ரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் மறைவு! வைகோ இரங்கல்
ரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் மறைவு!
வைகோ இரங்கல்
திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மறைந்தார் என்ற செய்தி அறிந்து துயரம் அடைந்தேன்.
தொடக்கத்தில் இந்திய விமானப்படையில் பணியாற்றிய இவர், பின்னர் நாடகங்களில் நடித்து, அதன்பின்னர் திரைப்படங்களிலும், சின்னத் திரையிலும் முத்திரை பதித்தார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து, கலைத்துறையில் சேவை செய்து வந்த டெல்லி கணேஷ் அவர்களின் மறைவு திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயரம் அடைந்திருக்கிற அவரது குடும்பத்தினருக்கும், கலைத்துறையினருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை – 8
10.11.2024