கின்றான், குகன் சொல்வதாக.

 

என் தந்தை இராமனும், என் தாய் சீதையும், சகோதரன் இலக்குவனும் எப்படி இருந் தார்கள்? எங்கே இருந்தார்கள்?

 

பாறாங்கற்கள் மீது புற்களை விரித்து இராமனும் சீதையும் துயில் கொள்ள, தொலைவில் இருந்து காவல் காக்கின்றான் இலக்குவன்.

 

அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச

வில்லை ஊன்றிய கையொடும்  வெய்துயிர்ப்பொடும்

கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்! கண்கள் நீர்ச்சொரிய, கங்குல்

எல்லை காண்பு அளவும் நின்றான்; இமைப்பிலன் நயனம்

என்றான்.

 

இராமனும் சீதையும் உறங்க, உயர்ந்த தோளாய், உன் சகோதரன் இலக்குவன் கண்களில் நீர் சொரிய, கண்ணீர் வடித்துக் கொண்டே காவல் புரிகின்றான். கண்களை மூடுகின்ற வேளையிலும் எதிரிகள் எவரேனும் வந்துவிடக் கூடும் என்று, கண்கள் இமைக்காமல், இமைப்பிலன், வெய்துயிர்ப்போடு, உடம்பெல்லாம் வியர்க்க, வேதனையில் காவல் புரிகின்றான் என்றான்.

 

இப்படி இந்தக் காட்சியைக் கொண்டு வருகின்றான் கம்பன்.

 

இரண்டு கதாபாத்திரங்கள்

இனி வேறொரு கட்டம்.

சூர்ப்பனகை வருகின்றாள். இந்தக் காவியத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் மிகமிக முக்கியமானவை. ஒன்று கைகேயி, இன்னொன்று சூர்ப்பனகை.

 

காவியத்தின் இறுதிக் காட்சியில் கைகேயியும் கோசலையாகவே போற்றப் படுவாள். சுமத்திரையாகவே போற்றப் படுவாள். ஆனால், கடைசிக் காட்சிகளில் சூர்ப்பனகையைக் கம்பன் காட்டவே இல்லை. அதில்தான் சூட்சமம் இருக் கின்றது.

 

வால்மீகி வருணிக்கின்றார். சூர்ப்பனகை கோரமான தோற்றம் கொண்டவள். கொடிய தோற்றம் கொண்டவள். ஆனால் நினைத்தால் அழகான தோற்றத்தை எடுத்துக் கொள்ளக் கூடியவள். அவள் அழகான தோற்றத்தோடு இராமனிடம் வந்து காதல் மொழி பேசுகிறாள். அப்போது இராமன் கொஞ்சம் வேடிக்கை செய்கிறான் வால்மீகியில்.

 

வேண்டுமென்றே இராமன் பேச்சுக் கொடுக் கிறான். இது பாத்திரத்தின் பெருமையை உயர்த்தாது. வால்மீகி அப்படித்தான் செய்கிறான். பேச்சுக் கொடுக்கின்றான் இராமன். நான் என் மனைவியோடு வந்து இருக்கின்றேன். என்னோடு என் தம்பி ஒருவனும் வந்து இருக்கின்றான்.  நீ அவனிடம் போய்ப் பேசு. ஒருவேளை அவன் உனக்கு உடன்படலாம்என்கிறான்.

 

இது வால்மீகி சொன்னது, கம்பன் இதைக் காட்டவில்லை.

 

பேச்சுக் கொடுத்து, அவளை உல்லாச மொழிகளைப் பேச வைத்து, காதல் மொழி பேச வைத்து, அவள் காமவயப்பட்டு இருப்பதைக் கண்டு, ‘என் தம்பி ஒருவன் இருக்கின்றான் அவனிடம் போ, அவன் தன் மனைவியைப் பிரிந்து வந்து இருக் கின்றான், நான் என் மனைவியோடு வந்து இருக்கின்றேன்என்கிறான் இராமன். நீ போனால் ஒருவேளை சரிப்பட்டு வந்து விடுவான்என்பது வால்மீகி காட்டும் காட்சி.

 

இலக்குவனனிடம் போகிறாள். அவன் சொல்லுகிறான்:

 

நான் மனைவி இல்லாமல்தான் வந்து இருக்கின்றேன். ஆனால், நீ என் அண்ணனுக்குத்தான் பொருத்தமானவள். அவனைத் திருமணம் செய்துகொண்டால் இரண்டாவது மனைவியாக இருந்தாலும் சுகமாக வாழலாம்என்கிறான்.

 

மீண்டும் இராமனிடம் போகிறாள் சூர்ப் பனகை. அப்போதுதான் சீதையைப் பார்க்கின்றாள். இவளது அழகினால் அல்லவா, இந்த இராமன் நமக்கு உடன்பட மறுக்கின்றான்?’ என்று அவளைக் கொன்று தின்று விட வேண்டும் என்று தீர்மானித்து முயற்சிக் கின்றாள்.

 

இப்பொழுது இராமன் இலக்குவனை அழைத்து, ‘இவளுக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்பித்து விடுஎன்கிறான். இலக்குவன் அவள் மூக்கை அறுக்கிறான், இந்தக் காட்சியை வால்மீகி ஒரே நாளில் முடித்து விடுகின்றான்.

 

கம்பன் முற்றிலும் வேறுபடுகின்றான். இராமனிடம் பேச்சுக் கொடுக்கின்றாள் சூர்ப் பனகை, அழகு மங்கையாக.  இராமனும் பேசுகிறாள். ஆனால், வால்மீகி சொல்வது போல, என் தம்பியிடம் போய் உல்லாச மொழி, பேசு அவனோடு வாழ்ந்து விடலாம் என்று கூறவில்லை கம்பன்.

 

எதுவும் நடக்காமல் காம தாகத்தால் இரவெல் லாம் அவள் துடிக்கிறாள். அந்த அழகனை எண்ணியெண்ணித் துடிக்கின்றாள்.

 

வால்மீகி காட்டும்போது, இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூன்று பேரும் இருக்கின்ற இடத்திற்கு சூர்ப்பனகை வரு கின்றாள். கம்பன் காட்டும்போது இராமன் தனியாக இருக்கும்போது வருகின்றாள். இரண்டுக்கும் வேறுபாடுகள் இருக் கின்றன.

 

அண்ணனும், தம்பியும் இருக்கின்ற இடத்தில் உல்லாச மொழி பேசுவது காவிரிக் கரைப் பண்பாடு அல்ல. அதனால் கம்பன் இராமனைத் தனியாக வைக்கின்றான்.  சீதையை அழித்து விட வேண்டும் என்று சூர்ப்பனகை முயற்சிக்கின்றபோதுதான் பாடம் கற்பிக்கின்றான்.

 

இலக்குவன் அவள் மூக்கை அரிகிறான், கொங்கைக் காம்புகளை அரிகிறான். 

 

இதன்பிறகு இராவணனிடம் வருகிறாள். இலங்கை வேந்தன், இசையிலே வல்லவன், ஏழிசை வித்தகன், வெள்ளியங்கிரியினை விடையின் பாகனோடு விண்தொட எடுத்தவன், கழற்றியவன், தேவர்களை வென்றவன், அந்த இலங்கை வேந்தன், இசை வல்லோன் இராவணனிடம் வருகிறாள்.

 

எதனால் இப்படி ஏற்பட்டது?’ என்று கேட்கிறான்.

 

அப்பொழுது அவன் மனதில் காதல் உணர்வை, காம உணர்வை ஊட்டுகின்றாள் சூர்ப்பனகை.

