முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை மீண்டும் நிலைநாட்டிய முதல்வருக்குப் பாராட்டு! நன்றி; வைகோ அறிக்கை

இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை மீண்டும் நிலைநாட்டிய முதல்வருக்குப் பாராட்டு! நன்றி; வைகோ அறிக்கை

August 8, 2023 by Admin in அறிக்கைகள்

இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு
தமிழ்நாட்டில் இடம் இல்லை என்பதை மீண்டும் நிலைநாட்டிய முதல்வருக்குப் பாராட்டு! நன்றி;

வைகோ அறிக்கை

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் அவர்கள் எழுதிய “ இந்துத்துவப் பாசிசம் வேர்களும் -விழுதுகளும்” என்ற நூலை பொள்ளாச்சி எதிர் வெளியீடு பதிப்பகம் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருக்கிறது.

புத்தக அரங்கு எண் 101, 102 இல் ஈரோடு காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து, செந்திலதிபன் அவர்களின் புத்தகங்களை விற்கக் கூடாது என்று மிரட்டி இருக்கின்றனர். மேலும் புத்தகத்தின் விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என்றும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

அதேபோல, திராவிடர் கழகத்தின் புத்தக அரங்கில் விற்பனையாகி கொண்டிருக்கும் நூல்கள், மே 17 இயக்கத்தின் நிமிர் பதிப்பகத்தின் நூல்கள் இந்துத்துவ கருத்துகளுக்கு எதிரானவைகளாக இருப்பதால் அவற்றையும் காட்சிப்படுத்தக் கூடாது என்று மிரட்டிச் சென்றுள்ளனர்.

இந்தத் தகவல் தமிழக முதலமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டவுடன் நடவடிக்கை எடுத்து தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இந்துத்துவ சனாதன சக்திகள், வடநாடு போன்ற ஒரு நிலையை உருவாக்க முயன்று வருவதை அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இத்தகைய மதவெறி சனாதன கும்பல் எல்லா தளங்களிலும் ஊடுருவ தொடங்கி இருப்பதை ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்று திரண்டு முறியடிக்க வேண்டும்.

தமிழ்நாடு எப்போதும் திராவிட மண் என்பதை உணரச் செய்ய வேண்டும்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
08.08.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் மறுமலர்ச்சி திமுக சார்பில் புகழ் வணக்கம்
Next Post
தொல்லியல் கல்வெட்டு அறிஞர் ஈரோடு புலவர் செ.இராசு மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு! வைகோ இரங்கல்

Related News

சங்கொலி 06.10.2023
September 29, 2023 by Admin
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு! வைகோ இரங்கல்
September 28, 2023 by Admin
மீலாது நபி திருநாள் – வைகோ வாழ்த்து
September 27, 2023 by Admin