முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / இந்தியாவின் எடிசனுக்கு இன்று 131வது பிறந்தநாள்! துரை வைகோ வாழ்த்து

இந்தியாவின் எடிசனுக்கு இன்று 131வது பிறந்தநாள்! துரை வைகோ வாழ்த்து

March 23, 2024 by Admin in அறிக்கைகள்

இந்தியாவின் எடிசனுக்கு இன்று 131வது பிறந்தநாள்!

துரை வைகோ வாழ்த்து

கோயம்புத்தூர் பகுதியில் கலங்கல் எனும் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில்,மிக சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து,பள்ளிப் படிப்பைக் கூட முறையாக கடக்காமல், அனுபவ அறிவாலும் தன் கடின உழைப்பாலும் முன்னேறிய இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன் என்று புகழப்படும் ஜி.டி.நாயுடுவின் 131 வது பிறந்தநாள் இன்று.

தொழில் நுட்பம் பெரிதாக முன்னேற்றம் அடைந்திடாத காலத்திலேயே இந்தியாவின் முதல் மின் மோட்டார்,பந்தய கார்கள்,கால்குலேட்டர்,தானியங்கி பயணச்சீட்டு கருவி,பத்தடி உயரம் வளரும் பருத்திச் செடி,மிக மெல்லிய சவரக் கத்தி,ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்ட வீடு உள்ளிட்ட பல சாதனைகளை அறிவியல் துணை கொண்டு செய்து உலக நாடுகளை வியக்க வைத்தவர் ஜி.டி நாயுடு.

அன்றைய நாட்களில் ஜிடி நாயுடுவுக்கும்-தந்தை பெரியாருக்கும் ஆரம்ப நாட்கள் தொட்டே பழக்கம் இருந்து வந்துள்ளது.

வரும்காலங்களில் தொலை தூரத்தில் இருக்கும் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர்,கம்பி இல்லாத தொலைபேசி மூலமாக பேசிக் கொள்வார்கள்,என பெரியார் குடியரசு இதழில் எழுதியதற்கு, ஜிடிநாயுடு போன்றவர்களின் கண்டுபிடிப்புகளின் மீது இருந்த நம்பிக்கை என்று கூட சொல்லலாம்.

ஜிடி நாயுடுவும் பெரியார் மீது மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். ஜி.டி நாயுவின் சொந்த இடத்தில் கோவையில் பெரியார் படிப்பகம் ஒன்று இன்றளவும் செயல்பாட்டில் உள்ளதே அதற்கு உதாரணம்

இப்படி,பள்ளிப் படிப்பைக் கூட முறையாக கடக்காமல்,தன் அனுபவ அறிவாலும்,அசாத்திய திறமையாலுமே உயர்ந்து,

தொழில்துறை,விவசாயம், ஆட்டோமொபைல் மற்றும் பொறியியல் என பல துறைகளில் தன் அசாத்திய பங்களிப்பை வழங்கிய இந்தியாவின் எடிசன் ஜி.டி.நாயுடு அவர்களின் 131 வது பிறந்தநாளில் அவரது நினைவைப் போற்றுவோம்…

அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மதிமுக
23.03.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 29.03.2024
Next Post
கொங்குச் சீமையின் கொள்கை வேங்கை ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. மறைவு! வைகோ கண்ணீர் அஞ்சலி

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin