முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / சிங்கப்பூர் 9 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு வைகோ வாழ்த்து

சிங்கப்பூர் 9 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு வைகோ வாழ்த்து

September 2, 2023 by Admin in அறிக்கைகள்

சிங்கப்பூர் 9 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு வைகோ வாழ்த்து

நேற்று 1.9.2023 நடைபெற்ற சிங்கப்பூரின் 9 ஆவது அதிபர் தேர்தலில் 66 வயதுடைய தமிழர் தர்மன் சண்முக ரத்னம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஏறத்தாழ 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான தர்மன் சண்முக ரத்னம் ‘லண்டன் °கூல் ஆப் எக்னாமிஸி’ல் இளங்கலை பொருளாதாரம் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வொல்ப்சன் கல்லூரியில் முதுகலை பொருளாதாரம் (தத்துவம்) பட்டமும், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் (MPA) பெற்றவர் ஆவார்.

ஆளும் மக்கள் செயல் கட்சியில் (PAP) சேர்ந்து, 2001 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னம் அவர்கள், 2001 முதல் 2019 வரை துணை பிரதமராகவும், 2019 முதல் 2023 வரை மூத்த அமைச்சராவும் இருந்து கல்வி, நிதி, மனிதவளம், சமூக கொள்கை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.

2011 முதல் 2023 வரை ‘சிங்கப்பூரின் நாணய ஆணைய’த்தின் தலைவராகவும், 2019 முதல் 2023 வரை ‘சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு கழக’த்தின் (Deputy Chairman of the Government of Singapore Investment Corporation-GIC) துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

தர்மன் சண்முக ரத்னம் அவர்கள் 2001ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஜூரோங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்துள்ளார்.

ஏற்கனவே தமிழர் எ°. ஆர். நாதன் அவர்கள் சிங்கப்பூரின் அதிபராக பதவி வகித்து சிறப்பு செய்துள்ளார். அந்த வரிசையில் தர்மன் சண்முக ரத்னம் வெற்றி உலக நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

சிங்கப்பூர் நாட்டில் சீனர்கள், மலாய் காரர்கள், இந்தியர்கள் என பல்வேறு இனத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு சீனம். மலாய். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகள் ஆட்சி மொழிகளாக உள்ளன.

உலக அரங்கில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் சிங்கப்பூர் அரசுக்கு ஒரு தமிழர் மீண்டும் அதிபராக வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
02.09.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
ஒரேநாடு- ஒரே தேர்தல்: இந்துராஷ்டிர செயல் திட்டம் வைகோ கண்டனம்
Next Post
ஆசிரியர் நாள்: வைகோ வாழ்த்து

Related News

சங்கொலி 06.10.2023
September 29, 2023 by Admin
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மறைவு! வைகோ இரங்கல்
September 28, 2023 by Admin
மீலாது நபி திருநாள் – வைகோ வாழ்த்து
September 27, 2023 by Admin