முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா அவர்களின் உடல்நலம் விசாரித்தார் வைகோ!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா அவர்களின் உடல்நலம் விசாரித்தார் வைகோ!

November 14, 2023 by Admin in அறிக்கைகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்
என்.சங்கரய்யா அவர்களின்
உடல்நலம் விசாரித்தார் வைகோ!

விடுதலை போராட்ட வீரரும், இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவரும், பொதுவுடமைக் கட்சி இந்தியாவில் தொடங்கப்பட்டபோது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 36 பேரில் ஒருவரும், 102 வயதில் எண்பதாண்டு பொதுவாழ்க்கைக்கு உரியவரும், தமிழ்நாடு அரசின் தகைசால் விருது பெற்றவருமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்ஸிஜன் குறைவு ஏற்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மருத்துவமனையில் தோழர் என்.சங்கரய்யா அவர்களை பார்த்ததுடன், மருத்துவர்களிடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளிடமும், சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினர்களிடமும், அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

‘தாயகம்’                                                                              வைகோ
சென்னை – 8                                                              பொதுச்செயலாளர்
14.11.2023                                                                      மறுமலர்ச்சி தி.மு.க.,

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 17.11.2023
Next Post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மறைவு! வைகோ இரங்கல்

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin