முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; வைகோ வரவேற்பு

பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; வைகோ வரவேற்பு

August 1, 2024 by Admin in அறிக்கைகள்

பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செல்லும்;
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு;

வைகோ வரவேற்பு

பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவுகளில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; இந்த இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று(01.08.2024) அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட பல மாநிலங்களின் உள் இட ஒதுக்கீடு முடிவுகளுக்கு எதிரான 20 வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, வரலாற்றுச் சிறப்புள்ள இத்தீர்ப்பை வழங்கியது சமத்துவத்திற்கு வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர் ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான 3 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2009 ஆம் ஆண்டு, முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் பட்டியல் இனத்தவரின் 18 விழுக்காடு இடஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகத்திற்கு 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்பது உறுதியாகி இருக்கிறது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகளில் 6 பேர், பட்டியலினத்தவர் – பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் ஒரு தரப்பு மட்டுமே பலன்களை அனுபவித்தால் அதில் மாநில அரசுகள் தலையிட முடியும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதிப்படுத்தினர்.

மேலும் இத்தகைய உள் இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவை மீறவில்லை என்றும் 6 நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட இந்த அரசியல் சாசன அமர்வில் நீதிபதி பேலா திரிவேதி மட்டுமே மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார்.

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் இத்தீர்ப்பு மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டி இருப்பதுடன், சமூக நீதி தழைக்கவும் வழிவகை செய்திருப்பது பாராட்டத்தக்கதாகும்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
01.08.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
பாஜக கூட்டணிக்கு ஒரு இடத்தைக் கூட தமிழ்நாடு வழங்காததால் தான் ஒன்றிய அரசு இவ்வளவு அலட்சியப் போக்கை காட்டுகிறதா? துரை வைகோ கடும் தாக்கு!
Next Post
இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர் படுகொலை! வைகோ கண்டனம்

Related News

சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin
சங்கொலி 09.01.2026
January 2, 2026 by Admin
சங்கொலி 02.01.2026
December 26, 2025 by Admin