முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / பிரிட்டன் கடற்படை கைது செய்த தமிழக மாவட்ட மீனவர்களை மீட்க வேண்டும் வைகோ வேண்டுகோள்

பிரிட்டன் கடற்படை கைது செய்த தமிழக மாவட்ட மீனவர்களை மீட்க வேண்டும் வைகோ வேண்டுகோள்

October 6, 2023 by Admin in அறிக்கைகள்

பிரிட்டன் கடற்படை கைது செய்த
தமிழக மாவட்ட மீனவர்களை மீட்க வேண்டும்

வைகோ வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியை சேர்ந்த மீனவர்கள், 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம்.

கடந்த மாதம் செப்டம்பர் 15 ஆம் தேதி தேங்காய்பட்டினம் துறைமுகத்திலிருந்து சின்னத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மைன் பாஸ்டினுக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் சின்னத்துறை, தூத்தூர் ரவிபுத்தன் துறையைச் சேர்ந்த 28 மீனவர்கள், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 2 இருவர் என 32 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடந்த 27 ஆம் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி பிரிட்டன் கடற்படையினர் 32 மீனவர்களையும் சிறைபிடித்து, இந்தியப் பெருங்கடலில் இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான டீகோ கார்சியா தீவுக்குக் கொண்டு சென்று, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்துகொண்டனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல், அவர்களின் குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது. கவலை அடைந்த அவர்கள் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டீகோ கார்சியா தீவில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது இரண்டு படகுகளையும் மீட்டு இந்தியா கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
06.10.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு; மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று அறிவிப்பு வைகோ கண்டனம்
Next Post
கடலியல் வரலாற்று ஆய்வாளர் ஒடிசா பாலு மறைவு! வைகோ இரங்கல்

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin