முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும், 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு; தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும்..! துரை வைகோ அறிக்கை

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும், 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு; தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும்..! துரை வைகோ அறிக்கை

June 23, 2024 by Admin in அறிக்கைகள்

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 மீனவர்களும், 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு;

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும்..!

துரை வைகோ அறிக்கை

இலங்கை கடற்படையினால்  இராமேஸ்வரத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 22 பேர் இன்று கைது செய்யப்பட்டதோடு அவர்களின் மூன்று விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. இதேப்போல, கடந்த வாரம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, அவர்களின் ஒரு விசைப்படகும் சிறைபிடிக்கப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 வரை, 150 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு மட்டும் 40 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், இந்த மீன்பிடி தடைக்காலம் முடிந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்ற 26 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதோடு, 4 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இலங்கை கடற்படையின் அட்டூழியச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனை அளிக்கின்றது.

தமிழக மீனவர்கள் பிரச்சனையில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்து வருவதால்தான் எந்தவித அச்சமும் இன்றி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றார்கள்.

ஒன்றிய பாஜக அரசு இப்பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்தி தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கும், வாழ்வாதாரத்திற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசோடு பேசி கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக அரசும் ஒன்றிய அரசிற்கு உரிய முறையில் அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
துரை வைகோ எம்.பி
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
தாயகம்
சென்னை-8
23.06.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 28.06.2024
Next Post
நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள்! வைகோ கடும் கண்டனம்

Related News

சங்கொலி 03.04.2026
March 27, 2026 by Admin
சங்கொலி 27.03.2026
March 20, 2026 by Admin
சங்கொலி 20.03.2026
March 13, 2026 by Admin