இந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அன்னைத் தமிழ்மொழியின் உரிமை காக்கத் தமிழர்களைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அறப்போர்க்களம் காண அறைகூவி அழைத்ததால், 1963 ஆம் ஆண்டில் இருந்தே தீவிரம் அடைந்த மொழிப்போராட்டம், 1964 ஜனவரி 24 இல் சிங்கத் தமிழன் சின்னச்சாமி நெருப்புக்குத் தன் உயிரைத் தாரை வார்க்க, கிளர்ச்சித் தீ தமிழர்களின் மனங்களில் பரவ, 1965 ஜனவரி 25 இல் தமிழ்நாட்டின் மாணவர் சமுதாயம் சிங்கமெனச் சிலிர்த்து எழுந்து போராட்டத்தில் குதித்து, இலட்சக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகள், பள்ளிகள், வகுப்புகளைப் புறக்கணித்துப் பிரளயம்போல் பொங்கி எழுந்தனர்.