முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு! வைகோ இரங்கல்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு! வைகோ இரங்கல்

October 19, 2023 by Admin in அறிக்கைகள்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவு!

வைகோ இரங்கல்

மேல் மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார் அவர்கள் மாரடைப்பு காரணமாக இன்று (19.10.2023) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள ஆலயத்தின் கருவறையில் பெண்கள் வழிபாடு செய்யும் அமைதிப் புரட்சியை ஆன்மீகத் துறையில் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் பங்காரு அடிகளார்.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிகள் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் அந்தப் பகுதியில் உள்ள ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்பினை வழங்கி, அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல உதவியது.

ஆதிபராசக்தி சித்தர் பீடம் அந்தப் பகுதியில் அமைந்ததால் கல்வி, சமுதாயம், விவசாயம், வணிகம் என பல துறைகளிலும் முன்னேற்றம் நிலவியது.

பங்காரு அடிகளாரின் சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 2019 ஆம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பாராட்டியது.

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும், செவ்வாடை தொண்டர்களுக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
19.10.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 20.10.2023
Next Post
மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் வைகோ அறிக்கை

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin