இவ்வளவு அருமையான படைப்புகளைத்தந்து இருக்கிற கல்கி மீது ஈர்ப்பு ஏற்படக் காரணம் அரிக்கர்லாந்து வெளிச்சத்தில் ஒரு கிராமத்தில் பள்ளிப் பாடங்களில் ஆர்வங்கொண்டு படித்துக் கொண்டிருந்தபோது இல்லத்துக்கு வருகிற கல்கி ஏடுகளை அதில்வரும் அற்பூதமான மணியத்தின் ஓவியங்களை, தொடர்கதைகளைப் படிக்கின்ற ஆர்வம் வந்ததினால் அது தொகுப்பாக என் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த காரணத்தினால் நான் கல்கியின் ‘பொன்னியின் செல்வன் - பார்த்திபன் கனவு - சிவகாமியின் சபதம்’ படித்தேன். அதன் விளைவாகத்தான் தமிழர் வரலாற்றின் மீது, தமிழர்களின் நாகரீகம், கலாச்சாரத்தின் மீது, கடந்தகால மகோன்னதமான சாதனைகள் மீது சிறிய வயதில் எனக்கு ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாகத்தான் நான் கல்லூரிக்குச் சென்றபோது அறிஞர் அண்ணாவின் எழுத்துகளில் என் உள்ளத்தைத் தந்து நான் திராவிட இயக்கத்தில் சேர்ந்தேன்.

Wed, 15/04/2009

இந்தப் பேரணி அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்ற பேரணி அல்ல. குறுகிய அரசியல் இலாப நோக்கம் கொண்ட பேரணி அல்ல. எவர் மீதும் கோபதாபங்களைக் காட்டுவதற்காகத் திரட்டப்பட்டு இருக்கின்ற பேரணி அல்ல. தமிழகத்தை வளைத்து வருகின்ற கேடுகளைச் சுட்டிக்காட்டி, அந்த ஆபத்திலே இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துகின்ற பேரணி ஆகும்.

தமிழ் உள்ளங்களில் நமக்கு என்று ஒரு வரலாறு - வீர வரலாறு, புகழ்மிக்க வரலாறு -- ஒரு பழம்பெரும் பண்பாடு உண்டு இவற்றைப் பாதுகாப்பதற்கு, தமிழர் இதயங்களில் அரசியல் எல்லைகளைக் கடந்து, இந்தச் தமிழ்ச் சமுதாயத்தின் வருங்காலத் தலைமுறை தேர்ந்து படிக்க வேண்டிய நூல்களில் ‘பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு’ இடம்பெற வேண்டும்.

காலதேவதை கோடிப் பூக்களைத் தூவினாள்!

வரலாற்றுத் தச்சனின் கல் உளி, வாழ்த்துச் செதுக்கியது!

உறைய வைக்கும் பனிக்குளிரில், நாற்பது இலட்சம் கண்கள் நனைந்தன!

‘புலிகள் வேறு தமிழர்கள் வேறு அல்ல; விடுதலைப் புலிகள்தான் - காவல் அரணாக இருக்கக்கூடிய அவர்கள்தான் தமிழர்களின் பாதுகாப்பு. அவர்கள் ஏந்தி இருக்கின்ற ஆயுதம் ஒன்றுதான் தமிழர்களின் நலனுக்குப் பாதுகாப்பு. இது வரலாற்று உண்மை.

அண்ணாவின் புகழை நிலைநிறுத்துவோம்!
திராவிட இயக்கக் கொள்கைகளைக் காப்போம்!
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
மதுரை மண்டல மாநாட்டில் வைகோ 15.09.2008

வானமேசாயினும் மானமே பேணிடும்
மறக்குல மன்னன் நான்
அன்னியனுக்கு அடிபணிவனோ?
உயிரே போயினும் உரிமை காப்பேன்
கூற்றமே சீறினும்
இக்கொற்றவன் கலங்கேன்
நெஞ்சுரம் கொண்டோர் உறையும்
நெற்கட்டான் செவல் நிமிர்ந்தே நிற்கும்

கொழுந்துவிட்டு எரிகின்ற பிரச்சனையாக இன்றைக்கு மதத்தீவிரவாதம் இருக்கிறது. அது, குறிப்பிட்ட இந்த மதம்தான் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பல எல்லைகளைத் தாண்டி வளருவதும், அதன் விளைவாக வெறுப்பு வளர்வதும், ஆங்காங்கு கலவரங்கள், மோதல்கள் நிகழ்வதும் தொடர்கின்றன. அந்தக் கலவரத் தீ, நமது அன்னைத் தமிழகத்துக்கு உள்ளே வந்துவிடக்கூடாது என்ற கவலையால், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா அவர்களும், கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்களோடு இணைந்து உருவாக்கி, கட்டிக்காத்த நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை, ஒரு பொது நல ஊழியன் என்ற முறையில் எனக்கு இருக்கிறது என்பதால்தான், இந்த நிகழ்ச்சியை நான் முன்னின்று நடத்துகிறேன்.

‘எந்த உணர்ச்சியோடு பகத்சிங் அந்த மண்ணை எடுத்துக் கொண்டுபோய் வீட்டில் வைத்துப் பூஜித்தானோ, நான் பகத்சிங் பிறந்த கட்கர் கலான் மண்ணை பூஜிக்கத்தக்க மண்ணாகக் கருதி, என் கையில் எடுத்துகொண்டு வந்து இருந்தேன். அந்த மண்ணைக் காட்டி, அதற்கு முத்தமிட்டுவிட்டுத்தான் நான் பேசினேன். அந்த மண்ணையும் வைத்து இருக்கிறேன். வல்வெட்டித் துறை மண்ணையும் வன்னிக்காட்டு மண்ணையும் நான் வைத்து இருக்கிறேன்.

வைகோ உரை
வ.உ.சிதம்பரனார் “சிவஞான போதம்”
உரை நூல் வெளியீட்டு விழா
திருநெல்வேலி - 22.08.2008

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)