முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / கொப்பரைத் தேங்காயை அரசே பதப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் – நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ வலியுறுத்தல்

கொப்பரைத் தேங்காயை அரசே பதப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும் – நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ வலியுறுத்தல்

December 12, 2023 by Admin in அறிக்கைகள் மாநிலங்களவை உரைகள்

கொப்பரைத் தேங்காயை
அரசே பதப்படுத்தி விற்பனை செய்ய வேண்டும்

நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ வலியுறுத்தல்

ஒன்றிய அரசு நிறுவனமான, இந்திய வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஆணையம் (NAFED), விவசாயிகளிடமிருந்து கொப்பரை தேங்காய்களை ஒரு கிலோ 108 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த உற்பத்தியில் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீத தேங்காய்கள் வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் கொப்பரை தேங்காய் விலை 90 ரூபாயிலிருந்து 85 ரூபாயாக குறைந்துள்ளது. இந்திய வேளாண்மை கூட்டுறவு சங்க ஏலத்தில் விற்பனை செய்யும் வாய்ப்பை பயன்படுத்தி, பெரிய நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து, ஒரு கிலோ தேங்காயை 65 ரூபாய்க்கு ஏலம் எடுக்க திட்டமிட்டுள்ளன. இதன் மூலம், ஒரு கிலோ கொப்பரை தேங்காய் விலை 50 ரூபாயாகக் குறைந்துவிடும். தேங்காய் விலை 12 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக சந்தையில் குறையும். இது நடந்தால் தென்னை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெரும் நஷ்டத்திற்கு ஆளாக நேரிடும்.

இத்தகைய நடவடிக்கையில் இருந்து பாதுகாக்க, தேங்காயை அரசு நிறுவனமே பதப்படுத்தி, எண்ணெய் ஆக சந்தைப்படுத்த வேண்டும் என்று கோரி தென்னிந்திய விவசாயிகள் சங்கம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்திய வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஆணையம், விவசாயிகளிடமிருந்து கோதுமையை கொள்முதல் செய்து, ‘பாரத் அட்டா’ என்ற பெயரில் கோதுமை மாவையும், பருப்பை வாங்கி ‘பாரத் தால்’ என்ற பெயரிலும் விற்பனை செய்து வருகின்றது.

எனவே, கொப்பரைத் தேங்காயைப் பதப்படுத்தி, பொதுமக்களுக்கு விற்பனை செய்ய, ‘பாரத் தேங்காய் எண்ணெய்’ என அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என இந்திய தென்னை விவசாய சங்கங்கள் சார்பில் வலியுறுத்துகிறேன். இதன் மூலம், இடைத்தரகர்களை அகற்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவர்.

‘தாயகம்’                                                                                        தலைமைக் கழகம்
சென்னை – 8                                                                                 மறுமலர்ச்சி தி.மு.க.,
12.12.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
மதிமுக நிர்வாக குழுக் கூட்டம் - 10.12.2023 தீர்மானங்கள்
Next Post
பாதுகாப்பு வளையத்தை தாண்டி நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வு அதிர்ச்சி தருகிறது வைகோ அறிக்கை

Related News

சங்கொலி 03.04.2026
March 27, 2026 by Admin
சங்கொலி 27.03.2026
March 20, 2026 by Admin
சங்கொலி 20.03.2026
March 13, 2026 by Admin