முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / ஆசிரியர் நாள்: வைகோ வாழ்த்து

ஆசிரியர் நாள்: வைகோ வாழ்த்து

September 4, 2023 by Admin in அறிக்கைகள் வாழ்த்துக்கள்

ஆசிரியர் நாள்

வைகோ வாழ்த்து

மாணவர்களின் உயர்வுக்கும், சமுக உயர்வுக்கும், நாட்டின் உயர்வுக்கும் பாடுபடும் ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேனாள் இந்தியக் குடிஅரசுத் தலைவர் தத்துவ மேதை டாக்டர் ராதாகிருட்டிணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாளை, ஆசிரியர் நாளாக 1962 ஆம் ஆண்டு முதல் கொண்டாடி வருகிறோம்.

நாட்டின் எதிர்கால செல்வங்களான இளம் பிஞ்சுகளை, மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரையில் கல்வி புகட்டி, வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை ஊட்டி வளர்த்து, தங்களுடைய தன்னலமற்ற பணியால், சேவையால்ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கல்வி புகட்டி வருகின்றனர்.

கல்வி மட்டுமே அனைவரையும் கரை சேர்க்கும் கருவியாக இருக்கின்றது.

எனவேதான் ஆசிரியர் சமூகத்திற்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் அளிப்பதில் மக்கள் பேரூவகை கொள்கின்றனர்.

மாறிவரும் உலக மயச் சூழலில், கல்வி வணிகப் பொருளாக ஆக்கப்பட்டு வரும் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது.

ஆசிரியர் பணி என்பது சமூக மறுமலர்ச்சிக்கும், நாட்டின் எதிர்காலத்திற்குமான சிறந்த பணி ஆகும். பல இன்னல்களைத் தாங்கி, தன்னலம் பேணாமல் தகைசால் பணியாற்றி, சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வரும் ஆசிரியர் சமுதாயத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

‘தாயகம்’                                                              வைகோ
சென்னை – 8                                     பொதுச்செயலாளர்
04.09.2023                                         மறுமலர்ச்சி தி.மு.க.,

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
சிங்கப்பூர் 9 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு வைகோ வாழ்த்து
Next Post
இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி! வைகோ கண்டனம்

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin