நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்து பலியானோருக்கு வைகோ இரங்கல்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றுலா பேருந்து விபத்து
பலியானோருக்கு வைகோ இரங்கல்
தென்காசி மாவட்டம் – கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஓட்டுர் உள்ளிட்ட 61 பேர் கேரளா, நீலகிரி, கோவை, மருதமலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சுற்றுலா செல்ல திட்டமிட்டு, கடந்த 28 ஆம் தேதி கடையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இவர்கள் கேரளா மாநிலத்தில் சோட்டானிக்கரை, குருவாயூர் சென்று பார்த்துவிட்டு, நேற்று அதிகாலை நீலகிரி வந்துடைந்துள்ளனர். நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இரவில் கோவை செல்வதற்காக புறப்பட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில், குன்னூர் மரப்பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது, ஓட்டுரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த தடுப்பை இடித்துக்கொண்டு 80 அடி பள்ளத்தில் கவிந்துவிட்டது. இதனால், பேருந்தில் இருந்த முப்புடாதி, நிதின், ஜெயா, தங்கம், பத்மராணி உள்ளிட்ட 9 பேர் பலியாகி உள்ள செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
இந்த விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு உரிய சிகிச்சை அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
01.10.2023