முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / நெல்லையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

நெல்லையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

June 15, 2024 by Admin in அறிக்கைகள்

நெல்லையில்
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்!

வைகோ கண்டனம்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன்குமார் (வயது 28), பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதயதாட்சாயினி (வயது 23) இணையர் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டனர். இந்த இணையருக்கு பொதுவுடமை இயக்கத் தோழர்கள் ஆதரவாக இருந்ததால் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் மீது ஒரு கும்பல் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பதும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
15.06.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 21.06.2024
Next Post
பக்ரீத் திருநாள்! வைகோ வாழ்த்து

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin