முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • Uncategorized
  • / மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊதியத்தை மாற்றியமைக்க அரசு பரிசீலிக்கிறதா? வைகோ கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதில்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊதியத்தை மாற்றியமைக்க அரசு பரிசீலிக்கிறதா? வைகோ கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதில்

August 11, 2023 by Admin in Uncategorized

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊதியத்தை மாற்றியமைக்க அரசு பரிசீலிக்கிறதா?

வைகோ கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதில்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊதியத்தை மாற்றியமைக்க அரசு பரிசீலிக்கிறதா? என வைகோ எம்.பி. அவர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்திய ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி 02.08.2023 அன்று அளித்த பதில் வருமாறு:-

கேள்வி எண். 1545

(அ) அனைத்துத் துறைகளிலும் பணவீக்கம் மற்றும் ஊதிய உயர்வைக் கருத்தில் கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மாற்றியமைப்பதை அரசாங்கம் பரிசீலிக்கிறதா?

(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்;

(இ) அனைத்துத் தரப்புகளின் தொடர் கோரிக்கைகளின் பயனாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை நாட்களை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா?

(ஈ) அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில்:

(அ)மற்றும் (ஆ): மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005, பிரிவு 6 (1) இன் படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒவ்வொரு நிதியாண்டுக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய விகிதத்தை, விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-AL) மாற்றத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிக்கை வழங்குகிறது.

சிம்லாவில் உள்ள தொழிலாளர் பணியகத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான குறியீடு வேறுபட்டது. முந்தைய நிதியாண்டின் ஊதிய விகிதத்தை விட குறைவான ஊதிய விகிதம் இருக்கும் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் கணக்கிடப்பட்ட ஊதிய விகிதம் இருந்தால், அது முந்தைய நிதியாண்டு ஊதிய விகிதத்தை பராமரிப்பதன் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

ஊதிய விகிதம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும் மாநில அரசுகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்திற்கு மேல் ஊதியத்தை வழங்கலாம்.

(இ) மற்றும் (ஈ): மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் 2005, நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு குறைந்தபட்சம் நூறு நாட்களுக்கு வேலை வழங்குவதற்கான சட்டமாகும். வேலையைச் செய்ய முன்வந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிதியாண்டிலும் வேலை மற்றும் கூலிக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

இது தவிர, வறட்சி மற்றும் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் ஒரு நிதியாண்டில் கூடுதலாக 50 நாட்கள் வரை வேலை வாய்ப்பு வழங்கப்படும். சட்டத்தின் பிரிவு 3 (4) இன் படி, மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்ட காலத்திற்கு மேல் கூடுதல் வேலை நாட்களை வழங்குவதற்கு வழிவகை செய்யலாம்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
}11.08.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
தொல்லியல் கல்வெட்டு அறிஞர் ஈரோடு புலவர் செ.இராசு மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! வைகோ இரங்கல்
Next Post
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊதியத்தை மாற்றியமைக்க அரசு பரிசீலிக்கிறதா? வைகோ கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதில்

Related News

சங்கொலி 20.06.2025
June 13, 2025 by Admin
சங்கொலி 13.06.2025
June 6, 2025 by Admin
சங்கொலி 06.06.2025
June 3, 2025 by Admin