 

நான் நேரத்தைக் கருதிச் சம்பவங்களைச் சுருக்கமாகச் சொல்லுகின்றேன். இராவணன் மாரீசனை அனுப்புகிறான். அவன் ஏற்கனவே, தாடகை அடிபட்டபோது இவனும் அடிபட்டு வந்தவன். மீண்டும் போனால் அழிந்து விடுவோம் என்று அவன் அஞ்சுகிறான். நல்லுரை சொல்லுகிறான். கேட்கவில்லை. இராவணன் வாளால் தன்னை வெட்டிக் கொன்று விடுவான், இராமன் கையால் செத்தால் நல்லது என்று கருதி அவன் போகிறான். பொன்மான் வடிவம் எடுத்துப் போகிறான். அதைப் பிடிக்க இராமன் போகின்றபோது மாரீசன், ‘இலக்குவனா அபயம், சீதா அபயம்என்று குரல் கொடுக்க, அதைக் கேட்டுச் சீதை துடிக்கின்றாள்.

 

என் நாயகனுக்கு ஆபத்து வந்துவிட்டதோ? உடனே புறப்படுங்கள்என்கிறாள்.

 

மும்மூர்த்திகளாலும் என் அண்ணனை வெல்ல முடியாதம்மா.. என் அண்ணனை எவரும் நெருங்க முடியாதம்மா தாயேஎன்கிறான் இலக்குவன். எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கின்றான். அவள் பதற்றத்தில், கணவன் மீது கொண்டு இருக்கின்ற அன்பினால், பக்தியினால், எதைச் சொன்னால் அவன் போவான் என்று கருதி, நெருப்பினும் கொடிய வார்த்தை களை அவன் மீது வீசுகின்றாள். இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தான் நீ காத்து இருந்தாயா? என்று கேட்கின்றாள்.

 

அதைக் கேட்டுத் துடிதுடித்துப் போனான் இலக்குமணன். தன் தூளியில் இருந்து ஒரு அம்பை எடுத்துத் தரையில் ஒரு கோடு போட்டுவிட்டு, ‘இந்தக் கோட்டைத் தாண்டி வராதீர்கள் அம்மாஎன்று சொல்லிவிட்டுப் போகின்றான்.

 

அந்த வேளையில் இலங்கை வேந்தன் தவமுனிவன் வேடம் பூண்டு வரு கின்றான். பின்னர் அந்தக் கபட வேடம் கலை கின்றது. எனவே, சீதை தங்கி இருந்த பர்ணசாலையோடு அவளைத் தூக்கிக் கொண்டு போகின்றான்.

 

இதுதான் கம்பன். வான்மீகி சொல்வது போல அவளைத் தொட்டுத் தூக்கவில்லை, மண்ணோடு பெயர்த்துத் தூக்கிச் செல்லு கிறான் இலங்கை வேந்தன். அப்போது சடாயு வழிமறிக்கின்றான். இராவண னோடு போர் புரிகின்றான். அவனது இறக்கைகளை வெட்டி வீழ்த்து கிறான் இராவணன். குற்றுயிரும் குலையுயிரு மாகக் கிடக் கின்றான் இராவணன். இராம இலட்சு மணர்கள் சீதையை அங்கும் இங்கும் தேடி அலைந்து நடுக்கமுற்றவர்களாக வருகின்றார்கள். உயிர் பிரியும் தறுவாயில் கிடக்கின்ற சடாயுவைப் பார்க்கின்றார்கள். அவன் தகவல் சொல்லுகின்றான். அடுத்து என்ன செய்வது? என்று அவர்கள் திகைத்துக் கொண்டு இருக்கின்ற நேரத்தில் அனுமன் வருகின்றான்.

 

இது மிக முக்கியமான கட்டம்.

 

வாலி, சுக்ரீவனுக்கு இடையே மோதல். இந்தப் பிரச்சினையில் இராமன் பக்கம் நியாயம் இருக்கின்றதாவைகோ சொல்ல வில்லை, சக்கரவர்த்தி இராஜகோபாலச் சாரியார் சொல்லுகின்றார்.

 

அவன் இல்லறம் இழந்த வேதனையில் என்ன செய்வது? என்று தெரியாமல் தடுமாறுகின்றான்.

 

அந்த சக்கரவர்த்தித் திருமகன் இராமனே தடுமாறும்போது, சாதாரண மனிதனான எனக்கு அரசியலிலே தடுமாற்றம் வராதா? (கைதட்டல்).

 

என் உயிர் சீதையைக் காணவில்லை..அவள்தான் எனக்கு எல்லாம் என்று தடுமாறுகிறான். அப்பொழுது சுக்ரீவன் வருகின்றான்.

 

என் அண்ணன் வாலி மூவுலகைக் கலக் கியவன். அப்பேர்ப்பட்ட வீரன். பத்தாயிரம் மலைகளை பந்தாடக் கூடியவன். ஆயிரம் யானைகளுக்குச் சமமான வல்லவனான துந்துபியோடு மோதி, அவனைத் தூக்கி எறிந்தவன். துந்துபியின் சகோதரன் ஒரு மாயாவி. அவனோடு போர் புரிவதற்காக ஒரு குகைக்குள் போனான். நெடுநாள் யுத்தம் நடந்தது. ரத்தம் பெருகி வந்தது. வாலி இறந்து விட்டான். இனி மாயாவி தன்னையும் கொன்று விடுவான் என்ற பயத்தோடு, அந்தக் குகையை ஒரு பாறையால் அடைத்துவிட்டு வந்து விட்டேன். அமைச்சர் பெருமக்கள் எல்லோரும் சேர்ந்து நீ அரச பதவியை ஏற்றுக் கொள் என்று சொன்னார்கள். எனவே, ஏற்றுக்கொண்டேன் என்கிறான். 

 

ஆனால் வாலி, மாயாவியைக் கொன்று விட்டுத் தன் காலால் அந்தப் பாறையை உதைத்துத் தள்ளி உடைத்துவிட்டு வெளியே வருகின்றான். அரண்மனையில் தன்னுடைய இடத்தில் சுக்ரீவனைப் பார்க் கின்றான். வஞ்சகம் செய்து விட்டாய், துரோகம் செய்து விட்டாய்என்று சொல்லு கிறான்.

 

இல்லை. நீ இறந்து விட்டாய் என்று கருதித் தான் எனக்குப் பட்டம் சூட்டினார்கள்என்கிறான் சுக்ரீவன்.

 

வாலி அதைக் கேட்வில்லை. சுக்ரீவனை விரட்டி விடுகிறான். அவனது மனைவி உருமையைத் தன்வயப்படுத்திக் கொள் கின்றான். தப்பி ஓடிய சுக்ரீவனை விடக் கூடாது; கொன்று விட வேண்டும் என்ற முடிவோடு அவனைத் தேடி வருகின்றான்.

 

சுக்ரீவன் ஒளிந்து கொள்வதற்கு பாது காப்பான ஒரேயொரு இடம்தான் இருக் கின்றது. ருஷ்ய முக பர்வதம்..அங்கே மதங்க மாமுனிவர் இருக்கின்றார்.

 

வாலி துந்துபியைக் கொன்றான் அல்லவா? அப்போது அவன் காலால் துந்துபியைத் தூக்கி எறிந்தான். அவன் இரத்த வெள்ளத் தில் மதங்க முனிவர் ஆசிரத்திற்குள் வந்து விழுந்தான். அதனால் தன்னுடைய ஆசிரமத்தின் புனிதம் கெட்டுவிட்டதே என்று கருதிய மதங்க மாமுனிவர், வாலி அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தால், அந்தக் கணத்திலேயே உயிர் நீப்பான், சாவான் என்று சாபம் இட்டு விட்டார். அதனால், அங்கே மட்டும் வாலி போக முடியாது என்பது சுக்ரீவனுக்குத் தெரியும். அதனால் அவன் அங்கே போய்ப் பாதுகாப்பாக இருக்கின்றான்.

 

இப்படிக் கம்பன் மிக நுணுக்கமாகச் சொல்லி இருக்கின்றான். தமிழருவி அதை விளக்கி இருக்கின்றார்.

 

நீயும் என்னைப் போன்ற நிலைமைக்கு ஆளானவனா?

எதனால் இப்படி ஏற்பட்டது?’ என்று கேட்கிறான்.

 

அப்பொழுது அவன் மனதில் காதல் உணர்வை, காம உணர்வை ஊட்டுகின்றாள் சூர்ப்பனகை.

 

நான் நேரத்தைக் கருதிச் சம்பவங்களைச் சுருக்கமாகச் சொல்லுகின்றேன். இராவணன் மாரீசனை அனுப்புகிறான். அவன் ஏற்கனவே, தாடகை அடிபட்டபோது இவனும் அடிபட்டு வந்தவன். மீண்டும் போனால் அழிந்து விடுவோம் என்று அவன் அஞ்சுகிறான். நல்லுரை சொல்லுகிறான். கேட்கவில்லை. இராவணன் வாளால் தன்னை வெட்டிக் கொன்று விடுவான், இராமன் கையால் செத்தால் நல்லது என்று கருதி அவன் போகிறான். பொன்மான் வடிவம் எடுத்துப் போகிறான். அதைப் பிடிக்க இராமன் போகின்றபோது மாரீசன், ‘இலக்குவனா அபயம், சீதா அபயம்என்று குரல் கொடுக்க, அதைக் கேட்டுச் சீதை துடிக்கின்றாள்.

 

என் நாயகனுக்கு ஆபத்து வந்துவிட்டதோ? உடனே புறப்படுங்கள்என்கிறாள்.

 

மும்மூர்த்திகளாலும் என் அண்ணனை வெல்ல முடியாதம்மா.. என் அண்ணனை எவரும் நெருங்க முடியாதம்மா தாயேஎன்கிறான் இலக்குவன். எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்க்கின்றான். அவள் பதற்றத்தில், கணவன் மீது கொண்டு இருக்கின்ற அன்பினால், பக்தியினால், எதைச் சொன்னால் அவன் போவான் என்று கருதி, நெருப்பினும் கொடிய வார்த்தை களை அவன் மீது வீசுகின்றாள். இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காகத்தான் நீ காத்து இருந்தாயா? என்று கேட்கின்றாள்.

 

அதைக் கேட்டுத் துடிதுடித்துப் போனான் இலக்குமணன். தன் தூளியில் இருந்து ஒரு அம்பை எடுத்துத் தரையில் ஒரு கோடு போட்டுவிட்டு, ‘இந்தக் கோட்டைத் தாண்டி வராதீர்கள் அம்மாஎன்று சொல்லிவிட்டுப் போகின்றான்.

 

அந்த வேளையில் இலங்கை வேந்தன் தவமுனிவன் வேடம் பூண்டு வரு கின்றான். பின்னர் அந்தக் கபட வேடம் கலை கின்றது. எனவே, சீதை தங்கி இருந்த பர்ணசாலையோடு அவளைத் தூக்கிக் கொண்டு போகின்றான்.

 

இதுதான் கம்பன். வால்மீகி சொல்வது போல அவளைத் தொட்டுத் தூக்கவில்லை, மண்ணோடு பெயர்த்துத் தூக்கிச் செல்லு கிறான் இலங்கை வேந்தன். அப்போது சடாயு வழிமறிக்கின்றான். இராவண னோடு போர் புரிகின்றான். அவனது இறக்கைகளை வெட்டி வீழ்த்துகிறான் இராவணன். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக் கின்றான் இராவணன். இராம இலட்சு மணர்கள் சீதையை அங்கும் இங்கும் தேடி அலைந்து நடுக்கமுற்றவர்களாக வருகின்றார்கள். உயிர் பிரியும் தறுவாயில் கிடக்கின்ற சடாயுவைப் பார்க்கின்றார்கள். அவன் தகவல் சொல்லுகின்றான். அடுத்து என்ன செய்வது? என்று அவர்கள் திகைத்துக் கொண்டு இருக்கின்ற நேரத்தில் அனுமன் வருகின்றான்.

 

இது மிக முக்கியமான கட்டம்.

 

வாலி, சுக்ரீவனுக்கு இடையே மோதல். இந்தப் பிரச்சினையில் இராமன் பக்கம் நியாயம் இருக்கின்றதாவைகோ சொல்ல வில்லை, சக்கரவர்த்தி இராஜகோபாலச் சாரியார் சொல்லுகின்றார்.

 

அவன் இல்லறம் இழந்த வேதனையில் என்ன செய்வது? என்று தெரியாமல் தடுமாறுகின்றான்.

 

அந்த சக்கரவர்த்தித் திருமகன் இராமனே தடுமாறும்போது, சாதாரண மனிதனான எனக்கு அரசியலிலே தடுமாற்றம் வராதா? (கைதட்டல்).

 

என் உயிர் சீதையைக் காணவில்லை..அவள்தான் எனக்கு எல்லாம் என்று தடுமாறுகிறான். அப்பொழுது சுக்ரீவன் வருகின்றான்.

 

என் அண்ணன் வாலி மூவுலகைக் கலக் கியவன். அப்பேர்ப்பட்ட வீரன். பத்தாயிரம் மலைகளை பந்தாடக் கூடியவன். ஆயிரம் யானைகளுக்குச் சமமான வல்லவனான துந்துபியோடு மோதி, அவனைத் தூக்கி எறிந்தவன். துந்துபியின் சகோதரன் ஒரு மாயாவி. அவனோடு போர் புரிவதற்காக ஒரு குகைக்குள் போனான். நெடுநாள் யுத்தம் நடந்தது. ரத்தம் பெருகி வந்தது. வாலி இறந்து விட்டான். இனி மாயாவி தன்னையும் கொன்று விடுவான் என்ற பயத்தோடு, அந்தக் குகையை ஒரு பாறையால் அடைத்துவிட்டு வந்து விட்டேன். அமைச்சர் பெருமக்கள் எல்லோரும் சேர்ந்து நீ அரச பதவியை ஏற்றுக் கொள் என்று சொன்னார்கள். எனவே, ஏற்றுக்கொண்டேன் என்கிறான். 

 

ஆனால் வாலி, மாயாவியைக் கொன்று விட்டுத் தன் காலால் அந்தப் பாறையை உதைத்துத் தள்ளி உடைத்துவிட்டு வெளியே வருகின்றான். அரண்மனையில் தன்னுடைய இடத்தில் சுக்ரீவனைப் பார்க் கின்றான். வஞ்சகம் செய்து விட்டாய், துரோகம் செய்து விட்டாய்என்று சொல்லு கிறான்.

 

இல்லை. நீ இறந்து விட்டாய் என்று கருதித் தான் எனக்குப் பட்டம் சூட்டினார்கள்என்கிறான் சுக்ரீவன்.

 

வாலி அதைக் கேட்வில்லை. சுக்ரீவனை விரட்டி விடுகிறான். அவனது மனைவி உருமையைத் தன்வயப்படுத்திக் கொள் கின்றான். தப்பி ஓடிய சுக்ரீவனை விடக் கூடாது; கொன்று விட வேண்டும் என்ற முடிவோடு அவனைத் தேடி வருகின்றான்.

 

சுக்ரீவன் ஒளிந்து கொள்வதற்கு பாது காப்பான ஒரேயொரு இடம்தான் இருக் கின்றது. ருஷ்ய முக பர்வதம்..அங்கே மதங்க மாமுனிவர் இருக்கின்றார்.

 

வாலி துந்துபியைக் கொன்றான் அல்லவா? அப்போது அவன் காலால் துந்துபியைத் தூக்கி எறிந்தான். அவன் இரத்த வெள்ளத் தில் மதங்க முனிவர் ஆசிரத்திற்குள் வந்து விழுந்தான். அதனால் தன்னுடைய ஆசிரமத்தின் புனிதம் கெட்டுவிட்டதே என்று கருதிய மதங்க மாமுனிவர், வாலி அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தால், அந்தக் கணத்திலேயே உயிர் நீப்பான், சாவான் என்று சாபம் இட்டு விட்டார். அதனால், அங்கே மட்டும் வாலி போக முடியாது என்பது சுக்ரீவனுக்குத் தெரியும். அதனால் அவன் அங்கே போய்ப் பாதுகாப்பாக இருக்கின்றான்.

 

இப்படிக் கம்பன் மிக நுணுக்கமாகச் சொல்லி இருக்கின்றான். தமிழருவி அதை விளக்கி இருக்கின்றார்.

 

உன் மனைவியை வாலி கவர்ந்துவிட்டானா? என்று கேட்கவில்லை. நீயும் என்னைப் போன்ற நிலைமைக்கு ஆளானவனா? என்று கேட்கிறான். குரங்கு இனத்தில் மனித குலத்தைப் போன்று ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு இல்லை என்று அப்போது யோசித்தானா? இல்லை.

 

நின்னைச் செற்றவரே என்னைச் செற்றார் தீயரே ஆயினும்

 

உன்னுடைய நண்பர்கள் தீயவர்களாக இருந்தாலும் எனக்கு நண்பர்கள். உன்னைப் பகைக்கின்றவர்கள் நல்லவர்களாக இருந் தாலும் எனக்குப் பகைவர்கள்.

 

அவன் துந்துபியை தூக்கி எறிந்தவன். மலைகளைப் பந்தாடுகிறவன். ஆச்சா மரங்களைப் பிளக்கின்றவன். ஏழு ஆச்சா மரங்களிலும் அம்பை உன்னால் செலுத்த முடியுமா? கணை தொடுத்தான் இராமன். ஏழு மாமரங்களைத் துளையிட்டுச் சென்றது. இதன்பிறகு போர் தொடுக்கிறார்கள். போருக்கு அழைக்கிறான் சுக்ரீவன். அவன் மனைவி தாரை உன்னதமான பெண்மணி. வால்மீகி தாரையை ஒழுக்கம் உள்ள பெண்ணாகக் காட்டவில்லை.

 

ஆனால், வாலியின் மனைவி தாரையை கம்பன் பெண் தெய்வமாகக் காட்டுகிறான். உசிமுக பருவத்தில் பதுங்கிக் கிடந்தவன் இரண்டு மனிதர்கள் துணையோடு வந்திருக்கிறார்கள் நீ போகாதே என்று வாலியைத் தடுக்கிறாள் தாரை. அயோத்தி சக்கரவர்த்தி தசரதன் பிள்ளை வந்திருக் கிறான். அவன் ஒருகாலும் தவறு செய்ய மாட்டான். என்னை சண்டைக்கு அழைத்த வனை விடுவேனோ என்று சிம்ம கர்ஜனை செய்து வாலி வருகிறான். இருவரும் மோதுகிறார்கள். வால்மீகியில் வாலியை எதிர்த்து யார் வந்தாலும், அவர்கள் பலத்தில் பாதி வாலிக்குச் சென்றுவிடும் என்று எழுதவில்லை. ராமனைக் காப்பாற்று வதற்காக கம்பன் நுட்பமாக எழுதியிருக் கிறான்.

 

அப்போது சொல்கிறான், இருவரும் வேண்டி யவர்கள். ஒருவர் மீது கருணை கொண்டு, மற்றொருவர் மீது ஒளிந்து நின்று நின்று உன் அம்பை செலுத்தியது தர்மம்தானா ராமா என்று கேட்கிறான். இல்லறம் இழந்ததனால் வில்லறம் மறந்துவிட்டாய். அப்போது இலக்குமணன் சொல்கிறான், நீ எதிரே வந்தால் உனக்கு உயிர்ப்பிச்சைக் கொடுத்து விடுவார். சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போய்விடும். அதனால்தான் அண்ணன் மறைந்திருந்து கொன்றார் என்று ஏற்றுக்கொள்ள முடியாத வாதத்தை இலக்குமணன் வைக்கிறான். இராமனின் வாதமும் ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.

 

சிறியன சிந்தியாதான் வாலி என்பதை மட்டும் இரண்டு மணி நேரம் பேசலாம். அதற்கு எனக்கு நேரம் இப்போது இல்லை.

 

பாய்ந்திருக்கிற அம்பு யாருடையது என்று பார்த்தால் இராமனுடையது. கோதண்டத் திலே இருந்து வந்த பாணம்.

 

தாரை ஓடி வருகிறாள். கணவன் வாலியை தழுவி அழுதற்கு இந்த அம்பு தடையாக இருக்கிறது என்பதால் நீலன் என்கிற வானர வீரன் அம்பை பிடுங்கிவிட்டதாக வால்மீகி எழுதுகிறான்.

 

உலகத்தில் ஈடு இணையற்ற வீரன் வாலியின் மார்பில் தைத்த அம்பை ஒரு வானரன் பிடுங்கினான் என்றால், இராமனின் வீரமும், வாலியின் வீரமும் பழுதுபடுகிறது என்பதாலும், தாரை ஓடி வந்து அழுவதை தாங்க முடியாமல் போகும் என்று அவனு டைய குற்ற மனம் தாங்காது என்று இராமன் அங்கிருந்து சென்றுவிட்டதாக கம்பன் சொல்கிறான்.

 

அனுமன் வந்து தாரையிடத்தில் சொல்வ தாக வால்மீகி சொல்கிறான், உன் மகன் அங்கதனுக்கு பட்டம் சூட்டி நீ நன்றாக இருக்கலாம் என்று. இதை முழுவதும் மாற்று கிறார் கம்பன். தன் மார்பில் குத்திய அம்பை வாலி பிடுங்கி எறிகிறான். குருதி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. தாரை வருவதற்கு முன்பு இராமனிடம் கேட்கிறான்.

 

ஓவிய உருவ உளதொன்று நாயென் வேண்டுவது உன்பால்

பூவிதழ் நரவம் மாந்தி புந்திமேல் உற்றபொழுதில்

தீவினை எனக் கருதி என்மேல் ஏவிய பகழியை

என்தம்பி மேல் ஏவாதே

என்கிறான்.

 

என் தம்பி மது அருந்துகிறவன். மது அருந்துவதால் தவறு செய்வான். கடமை தவறுவான். தீயென செய்வான். அதனால் சினமுற்று என்மீது ஏவிய அம்பை என் தம்பி சுக்ரீவன் மீது ஏவிவிடாதீர்கள் என்று சொல்லிவிட்டு,

 

இன்னுமொன்று வேண்டுவது உன்பால்

எம்பியை உம்பிமார்கள்

தன்வினை கொல்வித்தார்கள் என்று

இகழ்வரேல் தடுத்தி தக்கோய்!

