தலைமைக் கழக அறிவிப்பு – இளைஞர் அணிச் செயலாளர் நியமனம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர் திரு ப.த.ஆசைத்தம்பி (முகவரி: 1ஏ, பெருமாள்கோவில் தெரு, குத்தாலம் -609 801, மயிலாடுதுறை மாவட்டம். அலைபேசி: 97899 83907) அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மாநில இளைஞர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
#MDMK #MDMKITWING
புத்தாண்டு வாழ்த்து !
சாதி, சமய மோதல்கள் இல்லாத சமத்துவமும், சகோதரத்துவமும், சமூகநீதியும் தமிழகத்தில் முழுமையாக நிலைநிறுத்தப்படட்டும்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து!
மனிதநேயம் மண்ணில் செழிக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை காக்கவும் சூளுரைப்போம் எனக் கூறி, கிறித்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
வைகோ கோரிக்கை ஏற்பு
அமைச்சர், அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்தியில் பேசினர்.
அப்போது வைகோ குறுக்கிட்டு, “இங்கே எல்லோரும் இந்தியில் பேசுகின்றார்கள; நான் எப்படித் தெரிந்து கொள்வது?” என்று கேட்டார்.
நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம்
நாகாலாந்து துப்பாக்கிச் சூடு குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்க அறிக்கை வாசித்தார். அப்பொழுது வைகோ குறுக்கிட்டு, நாகாலாந்தில் உங்கள் இராணுவம் அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்கின்றது; இங்கே உங்கள் அரசு ஜனநாயகத்தைப் படுகொலை செய்கின்றது என்று கூறினார்.