முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / குவைத் மங்காப் நகர் தீ விபத்து! துரை வைகோ அறிக்கை

குவைத் மங்காப் நகர் தீ விபத்து! துரை வைகோ அறிக்கை

June 13, 2024 by Admin in அறிக்கைகள்

குவைத் மங்காப் நகர் தீ விபத்து!

துரை வைகோ அறிக்கை

குவைத் நாட்டில் மங்காப் நகரில் ஜூன் 12ஆம் தேதி தொழிலாளர்கள் தங்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் என அங்கிருந்து செய்திகள் வருகின்றன. இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் திரு. ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய அரசு விரைந்து செயல்பட்டு உயிர் இழந்தவர்களின் உடலை அவர்களின் ஊருக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

மதிப்பிற்க்குரிய தமிழக முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தீ விபத்தில் பலியான தோழர்களின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
தாயகம்,
சென்னை -8
13.06.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 14.06.2024
Next Post
சங்கொலி 21.06.2024

Related News

சங்கொலி 03.04.2026
March 27, 2026 by Admin
சங்கொலி 27.03.2026
March 20, 2026 by Admin
சங்கொலி 20.03.2026
March 13, 2026 by Admin