மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகக் குழு அவசரக் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
நிர்வாகக் குழு அவசரக் கூட்டம்
தலைமைக் கழக அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நாளை (07.03.2024 வியாழன்) காலை 10 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம், ஆகிய அமைப்புக்களின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள், தலைமைக் கழக மற்றும் அணிகளின் செயலாளர்கள் ஆகியோர் இதனையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பொருள்: நாடாளுமன்றத் தேர்தல் – 2024
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
‘தாயகம்’
சென்னை – 8
06.03.2024