முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • நன்கொடை
  • தொடர்புக்கு
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / கோவில்பட்டி தொடரி நிலையப் பிரச்சினைகள்

கோவில்பட்டி தொடரி நிலையப் பிரச்சினைகள்

May 16, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

கோவில்பட்டி தொடரி நிலையப் பிரச்சினைகள்.
தெற்குத் தொடரி பொது மேலாளருக்கு வைகோ, எம்.பி., கோரிக்கை!

தென் தமிழ்நாட்டில், கோவில்பட்டி நகரம் ஒரு முதன்மையான வணிக மையம் ஆகும். நூற்பு ஆலைகள், சிறு குறு தொழில்கள், பருத்தி, கடலை மிட்டாய், மிளகாய், வெள்ளரிக்காய் உட்பட எத்தனையோ பொருட்கள் இங்கிருந்து இந்தியா முழுமையும் செல்கின்றன. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இந்தியப் படையிலும், துணைப் படைகளிலும் பணிபுரிகின்றார்கள். கோவில்பட்டி தவிர, விளாத்திகுளம், எட்டையபுரம், ஒட்டப்பிடாரம் பகுதி மக்களும் கோவில்பட்டிக்கு வந்துதான் தொடரிகளில் பயணிக்கின்றார்கள்.

ஒவ்வொரு நாளும், 30 தொடரிகள், கோவில்பட்டி வழியாகச் செல்கின்றன. ஆனால், சில தொடரிகள் இங்கே நிற்பது இல்லை. அனைத்துத் தொடரிகளும், கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

கோவில்பட்டி தொடரி நிலையத்தின் தண்டவாளங்களைக் கடந்து மறுபுறம் செல்ல, சுமைகளுடன் நடைப் பாலப் படிக்கட்டுகளில் ஏற முடியாமல், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், சிரமப்படுகின்றார்கள். எனவே, பளுதூக்கியும், நகரும் படிக்கட்டும் அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை – 8
16.05.2022

#Vaiko #DuraiVaiko #MDMK

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 20.05.2022

Related News

சங்கொலி 20.05.2022
May 16, 2022 by mdmk
சங்கொலி 13.05.2022
May 13, 2022 by mdmk
சங்கொலி 06.05.2022
May 6, 2022 by mdmk