ஓணம் வைகோ வாழ்த்து, கேரள அரசியல் தலைவர்களுடன் அலைபேசியில் உரையாடல்

விவகாரங்கள்: மனித உரிமை, தேசிய

மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Mon, 04/09/2017
 
 
 
 
4 செப்டெம்பர் 2017

ஓணம்
வைகோ வாழ்த்து,
கேரள அரசியல் தலைவர்களுடன்
அலைபேசியில் உரையாடல்கேரள மக்களின் உன்னதமான பண்டிகைத் திருநாள்தான் ஓணம் பண்டிகை ஆகும்

 

மாபலி சக்கரவர்த்தி கொடை, அறம் வீரம் இவற்றால் புகழ் பெற்று, கர்வம் ஏற்பட்டதால் அதை அடக்குவதற்காகத் திருமால் வாமன அவதாரம் எடுத்து, தன் காலால் அளப்பதற்கு மூன்று அடி நிலம் வேண்டும் என்று கேட்டான்.

எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள் என்று சக்கரவர்த்தி கூறினான்.

அப்போது,

அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியார்.

மாபலி சக்கரவர்த்தியிடம் இது திருமாலின் வேலை இந்த சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என்று எச்சரித்தார்.


ஆனால், கூறியது கூறியதுதான் என்றார் மாவலி,  திருமால் விஸ்வரூபம் எடுத்து ஓரடியால் மண்ணையும் மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடியை

எங்கே வைப்பது? என்று கேட்டபோது, தன் தலை மீது வைக்கச் சொன்னான் மாபலி.


மாபலி சக்கரவர்த்தி அழிய நேரிட்டாலும அவருக்கு, சொர்க்கத்திற்கு நிகராகப் பாதாள உலகத்தைப் படைத்து அங்கு அனுப்பினார் திருமால்.

அப்போது, ஆண்டுககு ஒருமுறை தான் வந்து தன்னுடைய கேரளத்து மக்களைப் பார்க்க வேண்டும என்று மாபலி சக்கரவர்த்தி கேட்ட வரம் நல்கப்பட்டது.

 அதன்படி கேரளத்திற்கு வருகின்ற அவரை, கேரள மக்கள் பத்து நாட்கள் பல்வேறு வகையிலே பூக்களைத் தூவியும் கோலங்கள் இட்டும் வரவேற்கின்றார்கள் என்பது,

இந்த ஓணம் பண்டிகையின் நம்பிக்கை ஆகும் 

ஆண்டுதோறும் வைகோ அவர்கள் தனது கேரள நண்பர்களுக்கு ஓணம் வாழ்த்துச் சொல்வது வழக்கம்.


அதன்படி இன்று காலை 6 மணிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு வைகோ வாழ்த்துச் சொல்லும் போது, உங்களுக்கும் வாழ்த்து.

உங்கள் மூலமாகக் கேரள மக்களுக்கும் வாழ்த்து என்றார் வைகோ


அதற்கு முதல்வர் நன்றி கூறினார்.


அதன்பின்னர் முன்னாள் முதல்வர் உம்மண் சாண்டி, முன்னாள் உள்துறை அமைச்சரும காங்கிரஸ் தலைவருமான ரமேஷ் சென்னிதலா அவர்களுக்கும், வைகோ, அலைபேசியில்

வாழ்த்துத் தெரிவித்தார்.


முன்னாள் முதல்வர் மார்க்சிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார்.


தலைமைக் கழகம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

தாயகம்,

எழும்பூர்,

சென்னை / 8

 

 

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)