முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / இரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு! வைகோ கண்டனம்

இரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு! வைகோ கண்டனம்

March 30, 2024 by Admin in அறிக்கைகள்

இரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு மறுப்பு!

வைகோ கண்டனம்

2021 ஆம் ஆண்டுக்கு முன்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் தபால் வாக்கு வழங்கும் முறை இருந்தது.

மற்ற அத்தியாவசிய பணியில் இருப்போர்க்கு தபால் வாக்கு என்பது இல்லை.

2021 ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையம் அத்தியாவசிய பணியில் இருக்கும் இரயில்வே தொழிலாளர்களுக்கு, தபால் வாக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில், ஒன்றியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் ஒவ்வொரு மாநிலம் வாரியாக எந்த எந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தபால் வாக்குரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த இரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் பணி புரியும் இரயில்வே ஊழியர்களுக்கு இந்த தபால் வாக்குரிமை வழங்கப்படவில்லை.

இந்த அறிவிப்பின்படி, தேர்தல் நாளன்று பணிபுரியும் ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்கள், வண்டி மேலாளர் மற்றும் ஓடும் இரயிலைச் சார்ந்து பணி புரியும் அனைத்து ஊழியர்களும் தங்களது வாக்குகளை முழுமையாக செலுத்த இயலாது என்பது மிகவும் பின்னடைவாகும்.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தமிழக இரயில்வே ஊழியர்கள் தபால் வாக்களிக்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பானை ஒருதலைப்பட்சமானது. கண்டனத்துக்குரியது.

இது இரயில்வே ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருகில் உள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பணிபுரியும் இரயில்வே ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரயில்வே ஊழியர்கள் வாக்களிக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

தமிழகத்தில் மற்ற பிற பொதுத் துறை நிறுவனங்கள் தபால் வாக்கு செலுத்த உரிமை உள்ள நிலையில் தமிழக இரயில்வே தொழிலாளிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே தேர்தல் ஆணையம் இது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஒன்றிய தேர்தல் ஆணையம் தமிழக இரயில்வே ஊழியர்களுக்கும் தபால் வாக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’                                                                                                                                 வைகோ
சென்னை – 8                                                                                                             பொதுச் செயலாளர்,
30.03.2024                                                                                                                    மறுமலர்ச்சி தி.மு.க

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
ஈஸ்டர் வாழ்த்து - வைகோ
Next Post
பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்

Related News

சங்கொலி 06.02.2026
January 31, 2026 by Admin
சங்கொலி 23.01- 30.01.2026
January 23, 2026 by Admin
சங்கொலி 16.01.2026
January 10, 2026 by Admin