‘காங்கிரஸ் கட்சியை ஒருகாலத்தில் நான் கட்டிக்காத்து வளர்த்தவன். அது சுயநலக் கூடாரம் ஆகிவிட்டது. நாட்டைக் கேடு செய்து கொண்டு இருக்கிறது. அதை எதிர்க்க வேண்டும் இந்தப் பகுதியில். அதற்காகவே உங்களைச் சந்தித்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்போகலாம் - என் கருத்தை - என்று கூற வந்தேன்’ என்று என் தந்தையாரிடம் தேவர் ஐயா தெரிவித்தார்கள்.

உரிமைப்போரின் விடிவெள்ளி

இவ்வளவு அருமையான படைப்புகளைத்தந்து இருக்கிற கல்கி மீது ஈர்ப்பு ஏற்படக் காரணம் அரிக்கர்லாந்து வெளிச்சத்தில் ஒரு கிராமத்தில் பள்ளிப் பாடங்களில் ஆர்வங்கொண்டு படித்துக் கொண்டிருந்தபோது இல்லத்துக்கு வருகிற கல்கி ஏடுகளை அதில்வரும் அற்பூதமான மணியத்தின் ஓவியங்களை, தொடர்கதைகளைப் படிக்கின்ற ஆர்வம் வந்ததினால் அது தொகுப்பாக என் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த காரணத்தினால் நான் கல்கியின் ‘பொன்னியின் செல்வன் - பார்த்திபன் கனவு - சிவகாமியின் சபதம்’ படித்தேன். அதன் விளைவாகத்தான் தமிழர் வரலாற்றின் மீது, தமிழர்களின் நாகரீகம், கலாச்சாரத்தின் மீது, கடந்தகால மகோன்னதமான சாதனைகள் மீது சிறிய வயதில் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகத்தான் நான் கல்லூரிக்குச் சென்றபோது அறிஞர் அண்ணாவின் எழுத்துகளில் என் உள்ளத்தைத் தந்து நான் திராவிட இயக்கத்தில் சேர்ந்தேன்.

ஏழைச் சகோதரிகள் அழுது புலம்பும்போது கேட்டார்கள். கடலில் வசிக்கும் அரிய உயிரினங்களை, கடல் ஆமைகளைக்கூடக் கொன்று விடக்கூடாது என்று அரசும் ஆராய்ச்சியாளர்களும் துடிக்கிறார்களே, எங்கள் மீனவர்களின் உயிர்கள் அதைவிட மலிவாகப் போய்விட்டதா?

Wed, 15/04/2009

இந்தப் பேரணி அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்ற பேரணி அல்ல. குறுகிய அரசியல் இலாப நோக்கம் கொண்ட பேரணி அல்ல. எவர் மீதும் கோபதாபங்களைக் காட்டுவதற்காகத் திரட்டப்பட்டு இருக்கின்ற பேரணி அல்ல. தமிழகத்தை வளைத்து வருகின்ற கேடுகளைச் சுட்டிக்காட்டி, அந்த ஆபத்திலே இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துகின்ற பேரணி ஆகும்.

தமிழகத்திலே ஜனநாயகம் கொஞ்சம் கொஞ்சமாகச் சாகடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. மக்கள் மன்றத்திலும் ஜனநாயகம் இல்லை, சட்டமன்றத்திலும் ஜனநாயகம் இல்லை.

தியாகத்தால் கட்டப்பட்டகோட்டை

‘எங்கள் நெஞ்சில் வாழ்கிறார் ஏழுமலை’

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)