முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / 68 சமூகத்தவர்களுக்கு, சீர்மரபு பழங்குடியினர் ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களிடம் துரை வைகோ கோரிக்கை!

68 சமூகத்தவர்களுக்கு, சீர்மரபு பழங்குடியினர் ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களிடம் துரை வைகோ கோரிக்கை!

February 5, 2024 by Admin in அறிக்கைகள்

68 சமூகத்தவர்களுக்கு, சீர்மரபு பழங்குடியினர்
ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்

அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களிடம்
துரை வைகோ கோரிக்கை!

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைச் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்களை அவரது இல்லத்தில் மறுமலர்ச்சி தி.மு.கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் இன்று (05.02.2024) காலை சந்தித்து, தமிழகம் முழுவதும் உள்ள இந்த 68 சமூகத்தவர்களுக்கு, சீர்மரபு பழங்குடியினர் (DNTs) என ஒற்றைச் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோரிக்கை மனுவின் விவரம் வருமாறு:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் என்னைச் சந்தித்தனர்.

கடந்த அஇஅதிமுக ஆட்சியில் நடந்த குளறுபடியால், தமிழகம் முழுவதும் உள்ள ஊராளிக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், பிறமலைக் கள்ளர், மறவர், அம்பலகாரர், வலையர், தொட்டிய நாயக்கர், போயர், குறவர் உள்ளிட்ட சீர்மரபினரான 68 சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும், மத்திய அரசு உரிமைகளைப் பெறுவதற்கு ‘சீர்மரபு பழங்குடியினர்’ DNTs (Denotified Tribes) எனவும், மாநில அரசு உரிமைகளை பெறுவதற்கு ‘சீர்மரபு வகுப்பினர்’ DNCs (Denotified communities) எனவும் ‘இரட்டை சாதிச்சான்றிதழ்’ வழங்கும் அநீதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையைப் போக்கிட, தமிழகம் முழுவதும் உள்ள இந்த 68 சமூகத்தவர்கள் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்புமிக்க அண்ணன் தளபதி அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது, சீர்மரபு பழங்குடியினர் (DNTs) என ஒற்றைச் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணன் தளபதி அவர்கள் அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார்.

எனவே, இச்சமூக மக்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, உடனடியாக அரசாணை வெளியிட்டு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாக அதிகாரிகளை அழைத்து, மாண்புமிகு முதல்வர் அவர்களும் இது சம்பந்தமாக ஏற்கனவே தேர்தல் வாக்குறுதி அளித்து இருக்கிறார். எனவே இந்த கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது, தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.கழககுமார், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெயசீலன், மற்றும் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க,
‘தாயகம்’
சென்னை – 8
05.02.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 09.02.2024
Next Post
தமிழகத்திற்கான பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும்! நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin