முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / உசிலம்பட்டி – திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்து விடுக! வைகோ அறிக்கை

உசிலம்பட்டி – திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்து விடுக! வைகோ அறிக்கை

November 8, 2023 by Admin in அறிக்கைகள்

உசிலம்பட்டி – திருமங்கலம் பகுதி விவசாயிகள் நலனுக்காக
வைகை அணை நீரைத் திறந்து விடுக!

வைகோ அறிக்கை

உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் போதிய மழை இல்லாததால், அந்தப் பகுதி மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

வைகை அணையிலிருந்து திறக்கப்படும் திருமங்கலம் பிரதான கால்வாய் மற்றும் 58 கிராமக் கால்வாய் தண்ணீரால் நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள், 160 குளங்கள், 200க்கும் மேற்பட்ட ஊரணிகள் நிரம்பும். இதன் மூலம் 28 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் தேவையான குடிதண்ணீர் கிடைக்கும்.

தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையாலும், முல்லைப் பெரியாறு அணை நீராலும் வைகை அணை நிரம்பி உள்ளது.

எனவே, திருமங்கலம், உசிலம்பட்டி பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வைகை அணையிலிருந்து 58 கிராமக் கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாய்களில் தண்ணீரை திறந்துவிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
08.11.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
இராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசு முயற்சி! வைகோ கண்டனம்
Next Post
சங்கொலி 17.11.2023

Related News

சங்கொலி 03.04.2026
March 27, 2026 by Admin
சங்கொலி 27.03.2026
March 20, 2026 by Admin
சங்கொலி 20.03.2026
March 13, 2026 by Admin