முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / எல்.ஐ.சி இணையதளம் இந்தி மொழியில் மாற்றியமைப்பு! வைகோ கண்டனம்

எல்.ஐ.சி இணையதளம் இந்தி மொழியில் மாற்றியமைப்பு! வைகோ கண்டனம்

November 19, 2024 by Admin in அறிக்கைகள்

எல்.ஐ.சி இணையதளம் இந்தி மொழியில் மாற்றியமைப்பு!

வைகோ கண்டனம்

நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, பத்தாண்டு காலத்தில் மூர்க்கத்தனமான இந்தி திணிப்பை நடத்தி வருகிறது.

தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்கு கட்டாயப்படுத்தப் படுகிறது.

வானொலி ,தொலைக்காட்சிகளில் இந்தி மயம், இந்திய அரசின் திட்டங்களுக்கு இந்தி, சமஸ்கிருதத்தில் பெயர், குற்றவியல் சட்டங்களை மாற்றி இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு என்று பல வகைகளில் ஒன்றிய பாஜக அரசு இந்தி மொழியை வலுக்கட்டாயமாக புகுத்தி வருகிறது.

ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியை அலுவல் மொழியாக வலுக்கட்டாயமாக திணிக்கும் வகையில் அதற்கென்று தனியாக இந்தி ஆட்சி மொழிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒன்றிய அரசு அலுவலகக் கோப்புகள், கடிதத் தொடர்புகள் அனைத்தும் இந்தி மொழியில் இருப்பதை இந்தி மொழிப் பிரிவு கவனிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அது போல ஒன்றிய அரசின் சமூக ஊடகங்களில் முழுதாக இந்தி மொழிதான் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி இணையதளத்தை முழுமையாக இந்தியில் மாற்றி அமைத்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

காப்பீட்டுத் துறையில் மக்கள் பயன்பாட்டுக்கு உரிய முறையில் அனைத்து மாநில மொழிகளிலும் எல்.ஐ.சி இணையதளம் இயங்கினால்தான் நன்மை தருவதாக இருக்கும்.

ஆனால் ஒன்றிய பாஜக அரசு, இந்தி மொழியில் எல்ஐசி இணையதளத்தை மாற்றியதன் மூலம் இந்தி பேசாத மாநில மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருப்பது கண்கூடாக தெரிகிறது.

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்தும் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடும் நிலை ஏற்படும்.

எனவே இந்தி மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள எல்.ஐ.சி இணையதளத்தை முன்பிருந்ததைப் போல ஆங்கில மொழியில் உடனடியாக மாற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை – 8
19.11.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
எல்.ஐ.சி இணையதளம் இந்தி மொழியில் மாற்றியமைப்பு! வைகோ கண்டனம்
Next Post
சங்கொலி 29.11.2024

Related News

சங்கொலி 20.06.2025
June 13, 2025 by Admin
சங்கொலி 13.06.2025
June 6, 2025 by Admin
சங்கொலி 06.06.2025
June 3, 2025 by Admin