தலைமைக் கழக அறிவிப்பு
தலைமைக் கழக அறிவிப்பு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. புதுக்கோட்டை பி. செல்வம் அவர்கள் தனது சொந்த காரணங்களுக்காக தாம் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ஆர்.எஸ். இரமேஷ் அவர்கள் இன்று முதல் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழக நிர்வாகப் பொறுப்புக்களையும் கவனித்துக் கொள்வார்.
மேற்கண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூர்க் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் திரு. ஆர்.எஸ். இரமேஷ் அவர்களுடன் தொடர்பு கொண்டு கழகப் பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வைகோ பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
சென்னை –
‘தாயகம்’
21.03.2024