முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் மறுமலர்ச்சி திமுக சார்பில் புகழ் வணக்கம்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்
மறுமலர்ச்சி திமுக சார்பில் புகழ் வணக்கம்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மறுமலர்ச்சி திமுக சார்பில் பொருளாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் மலர் வளையம் வைத்து புகழ் வணக்கம் செலுத்தினர்.
உயர்நிலைக்குழு உறுப்பினரும், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளருமான சு.ஜீவன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினரும், தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளருமான கே.கழககுமார், மாவட்டச் செயலாளர்கள் தென்சென்னை மேற்கு வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை மேற்கு டி.சி.இராசேந்திரன், செங்கல்பட்டு வடக்கு மா.வை.மகேந்திரன், செங்கல்பட்டு கிழக்கு ஊனை பார்த்திபன், திருவள்ளூர் மு.பாபு, உயர்நிலைக்குழு உறுப்பினரும், கொள்கைவிளக்க அணிச் செயலாளருமான ஆ.வந்தியத்தேவன், தணிக்கைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன், தீர்மானக்குழுச் செயலாளர் கவிஞர் மணிவேந்தன், மகளிர் அணி மாநிலச் செயலாளர் மல்லிகா தயாளன், சிறுபான்மை அணிச் செயலாளர் அம்பத்தூர் ஜெ.சிக்கந்தர், இலக்கிய அணிச் செயலாளர் செயலாளர் காரை செல்வராஜ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், கழகத் தோழர்களும் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்.
தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
07.08.2023