முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / ஆந்திராவில்; கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கோரிக்கை

ஆந்திராவில்; கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கோரிக்கை

September 12, 2023 by Admin in அறிக்கைகள்

ஆந்திராவில்; கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க
ஆந்திர முதல்வருக்கு வைகோ கோரிக்கை

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை டேனியல் தாமஸ் தெருவில் வசிக்கும் மகாலெட்சுமி மற்றும் மகாராஜா ஆகியோரின் மகன் திரு. ம. வெற்றி விசுவா என்பவர் சென்னையில் உள்ள SUCHNA MARINE SERVICES PVT LTD என்ற கப்பல் நிறுவனத்தில் DECK CADET ஆக பணிக்கு சேர்ந்து ஆந்திர மாநிலம்,

கிருஷ்ணபட்டணம் M.V. Penna Suraksha கப்பலில் பணி செய்து வந்துள்ளார்.

கடந்த 7.9.2023 அன்று இரவு 10 மணிக்கு வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு மூலம் தங்களுடைய பெற்றோருடன் பேசிய வெற்றி விசுவா, மறுநாள் விடியற்காலை 4 மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டி இருப்பதால் தூங்கச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

8.9.2023 காலை கப்பல் நிறுவன மேலாளர், வெற்றி விசுவாவின் பெற்றோருக்கு போன் செய்து, உங்கள் மகன் வேலைக்கு வரவில்லை என்றும், கப்பல் முழுவதும் தேடியும் அவனைக் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.

வெற்றி விசுவாவின் பெற்றோர்கள் கப்பல் கேப்டனை தொடர்பு கொண்டு, தங்கள் மகனைப் பற்றி கேட்டதற்கு அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

தங்கள் மகன் குறித்து கவலை அடைந்துள்ள பெற்றோர், மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் திரு. வைகோ எம்.பி அவர்களிடம் தங்கள் மகனை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

திரு. வைகோ அவர்களும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் அவசரக் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் ம.வெற்றி விசுவாவை கண்டுபிடித்து அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
12.09.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 15.09.2023
Next Post
சங்கொலி 22.09.2023

Related News

சங்கொலி 04.09.2026
August 28, 2026 by Admin
சங்கொலி 28.08.2026
August 22, 2026 by Admin
சங்கொலி 21.08.2026
August 22, 2026 by Admin