மறுமலர்ச்சி தி.மு.கழக இணையதளம் ஒழுங்கு நடவடிக்கை வைகோ அறிவிப்பு

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Tue, 05/09/2017

 

 

 

 

 


மறுமலர்ச்சி தி.மு.கழக இணையதளம்

ஒழுங்கு நடவடிக்கை


வைகோ அறிவிப்பு

 

ழகக் கட்டுப்பாட்டை மீறி, முகநூலில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுதி வருகின்ற மானாமதுரை மருது, திருப்பூர் பழ. கௌதமன் ஆகியோர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகின்றார்கள்.

தலைமைக் கழக அறிவிப்புகளைக் கண்டித்தும், அதனை எதிர்த்தும் முகநூலில் விமர்சனம் செய்பவர்கள்,

கழகத்தின் உயர்நிலைக்குழுவில் ஆலோசித்துச் செயல்படுத்தப்படுகின்ற முடிவுகளை விமர்சித்துப் பொதுவெளியில் கருத்துகளைப் பதிகின்றவர்கள்,

மாவட்டச் செயலாளர்கள், நகர ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்களை விமர்சித்து முகநூலில் எழுதுபவர்கள்,

கழகத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் இணையதள வட்டத்தில் இருந்து விலக்கப்பட்டவர்கள், கழகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து எழுதுகின்ற விமர்சனப் பதிவுகளை ஆதரிப்பவர்கள்,

அவ்வாறு நீக்கப்பட்டவர்களைக் கழக ஆதரவு இணையதளக் குழுக்களில் நிர்வாகிகளாக இணைத்து இருப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கழகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துக் கருத்துக் கூற விழைவோர், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்களிடம் நேரில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம்; அல்லது, கடிதம் வழியாகப் பொதுச் செயலாளருக்குத் தலைமைக் கழக முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்;

அல்லது, மின் அஞ்சல் (ளுயபேடிடiஅனஅம@பஅயடை.உடிஅ) வழியாகவும் அனுப்பி வைக்கலாம்.

 

தாயகம்                                                                                                  வைகோ    
சென்னை –  8                                                                                                  பொதுச்செயலாளர்
04.09.2017                                                                                                         மறுமலர்ச்சி தி.மு.க.,

 

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)