முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / விவசாயிகளுக்கு டி.ஏ.பி. அடி உரம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கிடுக! தமிழக அரசுக்கு துரை வைகோ எம்.பி., கோரிக்கை

விவசாயிகளுக்கு டி.ஏ.பி. அடி உரம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கிடுக! தமிழக அரசுக்கு துரை வைகோ எம்.பி., கோரிக்கை

October 1, 2024 by Admin in அறிக்கைகள்

விவசாயிகளுக்கு டி.ஏ.பி. அடி உரம்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கிடுக!

தமிழக அரசுக்கு துரை வைகோ எம்.பி., கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்துள்ளதால், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மக்காசோளம், உளுந்து, பாசிப் பயிர் உள்ளிட்டவற்றை பயிரிட்டு உள்ளார்கள். அதற்கு அடி உரமாக டி.ஏ.பி. தேவைப்படுகிறது.

விவசாயிகள் தனியார் கடைகளில் டி.ஏ.பி. உரம் வாங்கச் சென்றால், அதனுடன் வேறு ஏதாவது உரத்தையும் சேர்த்து வாங்கச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து கடைகளில் விவசாயிகள் முறையிட்டபோது, எங்களுக்கு உரம் வழங்கும் நிறுவனங்கள், ஒரு உரத்தை வாங்கும்போது மற்றொரு உரத்தையும் சேர்த்துத்தான் விற்க வேண்டும் என்று எங்களிடம் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் இப்படி விற்க வேண்டிய நிலை இருக்கிறது என்கிறார்கள்.

விவசாயிகளின் இப்புகார் குறித்து தூத்துக்குடி மாவட்ட விவசாய இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்கள்.

இது போன்ற நிலை தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. எனவே, விவசாயிகளுக்கு பயிர்களின் அடி உரமான டி.ஏ.பி. தமிழக அரசின் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
‘தாயகம்’
சென்னை – 8
01.10.202

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சங்கொலி 04.10.2024
Next Post
சங்கொலி 11.10.2024

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin