முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / தமிழ்நாட்டை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரி துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரி துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

December 23, 2023 by Admin in அறிக்கைகள்

தமிழ்நாட்டை இயற்கைப் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க மறுத்து.. போதிய ஒன்றிய நிவாரண நிதியை அளிக்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக சார்பில் சிவகாசியில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

வரலாறு காணாத இயற்கைப் பேரிடரால் தமிழ்நாட்டு மக்கள் துயரக் கடலில் மூழ்கி இருக்கிறார்கள்.

டிசம்பர் 04 ம் தேதி வீசிய மிக்ஜாம் புயலால் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பெருமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மிக்ஜாம் புயலில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த பெருமழையால் மீள முடியாத துயரத்தில் தென்மாவட்ட மக்கள் சிக்கி இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கிறார்கள்.

எனவே தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டைப் பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க கோரி இருக்கிறது.

ஆனால் ஒன்றிய பாஜக அரசு அதனை ஏற்காமல் போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யாமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.

அவ்வாறு தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து….

தமிழ்நாட்டை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரி நாளை (24.12.2023) மாலை 03:00 மணிக்கு எனது தலைமையில் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
23.12.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 29.12.2023
Next Post
கிறிஸ்துமஸ் - வைகோ வாழ்த்து!

Related News

சங்கொலி 03.04.2026
March 27, 2026 by Admin
சங்கொலி 27.03.2026
March 20, 2026 by Admin
சங்கொலி 20.03.2026
March 13, 2026 by Admin