 

உன்னை உயிராக நேசிக்கின்ற உன் தம்பிகள் பரதன், சத்ருகணன், லட்சுமணன் ஆகியோர் கூடப் பிறந்த அண்ணனைக் கொன்ற பயல் என்று சொல்ல விடாதீர்கள் என்று இறைஞ்சினான் வாலி. மது மயக்கத்தில் தவறு செய்து கிடக்கிறான் சுக்ரீவன்.

 

வாலி சுக்ரீவனிடம் நீ அரசப் பொறுப்பை ஏற்றுக்கொள். அங்கதனை உன் மகன்போல நடத்து. இராமனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்று. என் மனைவி தாரை தர்ம சாஸ்திர நியாயம் அறிந்தவள். அவளுடைய அறிவுரையைக் கேட்டு நடந்துகொள் என்று சொல்லிவிட்டு வாலி இறந்துபோனான்.

 

நாட்கள் செல்கின்றன. மது மயக்கத்தில் சிற்றின்பக் கேளிக்கையில் சுக்ரீவன் கடமை மறந்துகிடக்கிறான். கார்காலம் கழிகிறது. இராமனுக்கே ஆத்திரம் வருகிறது. இத்தனை மாதங்கள் சென்றன சீதையைத் தேடிக் கண்டு பிடிக்கிற கடமையில் ஈடுபடவில்லையே இந்த சுக்ரீவன். கோதண்டத்தின் ஒலி மீண்டும் எழும் என்று எச்சரித்து விட்டு வா என்று இளவலை அனுப்புகிறான். இலக்குவன் வருகிறான். ஏற்கனவே அவன் எரிமலை. இராமன் இவ்வளவு சொன்னபிறகு கேட்கவா வேண்டும். அவன் காலக் கடைத் தீயென வருகிறான்.

 

வால்மீகி எப்படிக் காட்டுகிறான் தெரியுமா? தாரையும் சுக்ரீவனும் சிற்றின்பத்தில் சுகித்துக் கிடக்கிறார்கள். தாரை மது அருந்தி விட்டு, மோக பாக்கியத்தில் சுக்ரீவனோடு படுக்கை அறையில் கிடக்கிறாள். எப்படி அனுமன் சொல்லி வரவழைப்பது என்கிற போது, அந்தக் காட்சியை விவரிக்கவே எனக்கு நா கூசுகிறது. உடைகள் எல்லாம் களைந்து, மேகலாபரணம் சிதறி, வாயில் இருந்து கள் ஒழுகிக் கொண்டு இருக்க, அவள் அங்கங்கள் எல்லாம் வெளியாகத் தெரிய நிர்வாணமாக இலக்குமனிடம் வருகிறாள் என்று வால்மீகி காட்டுகிறான்.

 

இங்கே கம்பன், அனுமன் அங்கதனிடம் உன் தாயை அழைத்து வா என்கிறான். தாய் வருகிறாள். எப்படி வருகிறாள் தெரியுமா?

 

மங்கல அணி நீக்கி

மணி அணி அனைத்தும் துறந்து

வாச கொங்கலர் கோதை மாற்றி

பொங்குதம் முலைகள் புக

கழுத்துவரை போர்த்தி

அந்த நங்கையைக் கண்டு நயணங்கள் பணிப்பது என்றான்.

 

தாரை வருகிறாள். மங்கல அணி எதுவுமே இல்லை. அவள் உடம்பில் கழுத்துவரை துணி போர்த்திக் கொண்டு வந்து இருக் கிறாள். கணவனை இழந்த தன் தாயாரை நினைக்கிறான் இலக்குவன். வால்மீகி எங்கே? கம்பன் எங்கே?

 

முதல்நாள் போரில் இலங்கை வேந்தன் தோற்கிறான்.

வாரணம் பொருத மார்பும்

வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவர்கேட்ப

நயம்பட உரைத்த நாவும்

தாரணி மவுலி பத்தும்

தரையில் போட்டு தலைகுனிந்து செல் கிறான்.

 

எல்லாவற்றையும் போட்டுவிட்டு வெறும் கையோடு களத்தைவிட்டுச் சென்றான் இலங்கை வேந்தன்.

 

இப்பொழுது வீடணன் ஏன் வந்தான். அனுமன் உள்ளே நுழைந்து அக்ககுமரனை கொன்றுவிட்டான் அசோகவனத்தில்.  இந்திரஜித் அக்ககுமரனையே கொன்றதால், சகோதரனைக் கொன்ற கோபத்தால் பிரமாத்திரத்தால் கட்டுப்படுத்தி அவனைக் கொண்டுபோய் இராவணன் முன் நிறுத்து கிறான். இந்திரஜித் அனுமனைப் பற்றிச் சொல்கிறபோது, இவனுக்கு நிகரான வீரன் எவனும் இல்லை. கடைசியாக இவன் வாலில் தீயை வைத்து அனுப்பிவிடுங்கள் என்றபோது, இலங்கைக்கு தீ வைத்துவிட்டு வருகிறான். வாலில் வைத்த தீ அவனைச் சுடவில்லை. சீதையின் பாசம் அந்த வாலுக்குள் குளிர்ச்சியைத் தந்து, வாலில் பிடித்த நெருப்பு அவன் உடலை எரிக்காமல் பாதுகாத்துவிட்டது என்று கம்பன் சொல் கிறான். இப்பொழுது யுத்த களம். அதற்கு முன்பாக அரசவை.

 

வீடணன் அறிவுரை சொன்னான், நீ துரோகி என்றான் இராவணன். அவன் போய் இராமன் இடத்திலே சேர்ந்துவிட்டான். குகனோடும் ஐவரானோம், குன்று சூழ்வான் மகனோடும் அறுவர் ஆனோம். உன்னோடு எழுவர் ஆனோம் என்று சொன்னான். வேடர் குலத்தில் பிறந்த குகனையும், வானர குலத்தில் பிறந்த சுக்ரீவனையும், அரக்கர் குலத்தில் பிறந்த விபீடணையும் சகோதரனாக ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர்ந்த பண்பாடு தசரத குமாரன் இராமனி டத்தில் இருந்தது என்பதை கம்பன் வலியுறுத்துகிறான்.

 

கும்பகர்ணனை எழுப்பி வரச்செய்கிறான். கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து வருகிறான். அவன் நேர்மையாளன், நெறியாளன். என் அரசியல் வாழ்வில் நான் ஒரு கட்டத்தில் கும்பர்கணனைப் போல் கடைசிவரை இருப்பேன் என்று கடிதம் எழுதினேன்.

 

ஆனதோ வெஞ்சமம்

அழகில் கற்புடை ஜானகி

துயரினும் தவிர்ந்ததில்லையோ

வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ்

போனதோ புகுந்ததோ பொன்றும் காலமே!

 

இராவணனிடம் வந்து கேட்கிறான். போர் வந்துவிட்டதா? ஜானகியின் துயரம் நீங்க வில்லையா? வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் இலங்கையின் புகழ் போனதோ, புகுந்ததோ அழிவு காலம். அழிவு காலம் வந்துவிட்டதா? இராவணனுக்குக் கோபம் வருகிறது.

 

கும்பகர்ணன் சொல்கிறான்,

எனை வென்றுளர் எனில்

இலங்கைக் காவலா,

உன்னை வென்று உயருதல் உண்மை

 

என்னை வெற்றிகொண்டால், உன்னை வெற்றி கொண்டுவிடுவார்கள். நான் உயிருக்குப் பயந்து சொல்லவில்லை. உன் மீது கொண்ட அன்பினால் சொல்கிறேன். வென்று இவண் வருவேன் என்று உரைக் கிறேன். நான் வெற்றி பெற்று வருவேன் என்று சொல்லமாட்டேன். விதி நின்றது, புடர் பிடித்து உந்த நின்றது. விதி என் பிடறியைப் பிடித்துத் தள்ளுகிறது. பொன்றுவன் - நான் அங்கு சென்று சாவேன். பொன்றினால் - நான் இறந்துவிட்டால், புலன்கொள் தோழியை நன்றென நாயக விடுதின நள்ளரோ - நான் இறந்ததற்குப் பிறகு சீதையை அவர்களிடம் விட்டுவிட வேண்டும். என்னை வென்றால், உன்னை வென்று விடுவார்கள். நான் இப்பொழுது செல்கிறேன். விதி என்னைத் தள்ளுகிறது. போர்க்களத்தில் நான் இறந்துவிடுவேன். என்ன அருமையான காட்சி.

 

கடைசியாக போகும்போது சொல்கிறான், மன்னனே இதுவரை நான் தெரிந்தோ, தெரியாமலோ குற்றம் செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு என்று இராவண னிடம் கேட்கிறான் கும்பர்கணன். சாகப் போகிறான் அல்லவா? அண்ணனிடம் மன்னிப்புக் கேட்கிறான். ஒரு பக்கத்துத் தோளையும், இன்னொரு பக்கத்துத் தோளையும் பார்ப்பதற்கு எத்தனை காலம் ஆகும். பரந்த தோள்களோடு வருகிறானே இவன்தான் இராவணனா? என்று இராமன் வீடணிடம் கேட்கிறான். இல்லை இவன் கும்பகர்ணன், நல்லவன், நேர்மையாளன், நெறி தவறாதவன் என்று வீடணன் கூறுகிறான். அப்படி என்றால் அவனை நம்பக்கம் அழைத்து வந்துவிடு என்று இராமன் கூறுகிறான். விபீடணன் கும்பகர்ணனைப் பார்த்து வருகிறான். கும்பகர்ணன் நினைக்கிறான், இவன் ஒருவனாவது அங்கு சென்று நன்று இருப்பான் என்று பார்த்தால், புத்திகெட்டுப் போய் பழையபடி நம்முடன் அல்லவா சேர வருகிறான் என்று நினைக்கிறான். நீயும் இங்கு வந்துவிடு. இலங்கை அரசையே உனக்குக் கொடுத்துவிடுவோம் என்கிறான் விபீடணன். அதற்கு இவன் சொல்கிறான்,

 

நீர்க்கோல வாழ்வைநச்சி

நெடிதுநாள் வளர்த்துப்பின்னர்

போர்க்கோலம் செய்துவிட்டால்

உயிர்கொடாது அங்கு போகேன்.

தார்க்கோல மேனிமைந்த என்னுயிர் கருதியாயிள்

கார்க்கோல மேனியானை கூடுது கடிகினேகி

 

இது நீர்க்குமிழி போன்ற வாழ்க்கை. என்னை இவ்வளவு நாள் வளர்த்து ஆளாக்கிவிட்ட அண்ணன் இராவணனுக்கு உயிர் கொடுக் காமல் நான் போக மாட்டேன்.

 

தம்பியை யன்றி மாண்டுக் கிடப்பனோ மண்மேல். ஒரு தம்பி நீ அங்கு சென்று விட்டாய். ஒரு தம்பியாவது அவனுக்கு முன்பு செத்து களத்தில் கிடக்க வேண்டாமா? நீ சீக்கிரம் இராமனிடம் சென்று சேர்ந்துவிடு. இங்கு நிற்காதே.

 

போர் நடக்கிறது. கும்பகர்ணனை எதிர்த்து எவரும் நிற்க முடியவில்லை. அனுமன் சாய்கிறான், அங்கதன் சாய் கிறான். சுக்ரீவனை அடித்து உதைத்து மயக்கமுறச் செய்து, கக்கத்தில் இடுக்கிக் கொண்டு இலங்கைக்குள் நுழைகிறான் கும்ப கர்ணன். மயக்கம் தெளிந்து மூக்கைக் கடித்து விட்டு ஓடிப்போய்விட்டான் சுக்ரீவன். கும்பகர்ணனுக்கு மூக்கு இல்லை. இராமனுக்கும் கும்பகர்ணனுக்கும் நேருக்கு நேர் யுத்தம் நடக்கிறது. இராமன் அம்பால் கும்பகர்ணனின் ஒரு கையை வெட்டுகிறான். இன்னொரு கையால் மலைகளைப் பந்தாகச் சுருட்டி வீசுகிறான். அந்தக் கையைத் துண்டிக்கிறான். வலது காலால் குன்றுகளைத் தூக்கி எறிகிறான். வலது காலைத் துண்டிக்கிறான். இடது காலால் குன்றுகளைத் தூக்கி எறிகிறான். இடது காலைத் துண்டிக்கிறான், வாயால் கடித்து குன்றுகளைத் துப்புகிறான்.

 

கடைசி கட்டம், இப்பொழுது இராமனிடம் ஒரு வரம் கேட்கிறான்.

 

நீதியால் வந்த நெடுந் தர்ம நெறியல்லால்

சாதியால் வந்த சிறு நெறி அறியான் என் தம்பி

 

இராமா என் தம்பி விபீடணனுக்கு எங்க சாதியில் உள்ள தப்பான குணங்கள் அவனிடம் இல்லை. நீதியைத் தவிர அவனுக்கு எதுவும் தெரியாது. நீதியால் வந்த நெடுந்தரும் நெறியல்லால் சாதியால் வந்த சிறுநெறி அறியான் என் தம்பி. எங்காவது கண்டால் இவனைக் கொன்று விடுவான் இராவணன். இவனைக் காணின் கொல்லும் இறைநல் கானால். ஆகவே உன்னைத்தான் உம்பியைத் தான் - உன் தம்பி இலக்குமணனைத்தான், அனுமனைத் தான் எம்பி ஒருபோதும் பிரியாது அருள்க! நீயும், இலக்குமணனும், அனுமனும் அவன் அருகிலேயே இருந்து அவனைப் பாதுகாத் திடுங்கள்!

 

உம்பரும் முனிவரும், பிறரும் மூக்கு இல்லாத முகம் என்று என்னை இழிவாகப் பேசுவார்கள். உன் அம்பை செலுத்து வாய், என் கழுத்தை நீக்குவாய், என் நெடுந் தலையை கருங்கடலில் செலுத்துவாய். என் கழுத்தை நீக்கி, என் தலையைக் கொண்டு போய் உன் அம்பினால் கருங்கடலின் ஆழத் துக்குள் செலுத்திவிடு. என் முகம் யாருக்கும் தெரியக்கூடாது என்று வேண்டினான் கும்பகர்ணன் இராமனிடம். அதே போன்று கும்பகர்ணன் தலையை அம்பால் துண்டித்து ஆழ்கடலின் அடியில் செலுத்தினான் இராமன். இந்திரஜித்தனுக்கு தந்தைதான் கடவுள். தந்தைதான் உயிர். தந்தை செய்ததை தவறு என்று சொல்லமாட்டான். என் தந்தை என் உயிர். என் தந்தை என் கடவுள். இராவணனின் மகன் என்பதால் தந்தையின் பக்கமே நிற்கிறான். ஆனால் போர்க்களத்தில், இலக்குவனோடு மோதுகிற களத்தில் சூலப் படையை ஏவுகிறான். அது அவனைச் சுற்றிக் கொண்டு போகிறது. மிகவும் யோசிக்கிறான். திருமாலின் படை ஏவினேன். அவனைச் சுற்றி வணங்கிவிட்டுச் செல்கிறது. இவனை அழிக்க முடியாது. உடம்பெல்லாம் காயம். ரத்தம் கொட்டுகிறது.

 

தந்தையிடம் வந்தவுடன், வெற்றி பெற்று விட்டாயா? என்று தந்தை கேட்கிறான். அவர்களை வெல்வது அரிது. நான் பயந்து கொண்டு சொல்லவில்லை. நீ சீதையை விட்டுவிடு. அவர்களது பகை நீங்கி விடும். போய்விடுவார்கள். என் உயிருக்காகச் சொல்ல வில்லை. என் தகப்பனே உன் மீது கொண்ட காதலால் சொன்னேன் என்றான். இதற்கு இடையில் நிகும்பலை வேள்வி சென்று அங்கே அவன் யாகம் வளர்த்து வேள்வி முடித் தான் என்றால் அவனைத் தோற்கடிக்க முடியாது என்பதால், நிகும்பலைக்குச் செல்கிறான். நிகும்பலுக்குச் செல்லுகிற போது, சீதையைப் போல் உருவத்தைக் கொண்டுவந்து வெட்டிக் கொன்றுவிட்டு நான் இப்பொழுதே அயோத்திக்கு படை யெடுத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டால், இவர்கள் பதறியடித்துக்கொண்டு அங்கே போவார்கள். தான் நிகும்பலை யாகத்தை முடித்துவிடலாம் என்று சீதையைப் போன்ற உருவத்தைக் கொண்டு வந்து வெட்டிக் கொன்றபோது, இராமனும், இலக்குவணனும் அலறி ஐயோ சீதையை இழந்துவிட்டோமே என்று பதறி கதறித் துடித்து அழுகின்றார்கள்.

 

இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று விபீடணனுக்குச் சந்தேகம் வருகிறது. வண்டு உருவம் எடுத்து அவன் அசோக வனத்திற்குச் செல்கிறான். அங்கு சீதை இருக்கிறாள். விபீடணன் மகள் திரிசடை தான் சீதைக்குத் தோழி. அவன் வந்து சொல்கிறான், இது சூழ்ச்சி. அவன் இலங்கைக்குச் செல்லவில்லை நிகும் பலையில் வேள்வி செய்யப் போயிருக் கிறான். விபீடணன் சேர்ந்த கூட்டணியை வெற்ற பெறச் செய்ய வேண்டும் அல்லவா? இராமனை வெற்றிபெற வைக்க வேண்டும் அல்லவா? நிகும்பலை வேள்வியைக் குலைக்கச் செல்கிறான்.

 

வேள்வியில் ஈடுபட்டிருந்த இந்திரஜித் தனுக்கு வேள்வியைக் குலைக்க வந்தபோது தான், தன் சித்தப்பன் செய்த துரோகத்தை நினைக்கிறான். என்னுடைய தகப்பனார், உன்னுடைய அண்ணன் இறந்த பிறகு என்ன செய்வாய் என்றான்? வேள்வி குலைந்ததைப் பற்றிக் கவலை இல்லை. மூன்று உலகத்தையும் வென்றவன். இந்திரனையும் வென்றவன். சின்னக் குழந்தையாக இருந்தபோது, சிங்கங்களைக் கட்டிப்போட்டு விளையாடியவன்.

 

அனுமன் தோளில் இலக்குவன். இங்கே இந்திரஜித்தன். போர் நடக்கிறது. அந்தப் போரில் ஒருவரை ஒருவர் வியக்கிறார்கள். இலக்குவணன் வீரத்தை இந்திரஜித்தன் வியக்கிறான். இந்திரஜித்தன் வீரத்தை இலக்குவன் வியக்கிறான். என்ன சொல் கிறான் தெரியுமா?

 

எய்தவன் பகழியெல்லாம் பறித்து

இவன் என் மேல் எய்யும் கை தடுமாறாது

உள்ளம் உயிரினும் கலங்கா யாக்கை

மொய்கணை கோடி மொய்க்கவும் இழைப்பன்றொல்லான்

ஐயனும் இவனோடு எஞ்சும்

ஆண்தொழில் ஆற்றல்

என்றான்.

 

நான் ஏவுகிற அம்புகளை உடம்பிலிருந்து பறித்து என் மீதே ஏவுகிறான். கையில் நடுக்கம் இல்லை. உடலில் நடுக்கம் இல்லை. தளர்ச்சி இல்லை. கோடிக்கணக் கான அம்புகள் உடம்பிலே தைத்திருக் கின்றன. அனைத்தையும் பிடுங்கித் தொடுக்கிறான். வீரம் இவனோடு முடிந்தது. இதற்குப் பிறகு இந்த உலகத்தில் இந்திர ஜித்தனை மிஞ்சிய வீரம் எங்குமே இல்லை எனப் பாராட்டுகிறான் இலக்குவன்.

 

இந்திரஜித்தின் தலை துண்டிக்கப்படுகிறது. தலையைத் தூக்கிக்கொண்டு அங்கதன் இராமனிடம் போகிறான்.

 

போர்ச் சேவகர்கள் வருகிறார்கள். சண்டை யில் என்ன ஆயிற்று. இந்திரஜித்தைக் கொன்றுவிட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டு தாங்க முடியாமல், தகவல் சொன்ன இரண்டு வீரர்களின் தலையை வெட்டி வீசுகிறான் இராவணன். இந்திரஜித்தன் தலையைத் தேடினான். தலை காண வில்லை. உடம்பைத் தூக்கிக் கொண்டு போகிறான். சீதையைப் பற்றி மண்டோதரி சொல்கிறாள்,

 

அஞ்சினேன் அஞ்சினேன் அச்சீதை

என்ற அமுதால் செய்த

நஞ்சினால் இலங்கை வேந்தன்

நாளை இத்தகையன் அன்றோ

 

அஞ்சினேன், அஞ்சினேன், அஞ்சினேன் அச்சீதை என்ற நஞ்சினால் இதே நிலைமை நாளை உனக்கும் வருமே! என்று நான் அஞ்சினேன்.

 

இராவணன் உள்ளத்தில் இருந்த காம உணர்ச்சி அடியோடு அகன்றது. காதல் உணர்ச்சி அடியோடு அகன்றது. நான் சீதையை வெட்டிக் கொல்வேன் என்று வாள் எடுத்துப் போகிறான். பெண்ணைக் கொன்ற பாவத்துக்கு ஆளாகாதே என்று மகோதரன் வந்து தடுக்கிறான்.

 

இராவணன் போர்க்களத்திற்கு வருகிறான். அவன் சொல்கிறான், வேதம் இருக்கும் வரை இராமன் பெயர் இருக்கும் என்றால், என்னுடைய பெயரும் இருக்கும் அல்லவா?

 

வென்றிலன் என்றபோதும் என்பெயர் நிற்குமன்றோ

அவ்விராமன் பெயர் நிற்குமாயின்

 

சாவு என்பது பொதுமைதானே? எல்லோ ருக்கும் பொதுவானதுதானே? இன்று ளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதி யுண்டோ? என்று கூறுகிறான்.

 

எங்கள் தென்னாட்டில் ஒரு பழக்கம் இருந்தது. அருவாளைக் கையில் எடுத்துக் கொண்டு, ஏலே இன்னைக்கு எம் பொண்டாட்டி தாலியை அறுக்கனும், இல்ல உம்பொண்டாட்டி தாலியை அறுக்கனும் என்று. இதைக் கம்பன் அன்றைக்குச் சொல்லியிருக்கிறான்.

 

மன்றல் அம் குழல் ஜானகி தன் மலர் கையால் கொன்றலைந்து

கொடுநெடுந்துயரிடை குளித்தல் அல்லது

மயன் மகள் அத்தொழில் உறுதல் இன்று

ரெண்டில் ஒன்று ஆக்குவன்

இது தலைப்படின்

 

மன்றல் அம் குழல் ஜானகி தன் மலர் கையால் வயிறு கொண்டு அலைந்து கொடு நெடுந்துயரிடை குளித்தல் - என் கணவன் இறந்து விட்டானே என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழ வேண்டும் அல்லது மனைவியின் பெயரைக்கூட அவன் சொல்ல விரும்பவில்லை இராவணன் பண்பைப் பாருங்கள். மண்டோதரி என்று சொல்லாமல், மயன்மகள் அதே நிலைமைக்கு ஆளாக வேண்டும் என்று சொல்கிறான். இரண்டில் ஒன்று இன்றைக்கு நடக்கும்.

 

போரில் இராவணன் அழிக்கப்படுகிறான். வீழ்ந்துவிட்டான். முதுகெல்லாம் தழும்பாக இருக்கிறது. புறமுதுகிட்டு ஓடிய ஒரு கோழையையா நான் கொன்றேன் என்று இராமன் எள்ளி நகையாடுகிறான். விபீடணன் சொல்கிறான், ராமா என் அண்ணன் கோழை அல்ல. திசை யானை களோடு போர்செய்தபோது, திசையானை களின் கொம்புகள் அவன் மார்பை ஊடுருவி வெளியே சென்றதனால் ஏற்பட்ட தழும்புகள்.

 

மண்டோதரி ஓடி வருகிறாள்,

வெள்ளரிக்கண் சடைமுடியான்

வெற்படுத்த திருமேனி மேலும் கீழும்

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியைக்

கறந்த காதல் உள்ளிருக்கும் இடம் தேடி

தடவியதோ ஒருவன் வாழி

 

சீதை மேல் உள்ள காதல் உடலில் எங்கே யாவது இருக்கிறதா? என்று இராமன் அம்பி தேடித் தேடிப் போனதோ என்று மண்டோதரி சொல்லுகிறாள்.

 

ஐய, எழுந்தாள், அணைத்தாள், அழுதாள், விழுந்தாள், இறந்தாள் மண்டோதரி. கோப் பெருந்தேவி மடிந்ததைப் போல மண்டோ தரி மடிந்தாள்.

 

இப்பொழுது விபீடணன் வந்து அழுகிறான். சூர்ப்பனகை வரவில்லை. அவளால்தானே இவ்வளவு சண்டை. அவள்தானே சண்டையை இழுத்துவிட்டாள். அவள் தானே இந்த இறப்புக்குக் காரணம். உடன் பிறந்த அண்ணன் இறந்துவிட்டான் அல்லவா? கும்பகர்ணன் இறந்துவிட்டான் அல்லவா? அவள் வரவேண்டும் அல்லவா? ஏன் வரவில்லை. ஏன் அந்த சூர்ப்பனகை பாத்திரத்தைக் கொண்டு வரவில்லை? காரணம் இருக்கிறது. மிகச் சிறந்த காரணம் இருக்கிறது. அந்தக் காரணத்தை யாரும் சொல்லமாட்டார்கள்.

 

ஒட்டக்கூத்தர் பத்துப் பாட்டு எழுதி இருக்கிறார். கம்பன் ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். காலகேயர்களோடு இராவணன் போர் புரிந்தான். சூர்ப்பனகையின் கணவன் வத்திச்சுருவன் என்பவன் காலகேயர்களைச் சேர்ந்தவன். காலகேயர்களோடு இராவணன் போர் தொடுக்கும்போது, தன் தங்கையின் கணவன் என்று அறியாமல் அவனையும் கொன்றுவிட்டான். மைத்துனனையும் கொன்றுவிட்டான். மைத்துனன் என்று தெரியாது.

 

விபீடணன் சொல்கிறான், அடப் பாவி

கொல்லாத மைத்துனனை கொன்றான் என்றே

அதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து

பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி

நெடும்பாறப் பகை தீர்த்தாளோ?

 

தன் கணவனை அண்ணன் கொன்று விட்டான் என்று மனதில் நினைத்துத்தான் இவள் இவ்வளவு சூழ்ச்சியையும் செய்து சீதையின் அழகில் மோகம் கொண்டவனாகக் காட்டி, இராமனிடத்தில் வம்பு செய்து மூக் கறுபட்டு இலங்கை வேந்தனிடம் சொல்லி, அவனை அங்கே கொண்டு போய் நிறுத்தி, சீதையைக் கவர்ந்து வரச் செய்து, இராம இலட்சுமணர்கள் படையெடுத்துவரச் செய்து, இராவணனைக் கொன்று பழி தீர்த்துக் கொண்டாள் என்று கம்பனே சொல்கிறார். (பலத்த கைதட்டல்)

 

இந்தக் கம்ப ராமாயணத்தில் நம்முடைய தமிழருவிமணியன் அவர்கள் முதலில் மருதத்திணைப் பற்றிச் சொன்னேன்.

 

தண்டலை மயில்கள் ஆட

தாமரை விளக்கம் தாங்க

கொண்டல்கள் முழவிநேங்க

குவளைகண் விழித்து நோக்க

தேன்பிழி மகரயாழின்

நாதம் ஒலிக்க

வண்டுகள் பாட

மருதம் மீற்றிருக்குமாவோம்

 

அப்படிப்பட்ட இடத்தில் சூர்ப்பனகையின் பாத்திரத்தில் வால்மீகி பார்வை வேறு கம்பனின் அணுகுமுறை வேறு. தாரையின் பாத்திரத்தை ஒழுக்கங்கெட்டவளாக சித்தரிக்கிறான் வால்மீகி. ஒழுக்கத்தில் உயர்ந்தவராக காட்டுகிறார் கம்பன். ஆகவே தமிழ் பண்பாட்டுக்கு ஏற்ப இந்தக் காவியத்தை தந்தவன் கம்பன்.

 

அதாவது சூர்ப்பனகை வருவதை சொல் கிறார் பாருங்கள்,

பஞ்சு ஒளிர் விஞ்சு மிளிர்
பல்லவம் அறுங்க
செஞ்சவிய கஞ்சநிகர் சீரடியளாகி
வஞ்சமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென
வஞ்சமகள் வந்தாள்

 

இப்படி சொற்களை பயன்படுத்த முடியுமா? காவியத்தில் கருத்துகளை சொல்ல முடியுமா?

 

ஈழத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இந்திரஜித்தின் வீரமும், கும்பகர்ணனின் வீரமும்தான் என் இருதயத்தில் இன்றைக்கும் எழும். அந்த ராமாயணம் வேறு. நடக்கப் போகிற காவியம் வேறு. கொட்டப்பட்ட ஈழத்தமிழர்களின் சிந்திய இரத்தம் வீண்போகாது. நான் நெஞ்சால் பூஜிக்கின்ற தலைவர் பிரபாகரனின் படைகள் சிந்திய ரத்தம் வீண்போகாது. தமிழ் ஈழம் மலரும்.

 

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரை ஆற்றினார்.

 

சங்கொலி, 20.10.2017 /  27.10.2017

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)