திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல்; காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! துரை வைகோ அறிக்கை
திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல்;
காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!
துரை வைகோ அறிக்கை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த சகோதரர் சேநபிரபு, நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகின்றார். இவரை 24.01.2024 புதன்கிழமை இரவு , செய்தியாளர் அவரது வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியுள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய செய்தியாளர் நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் நேசபிரபு தற்போது மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காவல்துறையினர், இதற்கு காரணமானவர்களை உடனடி…
[16:42, 25/01/2024] Elangovan: செய்தியாளர் நேசபிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய
குற்றவாளிகளைக் கைது செய்து உரிய தண்டனை வழங்கிடுக!
வைகோ அறிக்கை
திருப்பூர் மாவட்டம் – பல்லடம் வட்டத்தைச் சார்ந்த திரு நேசபிரபு என்பவர் நியூஸ்-7 தொலைக்காட்சியின் செய்தியாளராக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு அவர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
பரபரப்பான சூழ்நிலையில், கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுகலம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசும் விரைந்து செயல்பட்டு இரண்டு பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட நேச பிரபு அவர்களுக்கு மூன்று இலட்ச ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறார்.
தமிழக அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்குமாறும், செய்தியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை – 8
25.01.2024