முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / தமிழ்நாட்டின் நலன் காக்கப் போராடும் தலைவர் வைகோ அவர்களின் சாதனை சரித்திரம் தொடர்கிறது!

தமிழ்நாட்டின் நலன் காக்கப் போராடும் தலைவர் வைகோ அவர்களின் சாதனை சரித்திரம் தொடர்கிறது!

கேரளாவில் சீமைக்கருவேல
செடிகளை பார்க்க முடியாது. மீண்டும் சீமைக்கருவேலம் ஒழிப்பு பணி தமிழகத்தில் மின்னல் வேகத்தில் நடைபெறப் போகிறது.

வரலாறு படைக்கும் தலைவர் வைகோ அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் தடைகளைத் தகர்த்து வெற்றி பெற்றே தீரும்.இதுவும் ஒரு சான்று!
February 2, 2022 by mdmk in அறிக்கைகள் செய்திகள்

தமிழ்நாட்டின் நலன் காக்கப் போராடும் தலைவர் வைகோ அவர்களின் சாதனை சரித்திரம் தொடர்கிறது!

நிலத்தில் ஆழமாக வேரோடி நிலத்தடி
நீரை உறிஞ்சி, மண்ணின் வளத்தை கெடுத்து, மண்ணை மலடாக்ககூடிய நச்சுச்செடி சீமைக்கருவேலம் ஆகும்.

இச்செடி நிலத்தடி நீர் இல்லாத இடத்திலும் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்து தன்னை காத்துக்கொள்ளும் தன்மையுடையது.

இந்த நச்சுச்செடியின் கீழ் கட்டப்பட்டு இருக்கிற கால்நடைகள் இனவிருத்தி இன்றி மலடாகும்.

இவற்றின் மரக்கிளைகளில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.

சீமைக் கருவேல செடிகள் அதிக அளவில் கரியமில வாயுவை வெளியிடுகின்றன.

இதன் இலை காய் பூ எதுவும் மனிதன் உயிர்வாழ பயன்படுவதில்லை.

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழலும் நிலத்தடி நீரும் மண்வளமும் பாதுகாக்கப்படும் என்று தலைவர் வைகோ அவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தார்கள்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சீமை கருவேல நச்சுச்செடியால் விளைய கூடிய ஆபத்துக்களை உணர்ந்து தமிழகம் முழுவதும் அவற்றை அகற்ற வேண்டுமென்று ஆணை இட்டது.

இவ்வழக்கு (WP (MD) 16485 / 2015 )இன்று (02.02.2022)சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தலைவர் வைகோ அவர்கள் தாக்கல் செய்த இவ்வழக்கின் முக்கியத்துவம் உணர்ந்து, வழக்கில் கூறப்படுகிற கருத்துக்களை ஏற்று,

தமிழகத்தின் மண்வளத்தை – சுற்றுச்சூழலை பாதுகாக்க சீமை கருவேல் நச்சுச் செடியை அடியோடு அகற்ற தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இரண்டு வாரங்களில் இவ்வழக்கு தொடர்பான அரசின் நிலையை இந்நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், மனித சமூகத்திற்கு பயன்படாத சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் – என்ற நிலைப்பாட்டில் தான் அரசு இருக்கிறது என்றும்,

இந்த நச்சுச் செடிகளை அகற்றும் முறையை அரசுடன் கலந்து ஆலோசித்து, அதற்கான திட்டத்தை இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர் மாண்புமிகு ஏ. செல்வம் (தற்போது பணி ஓய்வு) அவர்கள் முன்பு அளித்த அந்த தீர்ப்பு நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான தீர்ப்பாகும்.

தமிழகத்தின் உள்ள மாநகராட்சிகளிலும்- அனைத்து மாவட்ட ஊராட்சிகளிலும்- ஒன்றியங்களிலும் – ஊராட்சிகளிலும் – நகராட்சிகளிலும்- பேரூராட்சிகளிலும் வழக்கின் தீர்ப்பை நிறைவேற்ற 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் ஆணையர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பதும், தமிழக சட்டத்துறை வரலாற்றில் 978 பிரதிவாதிகளை கொண்ட வழக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீமைக்கருவேல
செடியை வளர்க்கக் கூடாத செடிகள் என அமெரிக்க அரசு பட்டியலிட்டுள்ளது.

கேரளாவில் சீமைக்கருவேல
செடிகளை பார்க்க முடியாது. மீண்டும் சீமைக்கருவேலம் ஒழிப்பு பணி தமிழகத்தில் மின்னல் வேகத்தில் நடைபெறப் போகிறது.

வரலாறு படைக்கும் தலைவர் வைகோ அவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் தடைகளைத் தகர்த்து வெற்றி பெற்றே தீரும்.இதுவும் ஒரு சான்று!.

துரை வைகோ
தலைமைக் கழக செயலாளர்.
மறுமலர்ச்சி தி.மு.க
தாயகம்
02.02.2022

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே மிஞ்சுகின்றது - வைகோ அறிக்கை!
Next Post
சின்னம் பெறுவதற்கான A,B படிவங்களை நிரப்பும் முறைகுறித்து விளக்கும்

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin