முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை

December 5, 2023 by Admin in அறிக்கைகள் மாநிலங்களவை உரைகள்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட
தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்

நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை

இன்று 05.012.2023 நடைபெற்ற நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அவர்கள் கோரிக்கை எழுப்பினார். அவரது உரை வருமாறு:-

இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். சுமார் 800 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் படகுகள், சேதப்படுத்தப்பட்டு, மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டன.

பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, படகுகளைக் கைப்பற்றி, சேதப்படுத்திய செயல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.

இலங்கை அரசு, தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றி ஏலத்தில் விடுகின்றது. அண்மைக் காலமாக இது தொடர் கதையாகிவிட்டது.

சில நாட்களுக்கு முன்பு, இலங்கைக் கடற்படையினரால் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டமீனவர்களையும் அவர்களது படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க இந்திய ஒன்றிய அரசும், வெளியுறவுத்துறை அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இலங்கை அரசிடம், இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அடிக்கடி தமிழக மீனவர்களை படகுகளைக் கைப்பற்றியும், கைது செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறது.

இலங்கைக் கடற்படையினரால் இடைவிடாத துன்புறுத்தலுக்கு ஆளாகும் நம் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தலைமை நிலையம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை – 8
05.12.2023

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் உடனே செயல்பட ஆவன செய்க! ஒன்றிய அரசுக்கு வைகோ வேண்டுகோள்
Next Post
மிக்ஜம் புயல் மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழகத்திற்கு தேவையான உதவிகளைச் செய்திடுக! பொருளாதார நிலை குறித்த விவாதத்தில் வைகோ

Related News

சங்கொலி 20.06.2025
June 13, 2025 by Admin
சங்கொலி 13.06.2025
June 6, 2025 by Admin
சங்கொலி 06.06.2025
June 3, 2025 by Admin