தமிழ்நாட்டில் அதிவிரைவு வந்தே சாதாரண இரயில்கள் இயக்கப்படுமா? வைகோ கேள்விக்கு இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில்
தமிழ்நாட்டில் அதிவிரைவு வந்தே சாதாரண இரயில்கள் இயக்கப்படுமா?
வைகோ கேள்விக்கு இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில்
கேள்வி எண். 1572
தமிழ்நாட்டில், அதிவிரைவு வந்தே சாதாரண இரயில்கள் இயக்கப்படுமா? என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, 15.12.2023 அன்று ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அளித்த பதில் வருமாறு:-
(அ) ரயில்வே, சாமானிய மக்களுக்காக ஏசி அல்லாத அதிவிரைவு வந்தே சாதாரண இரயிலின் சோதனை ஓட்டத்தை இந்திய இரயில்வே நடத்தியதா?
(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்;
(இ) தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற ஏழை மக்களுக்கு சாதாரண படுக்கை மற்றும் பொது வகுப்பு வசதிகள் உள்ளதா?அப்படியானால், கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் யாவை?
(ஈ) வந்தே சதாரண ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் வழித்தடங்களில் தமிழகமும் உள்ளடங்குமா?
(உ) அப்படியானால், இந்த ரயில்கள் எப்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளன?
இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில்:
(அ) முதல் (உ)
இரயில்வே தொடர்பு மாநில எல்லைகளைத் தாண்டிச் செல்லும்போது, அதன் தேவைக்கேற்ப, எல்லைகளைக் தாண்டி இரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இரயில் சேவைகளை அறிமுகப்படுத்துவது என்பது இந்திய ரயில்வேயின் போக்குவரத்து செயல்பாட்டு சாத்தியங்கள் மற்றும் நிதிநிலை போன்றவற்றுக்கு உட்பட்டவையாகும்.
‘தாயகம்’ தலைமை நிலையம்
சென்னை – 8 மறுமலர்ச்சி தி.மு.க.,
19.12.2023