முன்னேறி செல் ! அதிகாரத்தை கைப்பற்று !!
மதிமுக | மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
  • கழகம்
    • கொள்கைகள்
    • வரலாறு
    • தலைமை கழகம்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • அணிகள்
  • சாதனைகள்
  • வெளியீடுகள்
    • சங்கொலி
    • செய்திகள்
    • அறிக்கைகள்
    • நிகழ்ச்சிகள்
    • காணொளி
    • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • நன்கொடை
உறுப்பினராக
  • Home
  • /
  • அறிக்கைகள்
  • / விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி! வைகோ வாழ்த்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி! வைகோ வாழ்த்து

July 13, 2024 by Admin in அறிக்கைகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி!

வைகோ வாழ்த்து

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு நடடைபெற்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை ஈட்டி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சரித்திரம் படைத்தது.

திமுக அரசின் மீது முன்வைக்கப்பட்ட வன்மம் கலந்த அவதூறுகள் பொடிப் பொடியாக்கப்பட்டு, தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெற்று இருக்கிறார்.

இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை வழி நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையின் மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தொடர் வெற்றிகள் பறை சாற்றுகிறது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மற்றும் தேர்தல் களத்தில் வெற்றிக்கனியை பறிக்க உழைத்த திமுக கூட்டணி தோழர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
‘தாயகம்’
சென்னை – 8
13.07.2024

Share this:
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • Pinterest
  • Email to a Friend
Previous Post
மதுவிலக்கு சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல்! வைகோ வரவேற்பு
Next Post
தினமலர் இட்டுக்கட்டிய பொய் செய்தி! வைகோ கண்டனம்

Related News

சங்கொலி 04.09.2026
August 28, 2026 by Admin
சங்கொலி 28.08.2026
August 22, 2026 by Admin
சங்கொலி 21.08.2026
August 22, 2026 by Admin