முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / மதுரை: சுற்றுலா இரயில் பெட்டியில் தீ விபத்து! உயிரிழந்தோருக்கு வைகோ இரங்கல்

மதுரை: சுற்றுலா இரயில் பெட்டியில் தீ விபத்து! உயிரிழந்தோருக்கு வைகோ இரங்கல்

August 26, 2023 by Admin in அறிக்கைகள்

மதுரை: சுற்றுலா இரயில் பெட்டியில் தீ விபத்து!

உயிரிழந்தோருக்கு வைகோ இரங்கல்

உத்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து மதுரைக்கு வந்த சுற்றுலா இரயில் 17.08.2023 அன்று மதுரை இரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில், போடி செல்லும் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று, அந்தப் பெட்டியில் இருந்த சுற்றுலா பயணிகள் கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்தி சமையல் செய்தபோது, அது வெடித்து தீப்பற்றி எரிந்ததில் 9 பேர் பலியான செய்தி அறிந்து பதற்றமும் அதிர்ச்சியும் மீளா துயரமும் அடைந்தேன்.

பொதுவாக இயற்கை மரணத்தையே தாங்கிக் கொள்ள முடியாத நமக்கு, தீ விபத்தில் சிக்கி பயணிகள் மரணம் அடைந்த கோர விபத்து மிகவும் கொடுமையானது. விபத்தில் உயிரிழந்த அப்பாவிகளான பயணிகளுக்கு என் €ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த பயணிகளையும், மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டுகிறேன்.

தீயணைப்பு வீரர்கள், இரயில்வே அதிகாரிகள், மருத்துவக் குழுவினர், பாதுகாப்புப் படையினர், வருவாய்த் துறையினர், மாவட்ட ஆட்சித் தலைவர் என அதிகாரிகள் பலரும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது நமக்கு ஆறுதல் தருகிறது.

இரயில் பெட்டிகளில் கேஸ் சிலிண்டர் போன்ற வெடி பொருட்களை எடுத்துச் செல்வதை இரயில்வே காவல்துறையினர் கடுமையான முறையில் சோதனை செய்து, இதுபோன்ற விபத்துகளை தடுத்து நிறுத்துவது இன்றியமையாத கடமையாகும்.

தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மகிழ்ச்சியுடன் வருகை தந்து எதிர்பாராத நிலையில், விபத்திற்கு ஆளாகி மரணத்தைத் தழுவியுள்ள சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் என் ஆழ்ந்த இரங்கல்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
26.08.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 25.08.2023
Next Post
சங்கொலி 01.09.2023

Related News

சங்கொலி 06.10.2023
September 29, 2023 by Admin
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு! வைகோ இரங்கல்
September 28, 2023 by Admin
மீலாது நபி திருநாள் – வைகோ வாழ்த்து
September 27, 2023 by Admin