” உலகத்தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் வைகோ ”

தமிழர் தம் நலனை கருத்தில் கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கும் உழைப்பறியா அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், உணர்வுப்பூர்வமாக உழைத்துக்கொண்டிருக்கும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர் வைகோ.

ஓய்வறியாத ஒப்பற்ற தலைவரை 10 ஆண்டுகளுக்கு பின் நேற்று எங்கள் மதனந்தபுரம் பகுதியில் கொடியேற்ற வருகை தந்திருந்தபோது  நேரில் பார்க்கும் வாய்ப்புப்பெற்றேன் - அவர் தம் பேச்சால் நெஞ்சம் நெகிழ்ந்தேன்.

கடந்த காலத்தில் நடந்த வஞ்சக நாடகங்களை கண்டு மனம் வருந்தாமல், நெஞ்சை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையோடு வீறு நடைபோட்டு நிகழ்காலத்தை நிஜமாக்கிக் கொண்டிருக்கும்,  தன்னலமற்ற தலைவர் வைகோ அரியணையேறும் காலம் தான் தமிழகத்தின் எதிர்காலம்.

ஒட்டு மொத்த தமிழனித்திற்கே பொற்காலம்.

விளம்பரம் தேடுவோர் மத்தியில் ஆடம்பரம் இன்றி மக்கள் பணியாற்றி வரும் மக்கள் தலைவர் வைகோ அவர்களை பின் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

” கடமை செய்வோம் கலங்காமலே - உரிமை கேட்போம் தயங்காமலே, வாருங்கள் தோழர்களே - ஒன்றாய் வாருங்கள் தோழர்களே ” தன்னலமற்ற தலைவரின் பின் அணி திரள்வோம்........ தரணி முழுவதும் தமிழர் தம்  வெற்றி பரணி பாடச்செய்வோம்......

 

மதனந்தபுரம் ஆ. வரதன்.

சென்னை  600 125.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)