Wed, 15/04/2009
Sun, 27/07/2008
Fri, 10/04/2009

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இரண்டு மணி நேர கால அவகாசத் துக்குள் 212 பக்கங்கள் கொண்ட ஆவணங்களைப் பரி சீலனை செய்வது என்பது மனித சக்திக்கு அப்பாற் பட்டது.

Fri, 10/04/2009

குழந்தைகளையும் பெண்களையும் கொத்து கொத்தாக கொல்லும் ராஜபக்சேவை
அலெக்சாண்டருடன் ஒப்பிட்ட கருணாநிதி ஒரு மிகப் பெரிய தமிழ் இனத் துரோகி .

வைகோ

Sun, 05/04/2009

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக அருமைத் தம்பி வழக்கறிஞர் பி. சிவா அவர்களை நீங்கள் வெற்றிபெறச் செய்ததற்கு நன்றி கூற வந்து இருக்கிறேன். திருநள்ளாறுக்கு எவ்வளவோ பெருமைகள் உண்டு.
அப்படிப்பட்ட பெருமைகளில் எங்களுக்கு கிடைத்து இருக்கிற பெருமை முதன்முதலாகப் புதுவை சட்டசபைக்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் உறுப்பினராக சிவா சென்று இருக்கிறார்.

எனக்குத் தெரியும் புலிகளை அழிக்க முடியாது. பிரபாகரனை நெருங்கமுடியாது (பலத்த கை தட்டல்)

அதைமீறி, அவர்கள் மீது ஒரு துரும்பு விழுந்தால் நடப்பது வேறு என்று இந்திய அரசுக்கு எச்சரிக்கிறேன். இந்திய அரசுக்கு, அதைத் தலைமை தாங்கி நடத்துகிறவர்களுக்கு வினையை விதைக்காதீர்கள் என்று திரும்பவும் எச்சரிக்கிறேன். நான் சொல்கிற ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தத்தை யோசித்துத் தான் பேசுகிறேன். எனக்கு ஒன்றும் பயம் கிடையாது. நான் உண்மையைப் பேசுகின்றேன். யாமார்க்கும் குடியல்லோம் யமனை அஞ்சோம் என்று சொன்னார் நாவுக்கரசர் அப்பரடிகள். அவர் உலவிய தமிழக பூமி.

சிங்கள அரசின் ஈவு இரக்கம் அற்ற கொடூர இராணுவத் தாக்குதலுக்கும், தமிழர் இன அழிப்பு யுத்தத்துக்கும், முழு அளவில் இந்திய அரசு ஆயுதங்களைத் தந்தும், வட்டி இல்லாக் கடனாக ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியும், தமிழர்கள் இனி எந்நாளும் மன்னிக்க முடியாத, பச்சைத்துரோகத்தைச் செய்து இருக்கிறது.

இந்தத் துரோகத்தின் முழுப்பங்காளிதான் கலைஞர் கருணாநிதி ஆவார்.

Mon, 06/04/2009

திண்டுக்கல் லயன்ஸ் கிளப்

Sun, 15/03/2009

மும்பையில் உள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் குழு சார்பில் ஈழத் தமிழர் படுகொலைகளைக் கண்டித்து, மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம் மும்பை நகரின் சயான் கோலிவாடாவில் 15.3.09 அன்று நடைபெற்றது. இந்த எழுச்சி மிகுக் கூட்டத்தில் பங்கு ஏற்ற வைகோவின் உணர்ச்சிகர உரையில் இருந்து...

Wed, 15/04/2009

“அகில இந்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்துகிற தேர்வுகளில் 1999-ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப் படுகின்ற தேர்வு முறை காரணமாக இந்தி பேசாத மாநில மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் கொழுந்து விட்டு எரிகிற பிரச்சினையாகும். இதில் தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதும் வாய்ப்பு இல்லாமல் போவதால் பெரும் அநீதி தமிழக மாணவர்களுக்கு இழைக்கப் பட்டுள்ளது,”

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)